இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள் Jeffersonville, Indiana, USA 63-1110M 1நம்முடைய தலைகளை சற்று நேரம் வணங்குவோம். பரலோகப் பிதாவே, இன்று நாங்கள் மீண்டும் ஒருமுறை இங்கு கூடியிருப்பதற்கு கிடைத்த சிலாக்கியத்திற்காக உமக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நாங்கள் எங்களுடைய சாவுக்கேதுவான இந்த சரீரத்தில் என்றாவது ஒருநாள் கடைசி முறையாக இங்கே கூடுவோம் என்றும், அதன் பிறகு உம்முடனே மகிமையின் சரீரத்தில் கூடுவோம் என்றும், எல்லாக் காலங்களிலும் மீட்டுக்கொள்ளப்பட்ட எல்லோருமே அங்கே கூடுவார்கள் என்றும் அறிந்திருக்கிறோம். ஓ, அந்த மகத்தான வேளை எப்பொழுது வரும் என்று எதிர் பார்த்துக் கொண்டே எங்களுடைய இதயம் துடிக்கிறது. அவ்வித நம்பிக்கையினால் எங்களுடைய எல்லா பயங்களுமே ஒழிந்து போகிறது. எங்களுக்கு எவ்வித பயமும் அச்சமும் இல்லை. நித்திய தேவன் எங்களுக்கு வாக்குரைத்தது சத்தியம் என்று நாங்கள் அறிந்து அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே தான் நாங்கள் ஜீவிக்கிறோம். அந்த மணிவேளைக்கென்றே நாங்கள் ஜீவிக்கிறோம். எங்களுடைய இந்த சாவுக்கேதுவான சரீரம் மாறும்பொழுது, நாங்கள் அவரைப் போலாகி, வியாதி, வருத்தம், மனவருத்தம் எதுவுமே அங்கே இல்லாமலிருப்போம். 2ஓ, அப்பொழுது எல்லாமே ஒழிந்துவிடும். சந்தோஷம் நிறைந்த இருதயத்தோடும், விசுவாசத்தோடும், உற்சாகத்தோடும் நாங்கள் அந்த நாளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆகையால் தான் நாங்கள் எங்களுடைய குற்றங்களை அறிக்கை செய்து உம்முடைய இரக்கத்தைப் பெற இன்று இங்கே கூடியிருக்கிறோம், கர்த்தாவே, நாங்கள் சாவுக்கேதுவானவர்கள் என்றும், எங்களிடம் நிறைய தவறுகளும், குற்றங்களும் உண்டு என்றும் அறிந்திருக்கிறோம். ஆகையால் தான், நாங்கள் இன்று காலையில் பீடத்தை நோக்கி வந்திருக்கிறோம். முதலில் எங்களுடைய தவறுகளை அறிக்கைசெய்து, அதன்பிறகு எங்களுடைய பெலத்தையும், விசுவாசத்தையும் புதுப்பித்து ஆசீர்வதிக்கும்படி, முழு இருதயத்தோடு எங்களுடைய பரலோகப் பிதாவை நாங்கள் நோக்கிப் பார்க்கிறோம். நாங்கள் கூடியிருக்கும் இந்த மணி வேளையில் உம்முடைய வாக்கின்படியே நாங்கள் உன்னதங்களில் கிறிஸ்து இயேசுவுடன் உட்கார்ந்திருக்கும்படி அருள்புரிவீராக. ஏனெனில் நாங்கள் மரணத்தைக் கடந்து ஜீவனை அடைந்து விட்டோம். அவருடைய வாக்குத்தத்தத்தினால் நாங்கள் பரலோகத்தின் உன்னத சூழ்நிலைக்கு உயர்த்தப்பட்டு இப்பொழுது அவரோடே கூட உட்கார்ந்திருக்கிறோம். நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவர் விரும்பும் காரியங்களை இன்று காலையில் அவர் எங்களுக்குப் போதிப்பாராக. எங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள எதிர்காலத்தில் நாங்கள் உறுதியோடே நிலைத்திருப்பதற்கு தேவையான ஜீவ அப்பத்தை எங்களுக்குத் தாரும். கர்த்தாவே, அதை அருள்வீராக. அதுவே எங்கள் ஜெபமாயுள்ளது. இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நீங்கள் உட்காரலாம். 3ஒவ்வொருவருக்கும் என்னுடைய காலை வணக்கம். உன்னத சூழ்நிலையில் நிகழும் இந்த ஆராதனையில், மீண்டும் உங்களோடு கூடியிருப்பது மிகவும் அருமையானது - சற்று தாமதமாகிவிட்டது. சில நிமிடங்களுக்கு முன்னால் மிகவும் வேதனை தரும் சில தொலைபேசி அழைப்புகள் எங்களுக்கு வந்தன. நான் இங்கு நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக கர்த்தர் அங்கே மரித்துக் கொண்டிருந்த ஒரு சிறு பையனுடைய சரீரத்தைத் தொட்டு, அவனை பயணம் மேற்கொள்ளச் செய்தார். அவன் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனின் மகன், அவன் இங்கே இருக்கிறான். அவர்கள் பிறவியில் கத்தோலிக்கர்கள். இன்று காலையில் அவர்கள் பூசைக்கு (Mass) போயிருந்த போது, ஏதோ ஒன்று அவர்களை இங்கே போகும்படி சொல்லியது. ஆகையால் அவர்கள்... ஒரு மாற்றம் அவர்களில் நிகழ்ந்துவிட்டது. ஆகையால் அவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள ஆயத்தப்பட வீட்டுக்கு வருகிறார்கள். எப்பொழுதுமே கர்த்தர் அருமையான காரியங்களைச் செய்து வந்திருக்கிறார். அவர் தொடர்ந்து கிரியை செய்து கொண்டே வருகிறார். அவர்கள் உள்ளே வர முயற்சித்தார்கள். அவர்களால் உள்ளே வர முடியவில்லை, “உள்ளே வர ஒரு வழியும் இல்லை'' என்று அவர்கள் சொன்னார்கள். 4''நல்லது, நீங்கள் என்னுடன் பேச விரும்புகிறீர்களா?'' என்று நான் கேட்டேன். “என் வீட்டிற்கு வாருங்கள், அங்கே அதைப் பற்றி பேசுவோம்'' என்று சொன்னேன். வரப்போகும் கூட்டத்திற்கு நியூயார்க்கு செல்லும் வழியில்... அது மிகவும் அருமையாயிருக்கும் என்று எண்ணினேன். இங்கு வந்து நீங்கள் பெற்றிருக்கும் அதே அக்கினியினால் என் நெருப்பை பற்ற வைத்தால், எனக்கு புத்துணர்ச்சி உண்டாகுமென்று எண்ணினேன். இங்கு ஒரு நாள் தங்கினோம். இன்று காலை இங்கு வந்திருக்கிறேன். நேற்றைய முன்தினம் பிற்பகல் நாங்கள் இங்கு வந்து சேர்ந்தோம். 5நாங்கள் புறப்பட வேண்டும்... இன்று பிற்பகல் நான் புறப்படலாம் என்று நினைத்தேன். ஆனால் நாளை போகலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் அதிகாலையில் புறப்பட்டால், இங்கிருந்து நியூயார்க் போகும் வழியில் ரஸ்தா முழுவதிலும் பனி கொட்டும். மலைப் பிரதேசங்களின் வழியாகவும், அலெகனீஸ் வழியாகவும் அதற்கு கீழுள்ள அடிரன்டாக்ஸ் வழியாகவும் நான் விர்ஜீனியாவுக்குப் போகிறேன். 6ஆகையால் நாங்கள் பயணத்தை தொடங்குவோம். அங்கே ஒரு புதிய அரங்கம் இருப்பதை மறந்துவிட்டோம். அவர்கள் பழைய நிக்கோலாஸ் அரங்கத்தை இடித்துவிட்டு, இந்த புதிய அரங்கத்தை கட்டியிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். எனக்குத் தெரிந்தவரையில், முதல் சில இரவுகள் எனக்கு கூட்டம் இருக்கும். அதற்காக பெரிய நியூயார்க் பெந்தெகொஸ்தே ஜனங்களுக்கு நாங்கள் நன்றியுடையவர்களாய் இருக்கிறோம். அநேக சபைகள் ஒத்துழைக்கின்றன என்று நினைக்கிறேன். ஒரு மகத்தான தருணத்தை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், நாங்கள் அடுத்த வாரத்தில் எப்பொழுதாவது திரும்பி வருவோம். கர்த்தருக்கு சித்தமானால், ஞாயிறு காலை ஆராதனைக்காக இங்கே தங்கிவிடுவோம் என்று நம்புகிறேன். நான் வழக்கமாக செய்வது போல், நமது போதகரின் நேரத்தில் நுழைந்துவிட்டேன். நான் நினைத்தேன் ஒருவேளை... நான் கேட்காமலேயே வந்துவிட்டேன். பட்டினத்திலிருந்து அநேக அருமையானவர்கள் இங்கு வந்திருப்பதை காண்கிறேன். ஒரு வேளை போதகருக்கு விசேஷமான எதுவும் இல்லையென்றால், நாம் ஒரு சிறு ஆராதனையை இன்றிரவு நடத்திவிட்டு, வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம் என்று நினைத்தேன். (சகோதரன் நெவில் மற்றும் சபையார் களிகூறுகின்றனர் - ஆசி.) நன்றி. 7தெய்வீக சுகமளித்தலின் பேரில் பிரசங்கம் நிகழ்த்திவிட்டு இன்றிரவு வியாதியஸ்தருக்காக ஜெபிக்கலாம் என்று நினைக்கிறோம். சீக்கிரமாக ஆரம்பித்தால், நாம் சீக்கிரமாகவே முடித்து விடலாம். போதகருக்கு விருப்பமானால்... என்ன... நீங்கள் வழக்கமாக 7.30 மணிக்கு தான் ஆரம்பிக்கிறீர்கள். அது சரிதானா? இன்றிரவு 7.00 மணிக்கே ஆரம்பிக்கலாமா? (சகோ. நெவில் ''ஆமென்“ என்கிறார் - ஆசி.) அப்பொழுது 7.30 மணிக்கெல்லாம் என்னை பிரசங்க பீடத்தில் அனுமதிக்கலாமல்லவா? அதற்கு சம்மதமானால், நான் 8.00 அல்லது 8.30 மணிக்கெல்லாம் முடித்து விடுவேன். எனவே ஜனங்கள் திரும்பி செல்வதற்கு நேரமிருக்கும். நான் “8.00 அல்லது 8.30 மணி'' என்று சொன்னவுடனே நீங்கள் எல்லோரும் சிரிக்கிறீர்கள். 8.30 மணிக்கெல்லாம் முடித்து விடலாம் என்று நம்புகிறேன். வியாதியஸ்தருக்காக ஜெபிக்க எப்பொழுது ஏவப்படுவோம் என்று நமக்கு ஒருபோதும் தெரியாது. சென்றமுறை நாங்கள் இங்கு வந்துவிட்டு போனதிலிருந்தே, எங்களுக்கு ஒரு மகத்தான சமயம் இருந்து வருகிறது. அநேக பெரிய காரியங்களில் கர்த்தர் எங்களை ஆசீர்வதித்துள்ளார். இன்றிரவு, கர்த்தருக்கு சித்தமானால், சில வாரங்களுக்கு முன்னால் கர்த்தர் என்னை கொலராடோவில் சந்தித்ததைப் பற்றி சொல்ல வாஞ்சிக்கிறேன்; அதைப் பற்றித்தான் பேச நினைக்கிறேன். இன்றிரவு வியாதியஸ்தர்களுக்கும், துன்பப்படுகிறவர்களுக்கும் சுகமளிக்கும் ஆராதனை ஒன்றை நடத்த, அவர்களுடைய விசுவாசத்தை ஊக்குவிக்க, இப்பொழுது பேச விரும்புகிறேன். 8இன்று காலை ஆராதனைக்கென ஒரு மாதத்திற்கு முன்பு ஏதோ ஒன்று என் இருதயத்தைத் தொட்டது. அது ஒருவேளை... நான் நினைக்கிறேன்... அவர்கள் இதை ஒலிப்பதிவு செய்கிறார்களா? சரி. இந்த ஒலிநாடாக்கள் மற்றவர்களுக்கு எங்கெல்லாம் போகிறது என்று நான் அறிந்து கொள்ள முடியும். இன்று காலையில் நான் பேசப் போவது - அது என்னால் சொல்ல முடியாது... அது சரியென்று எனக்குத் தெரியும். செய்தியின் பாகம் சரியாயிருக்கும், ஆனால் நான் செய்ய விரும்பும் காரியம் என்னவெனில், என் மனதில் எழுந்துள்ள கேள்வியே, அது மிகவும் உண்மையானதாய் காணப்படுகிறது. ஆயினும் நான் உள்ளே வந்த முதற்கு, அது எனக்கு வெளிப்பட்ட முதற்கொண்டு, நான் ஜனங்களிடம் தவறான ஒன்றைச் சொல்லி, தவறானதொன்றை அவர்கள் மனதில் பதிய வைத்து விடுவேனோ என்று ஐயமுறுகிறேன். அது ஒரு... ஆகவே நான்... 9நான் பேச வேண்டியதை எழுதிவைத்துள்ள குறிப்புகளில் - அதை மிகவும் பலமாக செய்துவிடாமல் இருப்பதற்காக - சில பாகங்களை கூறாமல் விட்டுவிடலாமென்று நினைக்கிறேன். ஏனெனில் பாருங்கள், ஒருவன்... நான் தேவனாகிய கர்த்தரை நேசிக்கிறேன். அவரை நேசிக்கிறேன் என்று நான் அறிந்து கொள்ளக்கூடிய ஒரேவழி, உங்களை நான் நேசிப்பதே. அந்த ஒரு வழியில் மாத்திரமே நான் அறிந்து கொள்ள முடியும். எனக்கு வெளிப்படுத்தப்பட்டதும், உங்களுக்கு சொல்ல வேண்டியதுமான காரியங்களை உங்களுக்கு சொல்லாமலிருக்க நான் விரும்பவில்லை. நான் சிலவற்றை சிறிது பலமாக சொல்லிவிட்டால், அது ஒரு சிலரை புண்படுத்திவிடும் என்று பயப்படுகிறேன். உங்களுக்குத் தெரியும் அது. நீங்கள் பிரசங்க மேடைக்கு வந்து நீங்கள் சொல்ல நினைக்கிறவைகளைக் குறித்து ஏவப்பட்டு, அதை சொல்ல வேண்டும். அவ்வளவு தான். சில சமயங்களில், நீங்கள் ஏதாவதொன்றை சொல்வீர்கள், சிலர் அதற்கு வேறு விதமாக அர்த்தம் கொடுத்து, அந்த வழியே சென்று விடுகிறார்கள். சிலர், “இதுதான் அதன் அர்த்தம்” என்று சொல்லுவார்கள், பாருங்கள். 10ஆனால், நான் உங்களிடம் கூறப்போவது, ஊகித்துக் கூறுதல் (presuming) என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன். 'ஊகம்' என்றால் ''அதிகாரமின்றி துணிந்து கூறுதல்'' (venture without authority) என்று அர்த்தம். ஆகையால் நான்... இது உண்மை என்று நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் இதை சீர்தூக்கிப் பார்த்து, அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறியவே, இந்தக் கருத்தை உங்கள் முன் வைக்க முற்படுகிறேன். அது... நிச்சயமாக அது வேதப்பூர்வமானது என்பது உண்மையே. ஏனெனில் வேதத்துக்கு விரோதமான எதையும் நான் பிரசங்கிக்க மாட்டேன். ஆனால் அந்த மணிநேரம் இனிமேல் வரவிருக்கிறதா? அல்லது அந்தக் காரியம் இந்த மணிவேளையில் வந்துவிட்டதா? இந்தக் காரியங்களெல்லாம் அதைத்தான் குறிப்பிடுகின்றனவா? அது அப்படி இருக்கக்கூடாது என்று என் முழு இருதயத்தோடும் ஜெபிக்கிறேன். அது சரியாக இருக்கக் கூடாது என்றும், அது அதுவாய் இருக்கக்கூடாது என்றும் ஜெபிக்கிறேன்... அது சம்பவிக்கப்போகிறது. ஆனால் அந்த மணிவேளை வந்துவிட்டதா? என்று நான் வியப்புறுகிறேன். அதைக் குறித்து எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் திட்டவட்டமாக புரிந்து கொள்ளுங்கள். (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி.) நான் சற்று... இதுவா சமயம்? அப்படியானால், தேவனே, எங்கள் மீது இரக்கமாயிரும். ஆனால் இது அந்த நேரம் இல்லையென்றால் அது வரப்போகிறது. 11இப்பொழுது, நம்மால் எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ... எங்களுக்கு முன்னால் ஒரு பெரிய பயணத் திட்டம் உள்ளது- கர்த்தருக்குச் சித்தமானால். கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு நான் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும் - ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும்; முக்கியமாக ஐரோப்பாவுக்கு. அதன் பிறகு நான் சில ஆராதனைகளை நடத்துவதற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குத் திரும்பி வந்து, பிறகு தென் ஆப்பிரிக்காவுக்குப் போகிறேன். செப்டம்பர் 2-ம் தேதி டர்பனில் கூட்டங்களைத் தொடங்கி, அங்கு 10-ம் தேதி வரைக்கும் கூட்டங்கள் நடக்கும் என்று நினைக்கிறேன். பிறகு அங்கிருந்து ஜோஹனஸ்பர்க்கு செல்ல எனக்கு மூன்று நாட்கள் இருக்கின்றன. அங்கு மறுபடியும் கூட்டங்களைத் தொடங்குகிறேன். ஏப்ரல் மாதத்தில் நாங்கள் ஸ்காண்டிநேவியன் நாடுகளான நார்வே, ஸ்வீடனில் கூட்டங்கள் தொடங்குகிறோம் என்று நினைக்கிறேன். பிறகு பின்லாந்து, ஹாலந்து, ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள். எனவே எங்களுக்காக ஜெபியுங்கள். 12நமக்கு இங்கு சில கூட்டங்கள் உள்ளன - இது கிறிஸ்துமஸ் சமயம் - கிறிஸ்துமஸுக்குப் பிறகு நாங்கள் கிறிஸ்துமஸின் போது இங்கே - வீட்டில் இருக்க விரும்புகிறோம். பிள்ளைகளும் கிறிஸ்துமஸின் போது வீட்டிற்கு வர விரும்புகிறார்கள். நாங்கள் அரிசோனாவை நேசிக்கிறோம். ஆனால் எங்களுக்கு அங்கேயுள்ள குறையெல்லாம், இந்த சபையும், ஜனங்களாகிய நீங்களும் இல்லாதது தான். நாங்கள் எங்கே போனாலும் என்ன செய்தாலும்... பிள்ளைகள், நான், மனைவி எல்லோருமே இவ்விடத்தை நேசிக்கிறோம். இதைப்போன்ற வேறொரு இடம் இல்லவே இல்லை. நான் ஏழு கடல்களிலும் பயணம் செய்து எல்லாவிடங்களுக்கும் போயிருக்கிறேன், ஆனால் இந்த சிறிய ஸ்தலத்தைப் போன்ற ஒரு பரிசுத்தமான இடம் வேறு எங்குமே காணப்படவில்லை. நீங்கள் வேண்டுமானால் ஒரு முறை இங்கிருந்து. வேறு எங்காவது போய்பாருங்கள்... இந்த இடத்தில் ஏதோ ஒன்றுள்ளது. நான் அநேகமாக உலகம் முழுவதிலும் பிரசங்கித்திருக்கிறேன். ஆனால் ஒரு முறையாவது, நம்மிடையே தேவனுடைய ஆவியை நாம் உணருவது போல் - இப்பொழுது, நான் இங்கு நின்றுகொண்டு உணருவதுபோல் - வேறெங்கும் உணர்ந்ததில்லை. அது உண்மை. தேவனே. இது நிலைத்திருக்கட்டும். அன்று நான் மூலைக்கல்லை நாட்டின் போது, ''தேவனாகிய கர்த்தாவே, அது விழுந்து போக அனுமதியாதேயும்'' என்று ஜெபித்தேன். ஜனங்கள், “இது இரண்டு மாதங்களுக்குள் மோட்டார் வண்டிக் கொட்டகையாக மாறிவிடும்'' என்று சொன்னார்கள். நான், ''கர்த்தாவே, இது விழுந்து போக அனுமதியாதேயும். அது நிலைத்து நின்று, இயேசு மறுபடியும் வரும் போது ஜனங்கள் இங்கு துதித்துக் கொண்டிருக்கட்டும்'' என்று ஜெபித்தேன். அது அவ்வாறே நிலைத்திருக்குமென்று நம்புகிறேன். 13இப்பொழுது நாம் நம்முடைய வேதாகமத்தைத் திருப்பி, கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை நமக்கு அருளிச் செய்ய, அவரை எதிர்நோக்குவோம். நாங்கள் சில வேத வாக்கியங்களை வாசிக்க விரும்புகிறோம். நான் இங்கே சில வேத வாக்கியங்களை எழுதி வைத்திருக்கிறேன். அவைகளைக் குறிப்பிட விரும்புகிறேன் - சில குறிப்புகளும் கூட, நான் வேதாகமத்திலிருந்து மூன்று பகுதிகளை வாசிக்க விரும்புகிறேன். முதலில் அந்த வசனங்களை உங்களிடம் சொல்லுகிறேன். யூதா: 5, 6-ம் வசனங்களை வாசிக்க விரும்புகிறேன். யூதா ஒரே அதிகாரம் தான் என்பது உங்களுக்குத் தெரியும். அதன் பிறகு 2பேதுரு 2:4-5. பிறகு 1பேதுரு 3:18-20-ஐ வாசிக்க விரும்புகிறேன். இன்று காலை, கர்த்தருக்குச் சித்தமானால், என்னுடைய பொருள். “இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள்” என்பதே. ''இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள்'' அடைக்கப்பட்டு, என்றென்றைக்கும் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டு ஒருபோதும் இரட்சிப்படைய வழியில்லாதவர்கள். ''இப்பொழுது காவலில் இருக்கின்ற ஆத்துமாக்கள்.'' 14இப்பொழுது நாம் முதலில் யூதா புத்தகத்திலிருந்து வாசிப்போம், முதலாவதாக நான் யூதாவிலுள்ள பாகத்தைக் குறித்து வைத்திருக்கிறேன், பிறகு 2 பேதுருவிலுள்ளது, பிறகு 1பேதுரு. இப்பொழுது யூதா நிரூபம் - அதை முழுவதுமே வாசிக்க எனக்குப் பிரியம், ஆனால் சமயத்தை சுருக்க, ஏனெனில் ஏற்கனவே 10-30 மணி ஆகிவிட்டது, நான் நம் வசனத்திலிருந்து தொடங்கப் போகிறேன். யூதா இயேசுகிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையாகிய யோசேப்பின் குமாரன். அது நம்மெல்லோருக்கும் தெரியும். அவன் யோசேப்பின் குமாரன். ''நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிற தென்னவெனில்,கர்த்தர் தமது ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.'' முதலில் இரட்சித்து - எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, பின்பு அவர்களை அழிக்க வேண்டியதாயிருந்தது. ஏனெனில் அவர்களுடைய செய்தியில் அவர்கள் தொடர்ந்திருக்கவில்லை. பார்த்தீர்களா? ''தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்“ ஒருகாலத்தில் பரலோகத்தில் தங்கியிருந்த தூதர்கள், தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல் தங்களுடைய வாசஸ்தலத்தை விட்டுவிட்டு, இப்பொழுது நித்திய அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டப்பட்டிருக்கிறார்கள்... நித்திய அந்தகாரச் சங்கிலிகளினால். மகாநாளின் நியாயத்தீர்ப்பு வரைக்கும் அவர்கள் இந்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்நாளில் அவர்கள் மற்ற அவிசுவாசிகளோடே நியாயந்தீர்க்கப்படுவார்கள். 15இப்பொழுது 2பேதுரு 2ம் அதிகாரம், 4ம் வசனம் தொடங்கி. அது யூதா நிரூபத்திற்கு ஒன்று அல்லது இரண்டு புத்தகங்கள் முன்னால் இருக்கும். “பாவஞ் செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல் அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின் மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி [தேவ தூதர்களை தப்பவிடாமல்அவர்களை அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்ட , நோவாவின் காலத்தில் ஏற்பட்ட அழிவினால் முழு உலகத்தையுமே ஆக்கினைக்குள்ளாக தீர்த்தார்.] 16இப்பொழுது 1பேதுருவும் அதிகாரம், 18ம் வசனம் தொடங்கி நாம் மறுபடியும் படிப்போம். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ஏனெனில், கிறிஸ்துவும் நம்மை தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒரு தரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் (காவலிலுள்ள இந்த ஜனங்களுக்கு அவர் பிரசங்கித்தார்) அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்த போது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர் மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப் பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவ தூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. நாம் மறுபடியும் ஜெபிப்போம்: 17பரலோகப் பிதாவே, இங்கு இப்படிப்பட்ட தொடர்ச்சியான வேதபாகங்கள் - மூன்று சாட்சிகள். மூன்று இடங்களில் வேதவாக்கியங்கள் சாட்சி கொடுக்கின்றன. ''இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் உம்முடைய வார்த்தை நிலைவரப்படும்'' என்று நீர் வேதத்தில் சொல்லியிருக்கிறீர். ஓ தேவனே, நீர் ஜனங்களிடத்தில் வந்து இந்த வார்த்தையை - இந்த செய்தியை - அது எந்தவிதத்தில் அளிக்கப்பட வேண்டுமோ, அந்த விதத்தில் வியாக்கியானப்படுத்திக் கொடுத்து, ஒவ்வொரு மனிதனும், ஸ்திரீயும், பையனும், பெண்ணும் நீர் அவர்களுக்கு அளித்துள்ள புரிந்து கொள்ளுதலின் தகுதிக்கேற்ப அதைப் புரிந்துகொள்ள அருள்புரியுமாறு ஜெபிக்கிறேன். இந்த மூன்று சாட்சிகளும் சத்தியத்துக்கு சாட்சியாயுள்ளன என்பதை அறிந்திருக்கிறேன், இப்பொழுது எங்கள் மேல் பரிசுத்த ஆவியை அனுப்புமாறு ஜெபிக்கிறேன். இன்று காலை எங்கள் மத்தியிலிருக்கும் எங்கள் ராஜாவாகிய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நாங்கள் நோக்கிப் பார்க்கிறோம்.இப்பொழுது நாங்கள் விசுவாசத்தினாலே உயர்த்தப்பட்டு, உன்னதங்களிலே அவரோடு கூட உட்கார்ந்திருக்கிறோம். அவருடைய செய்திக்காக காத்திருக்கிறோம். ஆண்டவரே, அதை எங்கள் மூலமாய் பேசும், எங்கள் மூலமாய் அதை கேளும், பேசுகிற உதடுகளையும் கேட்கிற செவிகளையும் நீர் விருத்தசேதனம் செய்து, வேதாகமமாக இருக்கும் அவருடைய கனத்துக்கும் மகிமைக்கும் அது இருக்கும்படியாக உம்மை வேண்டிக்கொள்கிறோம். அவருடைய நாமத்திலே இதைக் கேட்கிறோம். ஆமென். 18இன்றிரவு நடக்கப்போகும் சுகமளிக்கும் ஆராதனையை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஜெப அட்டைகளை விநியோகிக்க அவசியமில்லையென்று நினைக்கிறேன், நாம் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்போம். ஒரு காரியத்தை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். அது எல்லாவிதமான சுகமளித்தலையும் அளிக்கும் நிலைக்கு சபையோரைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன். அந்த விதமாக நாம் விசுவாசிப்போமானால், அது அப்படியே ஆகும் என்று நானறிவேன். இப்பொழுது, “இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள்''... ”இப்பொழுது காவலிலுள்ள ஆத்துமாக்கள்'' 19இப்பொழுது, மனிதனுடைய ஆத்துமாவானது மனிதனுடைய சரீரம் அல்ல, அது ஆத்துமா. பாருங்கள். ஆத்துமாவானது என்னவென்றால், அது மனிதனுடைய தன்மை... அவர், “நாம் மரித்தோம்” என்று சொன்னார். நாம் மரித்தோம் என்றும், நமது ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்து, அது பரிசுத்தாவியினாலே அங்கு முத்தரிக்கப்பட்டிருக்கிறது என்றும் வேதம் தெளிவாய் நமக்குச் சொல்லுகிறது. உங்களுடைய சரீரம் மரித்துப் போகவில்லை. உங்கள் ஆவி மரித்துப் போகவில்லை. உங்கள் ஆவியின் தன்மை தான் மரித்துப் போனது, பாருங்கள். தன்மை, அது ஆத்துமா. நீங்கள் மறுபடியும் பிறந்திருந்தால், உங்கள் ஆத்துமாவின் தன்மை தேவனாயிருக்கும். இல்லையென்றால், அது உலகத்தைப் பற்றியதாயிருக்கும். துவக்கமுடைய எதுவுமே முடிவு பெறவேண்டும். எனவே நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரே வழி. துவக்கமே இல்லாத ஜீவனைப் பெற்றுக் கொள்வதே. நீங்கள் பிறந்த போது, உங்கள் ஜீவன் தொடங்கினது. உங்கள் நாசியில் தேவன் ஜீவசுவாசத்தை ஊதி, நீங்கள். ஜீவ ஆத்துமாவான போது, அப்பொழுது தான் நீங்கள் தொடங்கினீர்கள். ஆனால் நீங்கள்... 20உங்களுக்குள்ளிருந்த தன்மை, சுபாவப்படி உலகத்தை சேர்ந்ததாயிருந்து, நீங்கள் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு அவருக்கு அந்நியராயிருந்தீர்கள். நீங்கள் உண்மையில் ஒரு மிருகமாக இருந்தீர்கள். அது முற்றிலும் உண்மை. நாம் குட்டிப் போட்டு பாலூட்டும் பிராணி வகையைச் சேர்ந்தவர்கள் (mammal) என்று எவருக்கும் தெரியும். நாம் அந்த பிராணி வகையைச் சேர்ந்தவர்கள் என்று எத்தனை பேருக்குத் தெரியும்? நாம் சூடான இரத்தம் கொண்ட மிருகம், பூமியில் நாம் சிருஷ்டிக்கப்பட்ட விதத்தின் மூலம் அவ்வாறே நாம் இருக்கிறோம். ஆனால் பாருங்கள், நம்மை மற்ற மிருகங்களினின்று வித்தியாசமாக்கினது என்னவெனில், தேவன் நமக்கு ஒரு ஆத்துமாவை அருளினார். மற்ற பிராணிகள் உடைகளை உடுத்த வேண்டியதில்லை. தனது நிர்வாணத்தை மறைக்க வேறெந்த மிருகமும் உடை உடுத்த வேண்டிய அவசியமில்லை. அப்படி உடை உடுத்துவது நாம் மாத்திரமே; ஏனெனில் நமக்கு ஒரு ஆத்துமா உள்ளது, ஆனால் பாருங்கள், மனிதன் எப்படியிருப்பான் என்று ஆதியிலே தேவனுக்குத் தெரியும். அவர் பூமியை சிருஷ்டித்து, அதில் தாழ்விலிருந்து உயர்வு வரையுள்ள எல்லாவிதமான மிருகங்களையும் தோன்றச் செய்தார். மிகவும் உயர்வான மிருகமாகத் தோன்றினது மனிதன். 21பிறகு... முதலில் மனிதன் உண்டாக்கப்பட்டான்; அவன் ஆவி மனிதனாக தேவனுடைய சாயலில் இருந்தான். தேவன் ஆவியாயிருக்கிறார் (யோவான் 4). அவர் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் (truth) அவரைத் தொழுதுகொள்ள வேண்டும் (யோவான் 4:24). உமது வசனமே சத்தியம் (truth); யோவான் 17:17). நாம் அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்கிறோம். அவர் ஆவியாக இருக்கிறார். பின்பு நிலத்தைப் பண்படுத்த மனிதன் இல்லை. அப்பொழுது தேவன் மனிதனை பூமியின் மண்ணினால் உருவாக்கினார். பின்பு அவனுடைய விலாவிலிருந்து ஒரு உபபொருளை, ஒரு விலா எலும்பை அவர் எடுத்து, மனிதனிலிருந்து அதைப் பிரித்தார். மனிதனுக்கு ஆண்மை பெண்மை என்னும் இருவகை தன்மை முதலில் இருந்தது. அவர் பெண்மையை வெளியே எடுத்தார். ஏனெனில் அது அன்பு. அவர் அதை ஏவாள் என்னும் நபருக்குள் வைத்தார். ஆதாம் அவளை ஏவாள் என்றழைத்தான். அவள் அவனுடைய மனைவி. அங்கு தான் அவனுடைய இயற்கை அன்பு (Phileo) அவனுடைய மனைவியைப் பற்றியிருந்தது. அப்படித்தான் ஒரு மனிதன் இன்றைக்கு இருக்க வேண்டும். அது போன்று மனைவியும் தன் புருஷனிடம் அன்பு செலுத்த வேண்டும். மனிதன் ஆண்மை கொண்டவன், ஸ்திரீ பெண்மை கொண்டவள். 22அதன் பின்பு, பாருங்கள், அவர் மனிதனை தம் சொந்த சாயலிலே சிருஷ்டித்த பிறகு, ''அவர்களை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்'' நிலத்தைப் பண்படுத்த ஒரு மனிதனும் இல்லை. எனவே அவனை பூமியின் மண்ணுக்குள் வைத்தார். எனவே அவன் - அவன் தான் அந்த மனிதன். இந்த மானிட மனிதன் ஒரு பிராணி, அவன் மிருகம். ஆனால் அவர் தேவனுடைய ஆவியை, ஜீவனை, அவனுக்குள் வைத்து, அவன் தெரிந்து கொள்ளக்கூடிய அடிப்படையில் அவனை உண்டாக்கினார். இந்த மனிதன்... 23நம்மைப் பற்றி நாம் பெரிதாக நினைத்துக் கொள்கிறோம். நாம் என்னவென்பதை சற்று நினைவில் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடியளவு அழுக்கு. அவ்வளவு தான். ''நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.'' மனிதன் சிறிது கல்வி கற்று, தான் பெரியவன் என்று எண்ணிக் கொண்டு, தெருவில் நடந்து செல்வதை நீங்கள் காண நேரிட்டால்,அவன் ஒரு கைப்பிடியளவு இந்தியானா மண் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவ்வளவு தான்.அவ்வாறே குட்டை கால் சட்டை அணிந்து, சிகரெட்டை புகைத்துக் கொண்டு, முழு தேசமே தனக்குச் சொந்தம் என்னும் பாணியில் சரீரத்தை நெளித்து ஒய்யாரமாக நடந்து செல்லும் ஸ்திரீயும் ஒரு கைப்பிடியளவு இந்தியானா மண்ணே. அப்படித்தான். அது மறுபடியும் மண்ணுக்குத் திரும்புகிறது. ஆகவே நீங்கள் தொடக்கத்திலேயே ஒன்றும் பெரியவர்கள் அல்ல. பாருங்கள். அது உண்மை. அதுதான் நீங்கள். 24ஆனால் அதற்குள் இருக்கும் அந்த ஆத்துமா - அந்த ஆத்துமாவில் தான் தேவன் கிரியை செய்கிறார். அந்த ஆவியின் தன்மையை அவன் அவருடன் இணங்க செய்ய முடிந்தால், உலக சுபாவம் மரித்துவிடுகிறது. உலக சுபாவமும், உலகத்தின் பேரிலுள்ள அன்பும் மரித்துவிடுகிறது. உலகத்தின் காரியங்கள் மரித்துவிடுகின்றன. ஏனென்றால் நீங்கள் உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூர்ந்தால், உங்களிடத்தில் தேவனின் அன்பில்லை. ஒரு மனிதன் மறுபடியும் பிறக்க வேண்டும். அப்பொழுது இந்த சுபாவம் மரித்து, தேவனுடைய சுபாவம் வந்து உங்களில் ஜீவிக்கிறது. தேவன் ஒருவர் மாத்திரமே தொடக்கமும் முடிவும் இல்லாதவராயிருக்கிறார். 25எனவே, அவர் உங்களை பங்காளியாக்கிவிட்டார், பாருங்கள். அவர் பூமிக்குரிய இந்த மனிதனையும் நித்திய ஆவியையும் எடுத்து அதை ஒன்று சேர்த்தார். அவர் கிறிஸ்து இயேசு என்னும் மனிதனாக ஆனபோது தேவன் தம்மை அப்பொழுது பிரதிபலித்தார். அவர் தேவனாக இருந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம் செய்து, தம்மை உலகத்தோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். அந்த பரிபூரண மனிதனின் மூலமாக பரிபூரணமில்லாதவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தேவனை விசுவாசித்து அதை ஏற்றுக்கொள்ளும் போது, அவருக்குள் பரிபூரணமடைகிறோம். 26அவருடைய சரீரம் அழிவைக் காண அவர் விட்டுக் கொடுக்கவில்லை. அவருடைய ஆத்துமாவை அவர் பாதாளத்தில் விடவுமில்லை, ஆனால் மூன்றாம் நாளில் அவரை உயிரோடெழுப்பினார். அவர் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறார். அவருடைய மகிமையின் சரீரத்தைப் போன்ற ஒரு சரீரத்தை நாம் பெற்றுக் கொள்வோம். ஆகவே தான் நாம் அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். அவருடைய மரணத்திற்குள்ளாக ஞானஸ்நானத்தில் அடக்கம் பண்ணப்பட்டு, அவருடைய உயிர்த்தெழுதலில் பங்கடையவே இவ்வாறு செய்கிறோம்... நாம் மறுபடியும் எழுந்திருந்து, நமக்கு புதிய ஜீவன் உண்டென்றும், நமது பழைய மனிதன் மரித்துவிட்டானென்றும் உலகத்திற்கு சாட்சியாக அறிவிக்கிறோம். நமது முந்தின சுபாவத்தை நாம் அடக்கம் பண்ணிவிட்டோம். நம்முடைய முந்தின சுபாவம் ஒழிந்துவிட்டது, இப்பொழுது நாம் அவருடைய சுபாவத்தைப் பெற்றிருக்கிறோம். அவர் நமக்குள் ஜீவிக்கிறார். நாம் நமது சித்தத்தை செய்வதில்லை. அவருடைய சித்தத்தை மாத்திரமே செய்கிறோம். நமது சிந்தனைகளை நமது சிந்தையில் நாம் சிந்திப்பதில்லை. நமது சிந்தைதான் சிந்தனை செய்கிறது. கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்த சிந்தையே ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் இருக்கிறது. அங்கு ஆத்துமா உள்ளது. அதைக் குறித்து தான் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். 27நாம் கவனிப்போமானால், அநேக காரியங்கள் சம்பவிக்கின்றன, அவை ஏன் சம்பவிக்கின்றன என்று நாம் வியப்புறுகிறோம். நாம் நம்மையே கேள்வி கேட்டுக் கொள்கிறோம், மற்றவர்களை கேள்வி கேட்கிறோம். சிறிது கழிந்து, நாம் கிறிஸ்தவர்களாக இருப்போமானால், சகலமும் நன்மைக் கேதுவாக நடக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். நீங்கள் அதைக் கண்டிருக்கிறீர்கள், எல்லா கிறிஸ்தவர்களும் அதைக் கண்டுள்ளனர். நாம் ஏன் அதை செய்தோம் என்று வியப்புறுகிறோம். நான் வேதாகமத்தை முதலில் வாசித்த போது, “தேவன் ஏன் அந்த மகத்தான மனிதனாகிய ஆபிரகாம் அங்கு நின்று கொண்டு சாராள் அவன் மனைவியில்லை என்று சொல்ல அனுமதித்தார்?'' என்று சில நேரங்களில் வியந்ததுண்டு. அவர் எப்படி அவன் அங்கு நின்று கொண்டு பொய் சொல்லவும் மற்ற காரியங்களைச் செய்யவும் அனுமதித்தார்? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை விட்டு வெளியேறக் கூடாது என்று அவர் கட்டளையிட்டிருக்க ஆபிரகாம் மாத்திரம் அதை விட்டு வெளியேற அவர் எப்படி அனுமதித்தார்? வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை விட்டு வெளியேறும் எந்த யூதனும் பின்வாங்கிப் போனவன். ஏனெனில் தேவன் அவர்களுக்கு அதை கொடுத்து, அங்கே தங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். அவர்களோ அதை விட்டு வெளியேறினார்கள். ஆபிரகாம் கேராருக்குச் சென்றான். அப்படியில்லாதிருந்தால்... 28பெலிஸ்திய தேசத்தின் ராஜாவாகிய அபிமெலேக்கு சாராளின் மேல் காதல் கொண்டு அவளை விவாகம் செய்து கொள்ளப் போனான். அவன் நல்லவன், நீதிமான். அவன் ஒருக்கால்... (இது கேலித்தனமாய் காணலாம், ஆனால் அதை உங்களுக்குத் தத்ரூபமாக்க) அவன் மாலையில் குளித்துவிட்டு, தன் பைஜாமாவை போட்டுக்கொண்டு, ஜெபம் செய்து முடித்த பின்பு படுக்கைக்குச் சென்றான். அப்பொழுது கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி, ''நீ செத்தவனுக்கு சமானம்'' என்றார். அந்த மனிதன் ஒன்றுமே செய்யவில்லை. அவன் ஆபிரகாமினாலும் சாராளினாலும் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டான். அது உண்மை. அவர், ''நீ வேறொருவனுடைய மனைவியைக் கொண்டிருக்கிறாய். நீ எவ்வளவாய் ஜெபித்தாலும், உன் ஜெபத்துக்கு செவி கொடுக்கமாட்டேன். நீ மரித்தவனுக்கு சமானம். அவன் என்னுடைய தீர்க்கதரிசி'' என்றார். 29அதைப் புரிந்து கொள்வது கடினம். ஆனால் அது அப்படியில்லை என்றால், கிருபை என்னவென்பதை நாம் அறிந்து கொண்டிருக்க முடியாது. சாராளைப் போன்ற ஒரு அழகான மனைவி அவனுக்கு இருந்தபோதிலும், அவன் ஏன் ஆகாரை மணந்து கொண்டான்? அவன் அவ்விதம் செய்ய விரும்பவில்லை. ஆனால் சாராள் அவனை வற்புறுத்தினாள். பின்பு கர்த்தரும், “சாராள் சொல்வதற்கு செவி கொடு'' என்றார். ஏன்? இஸ்மவேல் தோன்ற வேண்டும். அடிமைப் பெண்ணும் அவளுடைய குமாரனும், சுயாதீனமானவளிடத்திலும் அவளுடைய குமாரனிடத்திலும் சுதந்தர வாளியாயிருப்பதில்லை. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? இவை யாவும் முன்னடையாளங்கள். அந்த தீர்க்கதரிசி ஏன் வேசியை மணந்து... அவள் மூலம் இரண்டு பிள்ளைகளைப் பெறவேண்டும்? அது ஒரு அடையாளம். ஏன் ஒருவன் தன் வலது பக்கத்தில் 340 நாட்களும், பின்பு தன் இடது பக்கத்தில் அநேக நாட்களாக படுத்திருக்க வேண்டும்? அது ஒரு அடையாளம். ஒருவன் தன் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாய் இஸ்ரவேலருக்கு முன்பாக நடந்து சென்றான். அந்த காரியங்கள் அனைத்துமே முன்னடையாளங்களும் நிழல்களுமாயுள்ளன. பார்த்தீர்களா? இவைகளை நாம் அடையாளங்களாக பெற்றிருக்க வேண்டும். அநேக சமயங்களில், சில காரியங்கள் நமக்கு சம்பவிக்கும் போது, அவை ஏன் சம்பவித்தன என்று வியப்புறுகிறோம். தேவன் ஏதோ ஒன்றை நமக்கு முன்னறிவிக்கிறார். 30நான் சிறு பையனாக இருந்த போது (என் வாழ்க்கை சரித்திரம் உங்களுக்குத் தெரியும்) எனக்கு ஞாபகம் உள்ள காலத்திலிருந்து... எனக்கு ஞாபகம் உள்ள காரியங்களில் ஒன்று... இப்பொழுது இது... நேற்று நீங்கள் என்னிடம் ஒரு காரியத்தை சொல்லியிருக்கலாம், இன்றைக்குள் அதை நான் மறந்திருக்கலாம். ஆனால் நமது சிறுவயதில் நடந்த சில சம்பவங்களை நாம் ஞாபகம் வைத்திருப்போம் (நம்மில் அநேகர் அப்படித்தான் இருக்கிறோம்) இதைக் கூறுவது கேலித்தனமாக இருக்கக்கூடும், ஆனால் நீண்ட ஆடையைத் தரித்துக் கொண்டு ஒரு சிறு குழந்தையாக நான் தவழ்ந்த போது... என் வயதுள்ள உங்களில் சிலருக்கு அக்காலத்தில் குழந்தைகள் நீண்ட ஆடை அணிந்திருப்பார்கள் என்பது ஞாபகமிருக்கும். நான் தவழ்ந்து சென்று, என் மாமா உள்ளே வந்து நெருப்பு எரிகிற இடத்தில் நின்று கொண்டிருக்கும் போது, அவருடைய பாதங்களில் ஒட்டிக் கொண்டுள்ள பனிக்கட்டியை எடுத்துத் தின்பது என் ஞாபகத்திற்கு வருகிறது. 31அடுத்ததாக, என் வாழ்க்கையில்நடந்த சம்பவம் என் நினைவில் உள்ளது ஒரு தரிசனம். அதுதான் நான் கண்ட முதல் தரிசனம். நான் என் வாழ்நாளின் பெரும் பகுதியை நியூ ஆல்பனி என்னும் பட்டினத்தின் அருகில் கழிப்பேன் என்று அந்தத் தரிசனம் என்னிடம் கூறினது.அப்பொழுது நான் மலைப் பிரதேசத்திலுள்ள குழந்தையாக இருந்தேன். நான் பிறந்தபோது ஒரு மருத்துவர் கூட அங்கே கிடையாது. அந்தத் தரிசனம் கூறினபடியே, இந்த இடத்தில் ஐம்பதுஆண்டுகள் கழித்துவிட்டேன். தேவன் எங்கோ இருக்கிறார் என்று நான் எப்பொழுதும் அறிந்திருந்தேன். நான் சிறுவனாக இருந்தபோது அவர் என்னுடன் பேசி, நான் புகைப்பிடித்து, மது அருந்தி, என் சரீரத்தை அசுசிப் படுத்தக் கூடாது என்று கூறினார் - அதாவது பெண்களுடன் ஒழுக்கக்கேடான விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது என்று. எனவே அதைக் குறித்து எனக்கு எப்பொழுதுமே ஒரு பயம் உண்டாயிருந்தது - வாலிபனாக இருந்தபோதே. 32பின்பு ஒருமுறை நான் வேட்டைக்குச் சென்றிருந்தேன். வேட்டை என்றால் எனக்கதிகப் பிரியம் - அது என் இரண்டாம் சுபாவம். நான் ஜிம்மி பூல் என்னும் அருமையான பையனுடன் வேட்டையாடிக் கொண்டிருந்தேன் (அவருடைய மகன் சிறிய ஜிம் இந்த சபைக்கு வருகிறான் என்று நினைக்கிறேன். அருமையான குடும்பத்தினர். பூல் குடும்பத்தினரை நானறிவேன். ஜிம்மியும் நானும் பள்ளியில் சிறுவர்களாக இருந்த முதற்கொண்டு, ஒன்றாக உறங்கி, ஒன்றாக வாழ்ந்தோம்... எங்கள் இருவருக்கும் வயதில் ஆறு மாதங்களே வித்தியாசம்). ஜிம்மி எதேச்சையாக துப்பாக்கியைச் சுட்டு, என்னுடைய இரண்டு கால்களையும் சுட்டுவிட்டான். நான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டேன் - அங்கு மரணத் தருவாயில் கிடந்தேன். (அந்நாட்களில் பெனிசிலின் போன்ற எதுவுமே கிடையாது). அவர்கள் எனக்கடியில் ரப்பர் விரிப்பைப் போட்டிருந்தார்கள். அடுத்த நாள் காலையில் அவர்கள் எனக்கு அறுவை சிகிச்சை செய்யப் போகிறார்கள் என்று அன்றிரவு அறிந்து கொண்டேன். அவர்கள் காயத்தை சுத்தம் செய்தார்கள் - பெரிய சதை துண்டுகள் பிளந்து வந்தன. அவர்கள் கத்தரிக்கோலை எடுத்து அதை வெட்டினார்கள். நான் வலி பொறுக்க முடியாமல் அருகிலிருந்த ஒரு மனிதனுடைய கையைப் பிடித்துக்கொள்ள வேண்டியதாயிருந்தது. எனக்கு அருகிலிருந்த அந்த மனிதன் பிராங்கிஎய்க் என்பவர். அவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர்களுடைய பணி முடிந்தவுடன், அவருடைய மணிக்கட்டுகளிலிருந்து என் கைகளை அவர்கள் தளர்த்திப் பிரித்தெடுக்க வேண்டியதாயிருந்தது. அவர்கள் என் காலின் பாகத்தை வெட்டி எடுத்தபோது அவருடைய கைகளை இப்படிப் பிடித்துக் கொண்டு அலறினேன். அப்பொழுது நான் பதினான்கு வயதான சிறு பையன். 33அன்றிரவு நான் உறங்க முயற்சித்தேன். அவர்கள்... நான் எழுந்தபோது, ஏதோ ஒன்று பீறிட்டுத் தெறித்தது. அங்கு இரத்தம் - ஏறக்குறைய அரை காலன் இருக்கும் என்று நினைக்கிறேன் - என் இரத்தக் குழாய்களிலிருந்து பீறிட்டு வெளியே வந்தது. அவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, தோட்டா தமனிக்கு (artery) இருபுறத்திலும் மிக அருகாமையில் உள்ளதால், ஒரு சிறு கீறல் உண்டாக்கினாலும் கூட, அது தமனியை வெட்டி, என்னிலிருந்து இரத்தம் பீறிட்டு வரும் என்று கூறினார்கள். “சரி, இதுதான் என் முடிவு என்று நினைத்துக் கொண்டேன். என் கைகளை இப்படி கீழே போட்டு, அதை மேலே உயர்த்தின போது, என் கைகளின் வழியாக இரத்தம் கீழே வழியத் தொடங்கினது. என் சொந்த இரத்தத்தின் மேல் நான் படுத்திருந்தேன். நான் மணி அடித்து கூப்பிட்டேன். அப்பொழுது நர்ஸ் வந்தாள். அவள் துவாலையைக் கொண்டு இரத்தத்தை ஒற்றி எடுத்தாள். துவாலை முழுவதிலும் இரத்தம் ஊறியிருந்தது. அதைத் தவிர வேறொன்றும் அவர்களால் செய்ய முடியவில்லை. 34அடுத்தநாள் காலையில், இந்த பெலவீனமான நிலையில் (அந்நாட்களில் ஒருவர் இரத்தத்தை மற்றவருக்கு செலுத்துவது கிடையாது, உங்களுக்குத் தெரியும்) எனக்கு அறுவை சிகிச்சை செய்தார்கள். அவர்கள் எனக்கு ஈதர் என்னும் மயக்க மருந்து கொடுத்தார்கள். நான்... பழைய காலத்தில் மயக்க மருந்தாக அளிக்கப்படும் ஈதர் (ether) உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். ஈதர் மயக்கத்திலிருந்து நான் தெளிந்தவுடனே... எட்டு மணி நேரம் கழித்தே நான் ஈதர் மயக்கத்திலிருந்து தெளிந்தேன், அவர்கள் அவ்வளவு அதிகமான மயக்க மருந்து கொடுக்க வேண்டியதாயிருந்தது. இல்லையென்றால் நான் வலி தாங்க முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள்... நான் மயக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. அவர்களால் என்னை எழுப்ப முடியவில்லை. 35திருமதி ரோடர் என் அருகில் ஆஸ்பத்திரியில் இருந்தது என் நினைவுக்கு வருகிறது. அந்த ஸ்திரீயை என்னால் மறக்கமுடியாது. என்ன நேர்ந்தாலும் அவர்களை என்னால் மறக்கவே முடியாது. அவர்கள் அப்பொழுது ஒரு வாலிபப் பெண். அவர்களுடைய கணவர் மோட்டார் தொழிற்சாலையில் உயர்அதிகாரியாக பணி புரிந்து வந்தார். அவர்களும் திருமதி ஸ்டூவர்டும் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது எனக்கு ஞாபகம் வருகிறது. அவர்கள் தான் என்னுடைய மருத்துவ செலவுக்கான தொகையைக் கட்டினார்கள். அப்பொழுது எங்களுக்கு வீட்டில் உண்ணவும் கூட உணவில்லை. அப்படியிருக்க, மருத்துவ செலவிற்கு நூற்றுக்கணக்கான டாலர்களை எங்களால் எப்படி கட்டமுடியும்? அந்த அம்மாள் அவர்களுடைய சபை சங்கம் மூலமாகவும், கூ க்ளு க்ளான் (Ku Klux Klan) என்னும் அமைப்பின் மூலமாகவும் என்னுடைய மருத்துவச் செலவுக்கான தொகையைக் கட்டினார்கள் - 'மேசன்' குழுவினர். அதை நான் மறக்கவே முடியாது. அவர்கள் என்ன செய்தபோதிலும், நான் இன்னமும்... அவர்கள் எனக்குச் செய்தது என்னில் ஆழமாக பதிந்துள்ளது. அவர்கள் மருத்துவக் கட்டணத்தை டாக்டர் ரீடர் என்பவரிடம் செலுத்தினார்கள், அவர் இப்பொழுதும் உயிரோடிருக்கிறார் - போர்ட்வில் (?) என்னுமிடத்தில் வசிக்கிறார். இந்த சம்பவத்தை அவர் உங்களுக்கு சொல்லக்கூடும். 36எனக்கு ஈதர் மயக்கம் தெளிந்தவுடன், அங்கே ஏதோ ஒன்று எனக்கு சம்பவித்தது. அது தரிசனம் என்று நான் நம்புகிறேன். நான் மிகவும் பெலவீனமாயிருந்ததால், நான் மரித்துக் கொண்டிருக்கிறேன் என்று அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அந்த அம்மாள் அழுது கொண்டிருந்தார்கள். என் கண்களைத் திறந்து பார்த்தபோது, அந்த அம்மாள் பேசிக் கொண்டிருந்ததை என்னால் கேட்க முடிந்தது. நான் மறுபடியும் தூங்கிவிட்டேன். இரண்டு, மூன்று முறை விழித்தேன். அதன் பின்பு எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. ஏறக்குறைய ஏழு மாதங்கள் கழித்து, என் கால்களிலிருந்த துணிகளை எடுக்க நான் செல்ல வேண்டியதாயிருந்தது. மருத்துவர் அறுவை சிகிச்சையின்போது அவைகளை எடுக்கவில்லை. எனக்கு இரத்த விஷம் ஏற்பட்டு என் இரண்டு கால்களும் இரண்டு மடங்காக வீங்கின. அவர்கள் இடுப்பு வரைக்கும் என் இரண்டு கால்களையும் வெட்டி எடுத்துவிட நினைத்தனர். எனக்கு வலி பொறுக்க முடியவில்லை. நான், “உயர இதுவரை எடுத்து விடுங்கள்'' என்றேன். முடிவில் டாக்டர் ரீடரும், லூயிவில்லைச் சேர்ந்த டாக்டர் பெர்லும் அறுவை சிகிச்சை செய்து அங்கு வெட்டி அதை எடுத்துவிட்டார்கள். இன்றைக்கு தேவனுடைய கிருபையினால் நான் அருமையான கால்களைப் பெற்றிருக்கிறேன். எனக்குக் கடைசியாகக் கிடைத்த தரிசனத்தில்... 37அது முதலாம் தரிசனம்... நான் சுயநினைவை இழந்துவிட்டேன். நான் நரகத்தில் இருப்பதாக எண்ணினேன். அது மிகவும் வெளிப்படையாக (சபையோரில் ஒரு சகோதரன் ''ஐயா, தயவு செய்து“ என்கிறார் - ஆசி.) உம் - ம் (''அங்கே ஒரு ஸ்திரீ மயங்கி விழுந்து விட்டார்கள்'') சரி, யாராவது ஒருவர் உங்கள் கைகளை அவள் மேல் வைத்து காற்றோட்டமான இடத்திற்குக் கொண்டு செல்லுங்கள். அங்கு நின்று கொண்டிருப்பவர் யாராகிலும், உங்கள் கைகளை அவள் மேல் வையுங்கள். நாம் ஜெபம் செய்வோம். அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, இன்று காலை வியாதியாயுள்ள நமது சகோதரி அறையில் மயக்கமுற்றுவிட்டாள். உம்முடைய கிருபையும், பெலனும் வல்லமையும் - உமக்கு பிரதிநிதித்துவமாக அவள் மேல் இப்பொழுது கரங்கள் வைக்கப்பட்டுள்ளன. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும், ஒ வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்று வேதவாக்கியம் உரைக்கிறது, இப்பொழுது எங்கள் சகோதரி வியாதியினின்று விடுதலையாகி, தேவனுடைய மகிமைக்கென்று சுகமடைவாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதை நாங்கள் கேட்கிறோம். அவளை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். ஆமென். 38அவளை காற்றோட்டமான இடத்துக்குக் கொண்டு செல்லுங்கள். இங்கு பயங்கரமாக புழுக்கமாக உள்ளது, என்னால் புழுக்கத்தை உணரமுடிகிறது. அது மிகவும் மோசமாயுள்ளது. இங்கு மேடையின் மேல் நிற்கும்போது, மயக்கம் வருவது போன்ற உணர்ச்சி உள்ளது. இங்கு நான்கு அல்லது ஐந்து முறை எனக்கும்அப்படிப்பட்ட உணர்ச்சி ஏற்பட்டது. அவள் சிறிது நன்றாக ஆனவுடன், அவள் காற்று பெறக்கூடிய இடத்திற்கு கொண்டு செல்லுங்கள். அது நல்லது. இங்கு பயங்கரமாக புழுக்கமாயுள்ளது, உங்களுக்குத் தெரியும். மானிடர்களாகிய நாம்... ஒவ்வொருவரும் அநேக சதுர அடி பரப்பளவிற்கு வியாதியை உற்பத்தி செய்கிறோம். யாரிடமாவது தண்ணீர் இருந்தால், அந்த சகோதரியின் மேல் தெளியுங்கள். இப்பொழுது அவள் நன்றாகிவிட்டாள். (“சகோதரன் பிரன்ஹாம் கதவை திறந்து வைத்துவிடலாம்” என்கிறார் ஒரு சகோதரன் - ஆசி.) உங்களால் கூடுமானால், கதவுகளைத் திறந்துவிடுங்கள், அல்லது காற்று வீசுங்கள் - நம்மால் கூடுமானவரை ஏதாவதொரு வழியில். 39எனக்குத் தரிசனம் உண்டான அந்த சமயத்தில், நான் ஜீவனிலிருந்து உபத்திரவத்திற்கு (torment) கடந்து போவதாக எண்ணினேன். ஏழு மாதங்கள் கழித்து, இங்கு கிளார்க் நகர நினைவு மருத்துவமனையில் எனக்கு இரண்டாவது அறுவை சிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில் நான் வெளியே வந்தபோது, நான் மேற்கே நின்று கொண்டிருப்பதாக நினைத்தேன். எனக்கு வேறொரு தரிசனம் உண்டானது. அங்கு ஒரு பெரிய பொன் நிறமுள்ள சிலுவை வானத்தில் இருந்தது. அந்த சிலுவையிலிருந்து தேவனுடைய மகிமை பாய்ந்து கொண்டிருந்தது. என் கரங்களை நான் இவ்வாறு விரித்து நின்று கொண்டிருந்தேன். அந்த மகிமை என் மார்பில் விழுந்து கொண்டிருந்தது. அந்த தரிசனம் என்னை விட்டு நீங்கினது. அந்தத் தரிசனம் உண்டானபோது, என் தகப்பனார் அங்கு நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். 40நான் எப்பொழுதும் உணர்வதுண்டு... என்னை இத்தனை ஆண்டுகளாக அறிந்துள்ள ஜனங்கள், எனக்கு மேற்கே செல்ல எப்பொழுதும் விருப்பம் என்பதை அறிவர். அது ஏன் என்று உங்களுக்குத் தெரியும். அது எப்பொழுதுமே மேற்கே செல்ல வேண்டுமெனும் விருப்பம். ஒரு சமயம் ஒரு ஜோதிடர் நான் மேற்கே செல்ல வேண்டுமென்று அதே காரியத்தை என்னிடம் சொன்னார். நட்சத்திரங்கள் தங்கள் சுற்றுப் பாதைகளில் கடக்கும் போது, நான் அந்த அடையாளத்தில் பிறந்தேன் என்றும்; நான் கிழக்கில் வெற்றி காணமாட்டேன், நான் மேற்கே செல்லவேண்டும் என்றும் அவர் சொன்னார். சென்ற ஆண்டு, என் வாழ்நாள் முழுவதும் எனக்கிருந்த விருப்பத்தை நிறைவேற்ற, நான் மேற்கே சென்றேன். 41நான் ஏன் அங்குள்ளேன் - அது மிகவும் கேலிக்குரிய விஷயம். அந்த வனாந்தரத்தில், மாதம் ஒன்றிற்கு 110 டாலர்கள் வாடகை கொடுக்கிறேன். இங்கு எனக்கு மரச்சாமான்கள் அனைத்துடனும் போதகர் வீடு ஒன்று (Parsonage) அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கர்த்தரைப் பின்பற்றுவதாகும், அதை மாத்திரமே எனக்குச் செய்யத் தெரியும். அந்தத் தரிசனமும் அங்கு என்ன சம்பவித்ததென்றும் உங்களுக்குத் தெரியும். இப்பொழுது, இதை கூற விரும்புகிறேன்... 42(சகோ. ராய் நமது சகோதரி பெலவீனமாய் இருப்பதாக உணர்ந்தால், அவளை காற்றோட்டமுள்ள ஒரு அறைக்குக் கொண்டு சென்று உட்கார வைக்க நீங்கள் விரும்பினால், அது முற்றிலும் சரி, ஏனெனில்... அவள் நன்றாகிவிடுவாள் என்று உணருகிறேன். அவளுக்கு மயக்கமாக இருக்கிறது, சுகவீனம். எனவே காற்றுள்ள இந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவிரும்பினால்... சகோ. ராய் ஜன்னலைத் தூக்கிவிடுங்கள். சகோதரி இங்கு நடந்து வர விரும்பினால்) அவள் கடந்து செல்லும்போது, என் கைகளை அவள் மேல் வைக்க விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் என்னை ஒரு நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள். தேவன் என்னை மன்னிப்பாராக... சகோதரனே, அது சரி. பரலோகப் பிதாவே, உமது குமாரத்தி இன்று காலை இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவள் செய்தியைக் கேட்க வந்திருக்கிறாள். சாத்தான் அவளைத் தடை செய்ய முயல்கிறான். ஆனால் அவனால் முடியாது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். நல்லது, அந்த கதவை கொஞ்சம்...?... சகோதரனே, அப்போது காற்று உள்ளே வருவதற்கு ஏதுவாய் இருக்கும். 43இங்கு புழுக்கமாயிருப்பதைப் பற்றி பேசுகிறீர்களே. நீங்கள் வெளிநாடுகளில் சில இடங்களுக்கு செல்லவேண்டும். அங்கு குஷ்டரோகிகளையும், புற்றுநோய் கொண்ட பிணியாளிகளையும் ஒருவர் மேல் ஒருவராக குவித்திருப்பார்கள். ஓ, என்னே! அங்கே நீங்கள் சுவாசிக்கவும் முடியாது. அவர்களை அந்தப் பெரிய கட்டிடங்களில் படுக்க வைப்பார்கள். அந்த இடம் முழுவதுமே வியாதிகளினால் அசுசிப்பட்டிருக்கும். குஷ்டரோகம் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் அங்கு காதுகள் இல்லாமலும், பாதிமுகம் அரிக்கப்பட்டு, கைகள் இல்லாமலும், பாதங்களுக்கு சிறு முளைகள் வைக்கப்பட்டும் - ஒருவர் மேல் ஒருவராக குவிக்கப்பட்டு கிடத்தப்பட்டிருப்பார்கள். அநேகர் மரணத்தருவாயில் இருப்பார்கள். அவ்வாறு குவியலாக குவிக்கப்பட்டவர்களில் சிலர் செய்தியைக் கேட்க வேண்டுமென்பதற்காக எங்காவது உள்ளே நுழைய முயல்வார்கள். 44என்ன நேர்ந்ததென்று சொல்ல விரும்புகிறேன். நான் கண்ட தரிசனத்தைத் திரும்பவும் விவரிக்க விரும்புகிறேன்... நான் இரண்டு தரிசனங்களையும் குறிப்பிட்டேன், அவைகளில் ஒன்றைக் குறித்து உங்களிடம் விவரிக்க விரும்புகிறேன்... நான் மேற்கு செல்ல வேண்டியிருந்தது. அதற்காக நான் எப்பொழுதும் விருப்பம் கொண்டிருந்தேன். இன்றைய காலை செய்தியின் நோக்கம் என்னவெனில், நான் சபைக்கு எவைகளை அறிவிக்க அவர் அனுமதிக்கிறாரோ, அவையனைத்தும் எனக்குத் தெரிந்தவரையில் அறிவிப்பதாகும். அதுவரை... நான் போய்க் கொண்டிருக்கும்போது, இது என் மனதில் பட்டது, எனவே அதை சபைக்கு அறிவிக்க விரும்புகிறேன். இது இந்தக் கூடாரம் மாத்திரமே கேட்பதற்காக அளிக்கப்படுகின்றது. நான் கண்ட இந்த முதல் தரிசனத்தில், இதுதான் நடந்தது. 45அந்தத் தரிசனம் எனக்கு உண்டானவுடனே, நான் மிகவும் பெலவீனமாயிருந்தேன், நான் எல்லா இரத்தத்தையும் இழந்துவிட்டேன். நான் முடிவற்ற நித்தியத்துக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். இதைக் குறித்து நான் முன்பு கூறினதை உங்களில் அநேகர் கேட்டிருக்கிறீர்கள்-முடிவற்ற நித்தியத்துக்குள் மூழ்கிக் கொண்டிருந்தேன். முதலில், நான் மேகங்கள் போல் தோன்றும் ஒன்றின் வழியாக சென்று கொண்டிருந்தேன், பிறகு அந்தகாரத்தின் வழியாகச் சென்று, கீழே படிப்படியாக மூழ்கிக் கொண்டேயிருந்தேன். முதலாவது நேர்ந்தது என்னவெனில், நான் இழக்கப்பட்டவர்களின் ஸ்தலத்தை அடைந்தேன். அங்கு நான் அலறினேன். நான் பார்த்த போது, அதற்கு அஸ்திபாரமே இல்லாமலிருந்தது. நான் மூழ்கிக் கொண்டிருப்பதை - நித்தியத்துக்கு - என்னால் நிறுத்த முடியவில்லை... நான் மூழ்கிவிடுவேன் என்பது போல் தோன்றினது. எங்கேயும் அதை நிறுத்த முடியவில்லை. 46ஜனங்களுடன் மகிமையில் இருப்பதாக நான் சமீபத்தில் கண்ட தரிசனத்துக்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம் இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை. இந்தத் தரிசனத்தில் நான் கீழே போய்க் கொண்டேயிருந்தேன். முடிவில் என் தகப்பனாருக்காகக் கதறினேன். நான் சிறுவனாயிருந்தபடியால், அதைத்தான் நான் செய்வேன். என் தகப்பனாருக்காக நான் கதறினேன். என் தகப்பனார் அங்கில்லை. என் தாயாருக்காகக் கதறினேன். “யாராவது என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்றேன். அங்கு தாயாரும் இல்லை. நான் இவ்வாறு கீழே போய்க் கொண்டேயிருந்தேன். நான் தேவனுக்காக கதறினேன். தேவனும் அங்கில்லை. 47சிறிது கழித்து, நான் ஒருபோதும் கேட்டிராத மிகவும் துக்ககரமான முனகல் சத்தத்தைக் கேட்டேன். அது மிகவும் பயங்கரமான உணர்ச்சியை அளித்தது. வேறு வழியேயில்லை - இத்துடன் ஒப்பிடும் போது எரிந்து கொண்டிருக்கும் நெருப்பும் கூட மகிழ்ச்சியுள்ள ஒன்றாக இருக்கும். இந்தத் தரிசனங்கள் ஒருபோதும் தவறாக இருந்ததேயில்லை. நான் இதுவரை உணர்ந்திராத மிகவும் பயங்கரமான உணர்ச்சியாக அது இருந்தது... நான் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது பிசாசின் அலறலைப் போல் இருந்தது. நான் பார்த்தபோது ஸ்திரீகள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பச்சை வர்ணம் தீட்டியிருந்தனர். அவர்களுடைய முகங்களைப் பார்த்தேன். அவர்களுடைய கண்களின் கீழ் பச்சை வர்ணம் தீட்டியிருந்தது. இன்றைய பெண்கள் வர்ணம் தீட்டிக்கொள்வது போல், அவர்களுடைய கண்கள் பின்னால் வரைக்கும் தீட்டப்பட்டிருந்தது - அவர்களுடைய கண்களும் முகமும். அவர்கள் ''ஊ, ஊ, ஊ, ஊ'' என்று அலறிக் கொண்டு சென்றனர். ஓ, என்னே! நான், “ஓ, தேவனே, என்மேல் இரக்கமாயிரும். ஓ, தேவனே இரக்கமாயிரும். நீர் எங்கேயிருக்கிறீர்? நான் மாத்திரம் திரும்பிச் சென்று வாழ்க்கை நடத்த நீர் அனுமதித்தால், நான் நல்ல பையனாக இருப்பேன் என்று உமக்கு வாக்களிக்கிறேன்'' என்று கதறினேன். அது ஒன்று மாத்திரமே என்னால் கூற முடிந்தது. தேவன் அறிவார், நியாயத்தீர்ப்பின் நாளில் நான் சொன்ன இந்த வாக்குமூலத்தின் பேரில் அவர் என்னை நியாயந்தீர்ப்பார். இதைத்தான் நான் சொன்னேன்: ''தேவனாகிய கர்த்தாவே, நான் திரும்பிப் போகட்டும். நான் நல்ல பையனாக இருப்பேன் என்று உமக்கு வாக்களிக்கிறேன்.'' 48நான் சுடப்பட்ட போது, பொய் சொல்லியிருக்கிறேன். நான் செய்யக்கூடிய எல்லாவற்றையுமே செய்திருக்கிறேன். ஆனால் ஒன்றை மாத்திரம் கூற விரும்புகிறேன்... இங்குள்ளபோதே எல்லாவற்றையும் சரிபடுத்திக் கொள்வது நலம். நான் கீழ்நோக்கி பார்த்த போது, நான் ஏறக்குறைய இரண்டு பாகங்களாக பிளக்கப்பட்டது போல் கண்டேன்... நான், ''தேவனே, என்மேல் கிருபையாயிரும். நான் விபச்சாரம் செய்ததில்லையென்று உமக்குத் தெரியும்'' என்றேன். அது ஒன்று மாத்திரமே என்னால் தேவனிடம் கூறமுடிந்தது. அவருடைய மன்னிப்பு போன்ற ஒன்றையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ''நான் விபச்சாரம் செய்ததில்லை'' என்று மாத்திரமே கூறமுடிந்தது. அவர்கள் என்னை வெளியே கொண்டு வந்தார்கள். அப்பொழுது, “தேவனே, என்மேல் கிருபையாயிரும். நான் திரும்பிப் போகச் செய்வீரானால், ஒரு நல்ல பையனாக இருப்பேன்” என்று அழுதேன். தேவன் எங்கோ இருக்கிறார் என்று அறிந்திருந்தேன். எனவே, தேவன் உதவி செய்வாராக. என்னைச் சுற்றிலும் களைப்புற்றவர்கள் இருக்க நான் புதிதாக அங்கு சென்றேன். மிகவும் கொடூரமான, பயங்கரமான, தேவனற்ற உணர்ச்சி... மிகப் பெரிய கண்கள் போல்தோற்றமளித்தன... பெரிய கண் இமைகள், பூனைக்கு இருப்பது போல், பின்னால் இப்படி வரையப்பட்டிருந்தது. பச்சை வர்ணம் இப்படி தீட்டிக்கொண்டு, பூச்சி அரித்தது போன்ற முகங்களையுடையவர்களாய் “ஊ, ஊ, ஊ'' என்று அவர்கள் அலறிக்கொண்டு சென்றனர். ஓ, என்னே ஒரு பயங்கர உணர்ச்சி!அப்பொழுது நான்... 49சிறிது நேரத்திற்குள்ளாக இயற்கை வாழ்க்கைக்கு நான் திரும்பி வந்துவிட்டேன், அந்த காரியம் என்னை தொல்லைப்படுத்தியது. நான், ''அது போன்ற இடத்திற்குப் போகவே கூடாது'' எந்த ஒரு மானிடனும் அதைப் போன்ற ஒரு இடத்திற்கு போகவே கூடாது என்று நினைத்துக் கொண்டேன். ஏழு மாதங்கள் கழித்து, நான் மேற்கே நின்று, அந்த பொன் நிறமுள்ள சிலுவை என்மேல் வரும் தரிசனத்தைக் கண்டேன். ஆக்கினைக்குட்படுத்தப் பட்டவர்களின் ஸ்தலம் எங்கோ ஓரிடத்தில் உள்ளது என்பதை நான்அறிந்து கொண்டேன். 50நான்கு வாரங்களுக்கு முன்பு வரையிலும் இதை நான் அவ்வளவு அதிகமாக கவனிக்கவேயில்லை. மனைவி... நான் அவ்விதமாக நினைக்கவேயில்லை. நான்கு வாரங்களுக்கு முன்பு, மனைவியும் நானும் கடையில் சாமான்கள் வாங்க டூசானுக்கு சென்றிருந்தோம். நாங்கள் அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த போது... மனைவியும் நானும் படிக்கட்டுகளின் கீழ் இறங்கிச் சென்றோம். அங்கு ஒரு கூட்டம் பெண்தன்மை போன்று காணப்பட்ட பையன்கள் தலைமுடியை பின்னிவிட்டுக் கொண்டு (பெண்கள் செய்வது போல), நெற்றிக்கு முன்னால் முடியை சுருட்டி தொங்கவிட்டுக் கொண்டு உயரமான கால்சட்டைகளை அணிந்திருந்தார்கள் - பீட்னிக்ஸ் (Beatniks) செய்வது போல், அல்லது நீங்கள் எப்படி அவர்களை அழைத்தாலும் (பீட்னிக்ஸ் என்பவர்கள் மேற்கத்திய இசைபாடல் குழுவினர்- தமிழாக்கியோன்). அவர்கள் அங்கிருந்தனர், எல்லோரும் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய தலைகள், “வாட்டர் ஹெட்'' என்றழைக்கப்படும் அமைப்பில் பெண்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வது போல் கத்தரிக்கப்பட்டு பெரிதாகக் காணப்பட்டன. அவர்கள் அங்கே இருந்தனர். ஒரு வாலிபப் பெண் அங்கு வந்தாள். அவள், ''அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று என்னைக் கேட்டாள். “அப்படி பார்க்கப் போனால் உன்னைக் குறித்தே நீ வெட்கப்பட வேண்டும். உனக்கு செய்வதற்கு எவ்வளவு உரிமையுண்டோ, அவ்வளவு உரிமை அவர்களுக்கும் உண்டு. உங்கள் இருவருக்குமே உரிமை கிடையாது'' என்றேன். 51நான் மேல் தலத்திற்குச் சென்று உட்கார்ந்து கொண்டேன். அப்படி செய்தபோது அங்கு தானியங்கிப் படிக்கட்டு (escalator) ஒன்றிருந்தது. (அது ஜே.சி. பென்னியின் அங்காடியில்). அந்த தானியங்கிப் படிக்கட்டு ஜனங்களை மேலே கொண்டு வந்து கொண்டிருந்தது. அதன் வழியாக மேலே வரும் ஸ்திரீகளைக் கண்ட போது என் வயிறு குமட்டினது; வாலிபப் பெண்கள், வயோதிப ஸ்திரீகள், தோல் சுருங்கிப் போனவர்கள் எல்லோருமே குட்டை கால் சட்டையை அணிந்து கொண்டு, இனக் கவர்ச்சியைத் தூண்டும்படி கேவலமான ஆடைகளை உடுத்தினவர்களாய், அசுத்தமான உடலைக் காண்பித்துக் கொண்டு, பெரிய தலைகளையுடையவர்களாய் நான் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்த போது, தானியங்கிப் படிகளின் வழியாக மேலே வந்து கொண்டிருந்தனர். நான் தலையைக் கீழே சாய்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தேன். 52நான் திரும்பி அவர்களைப் பார்த்தேன். படிகளின் வழியாக மேலே வந்து கொண்டிருந்த ஒருத்தி வேறொருத்தியிடம் ஸ்பானிய மொழியில் பேசினாள். அவள் வெள்ளைக்காரி, அவள் ஸ்பானிய ஸ்திரீயுடன் பேசிக்கொண்டு வந்தாள். நான் பார்த்தேன். (சகோ. பிரன்ஹாம் தன்னுடைய விரலை சொடுக்குகிறார் - ஆசி.) திடீரென்று நான் வேறொரு பரிமாணத்திற்கு மாறினேன். நான் முன்பு கண்ட அதே காட்சி மறுபடியும் தரிசனத்தில் எனக்குக் காணப்பட்டது. அவள் கண்கள் (அண்மையில் ஸ்திரீகள் எவ்வாறு தங்கள் கண்களுக்கு வர்ணம் தீட்டிக் கொள்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும்) பூனைக் கண்களைப் போலிருந்தது. அவர்கள் எப்படி வரைந்து கொள்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும் - பூனைக் கண்ணாடியை (cat glasses) அணிந்து கொண்டு, கண்கள் இப்படி மேலே. அவளுடைய கண்களின் கீழ் பச்சை வர்ணம் தீட்டப்பட்டிருந்தது இதைத்தான் நான் சிறுவனாயிருந்த போது தரிசனத்தில் கண்டேன். (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக தடவைகள் தட்டுகிறார் - ஆசி.) இந்த பெண் அதேபோன்று காட்சியளித்தாள். என் உடல் முழுவதும் மரத்துப்போனது. நான் சுற்றிலும் பார்த்த போது கட்டிடத்தில் ஜனங்கள் பொருட்களின் விலைகளைக் குறித்தும் மற்றவைகளைக் குறித்தும் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தனர். நான் சற்று... 53ஒரு இமைப்பொழுதில் வேறொரு பரிமாணத்துக்கு மாறிவிட்டதாக தோன்றினது. இதைத்தான் நான் “நரகத்தில் கண்டேன்'' என்று யோசித்தேன். அந்த பூச்சி அரித்தது போன்ற முகம் அங்கிருந்தது. அவர்கள் நரகத்திலிருந்ததால் தான் அவ்வாறு இருக்கின்றனர் என்று நினைத்திருந்தேன் - கண்களின் கீழ் பச்சை கலந்த ஊதா வர்ணம். ஆனால் இங்கேயும் இந்த பெண்கள், நான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தரிசனத்தில் கண்ட விதமாகவே பச்சை கலந்த ஊதா வர்ணம் தீட்டியுள்ளனர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உண்டான தரிசனம் இப்பொழுது எனக்கு ஐம்பத்து நான்கு வயது, அப்பொழுது எனக்கு பதினான்கு வயது. எனவே நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் - அது நியாயத்தீர்ப்பின் எண்ணாகும். அந்த இடத்தில்... 54அதை நான் கண்டேன். என் மனைவி திரும்பி வந்தபோது என்னால் அவளிடம் பேசக்கூட முடியவில்லை. அவள் சாராளுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் பள்ளி சீருடைகளை வாங்க அங்கு சென்றிருந்தாள். என்னால் அவளுடன் பேசவே முடியவில்லை. அவள், “பில், உமக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டாள். நான், “தேனே நான் ஏறக்குறைய ஒரு செத்த மனிதனைப் போல் இருக்கிறேன்'' என்றேன். அவள், ''என்ன நேர்ந்தது, உடல் நலமில்லையா?'' என்று கேட்டாள். நான், “இல்லை, இப்பொழுது ஒன்று சம்பவித்தது என்றேன். அவளுக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியாது. அவள் ஒலிநாடா அங்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறாள். இதை நான் யாரிடமும் கூறவில்லை. நான் வாக்களித்தபடி, ”நான் காத்திருந்து, இதை சபைக்கு முதலில் அறிவிப்பேன்'' என்று எண்ணினேன். சபைக்கு அறிவித்தல். அதுவே என்னுடைய வாக்குறுதி. இன்றிரவுக்குப் பின்பு, அந்த வாக்குறுதியை நான் ஏன் நிறைவேற்ற முயல்கிறேன் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். பாருங்கள்? 55அந்தப் பெண்களின் கேவலமான கண்களை நான் கவனித்த போது இவ்வாறு எண்ணினேன். அவர்கள் ஸ்பெயின், பிரான்சு, இந்தியா நாட்டினர் மற்றும் வெள்ளையர் எல்லோரும் ஒன்றாயிருந்தனர். அந்தப் பெரிய தலை, தலைமயிரை புதரைப்போல் வாரிவிட்டுக் கொண்டு, சீப்புகளை சொருகி வைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அதைப் பின்னால் பெரிதாக வாரி விட்டுக் கொண்டு, அது வெளியே வருகிறது. அவர்கள் தலைமயிரை எப்படி வாரிக் கொள்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியும். பிறகு கேவலமாகத் தோன்றும் கண்கள், அந்த கண்களில் வர்ணம், அவை பூனையின் கண்களைப் போல் பின்னால் வரையப்பட்டிருந்தன. அவர்கள் அங்கு பேசிக் கொண்டிருந்தனர். மீண்டும் நான் ஜே. சி. பென்னி அங்காடியில் நின்று கொண்டிருந்தேன், மறுபடியும் நரகத்துக்குச் சென்றேன். எனக்கு - எனக்கு - எனக்கு - பயம் உண்டானது. ''ஆண்டவரே, நான் மரித்துப் போகவில்லை ஆனால் நீர் இந்த இடத்திற்கு நான் வரும்படிக்குச் செய்துள்ளீர், அவ்வளவே தான் என்று உறுதியாக அறிகிறேன்“ என்று நினைத்துக் கொண்டேன். அவர்கள் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தனர்... இப்படி சுற்றிலும்... நான் தரிசனத்தில் கண்ட விதமாகவே அவர்கள் பேசினது காதுகளில் விழவேயில்லை. ஜனங்கள் நடமாடி குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தனர். ஸ்திரீகள் தானியங்கிப் படிகளின் வழியாக வந்து அங்குசுற்றி நடமாடிக் கொண்டிருந்தாலும், அந்த ”ஊ, ஊ“ வும், அந்தப் பச்சை நிற, விகாரப் பார்வை கொண்ட கண்களும், துக்ககரமானதும். 56மனைவி வந்தபோது, “தேனே, என்னை ஒரு நிமிடம் தனியே விடு. உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நான் - நான் - நான் வீட்டுக்குப் போக விரும்புகிறேன்” என்றேன். அவள், “உங்களுக்கு உடல் நலமில்லையா?” என்றாள். நான், ''தேனே, இல்லை, உனக்குக் கடையில் பொருட்கள் இன்னும் வாங்க வேண்டுமானால், போய் வாங்கிக்கொண்டு வா'' என்றேன். அவள், இல்லை, “நான் முடித்துவிட்டேன்'' என்றாள். நான், ''உன் கையை கோர்த்துக் கொள்ளுகிறேன்'' என்று சொல்லி வெளியே நடந்தேன். அவள், “என்ன விஷயம்?'' என்று கேட்டாள். நான், “மேடா, நான்... அங்கு ஒன்று சம்பவித்தது'' என்றேன். நான் அதை யோசித்துக் கொண்டிருந்தபோது, ''நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இது மூன்றாம் இழுப்பாக இருக்குமா?'' என்று சிந்தித்தேன். இங்கு சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன். 57இயேசு... இயேசு தமது ஊழியத்தில், ஜனங்களிடம் பிரசங்கித்த பின்பு, நாம் காண்கிறோம் (இதைக் குறித்து நாம் உண்மையில் வேதப் பூர்வமாக இருக்கப் போகிறோம்). இயேசு தமது ஊழியத்தை முடித்த பின்பு அவர் ஜனங்களால் புறக்கணிக்கப்பட்டார். (இப்பொழுது, நீங்கள் வரிகளுக்கிடையில் வாசிப்பீர்கள், உங்கள் சொந்த கருத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்). முதலில் நான் என்ன சொன்னேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் பிரசங்கம் செய்தபிறகு; அவர் அந்த நாளுக்கென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஒருவராக வந்தார். அது நம்மெல்லாருக்கும் தெரியும். வேத வாக்கியங்கள் இயேசு கிறிஸ்துவை மேசியாவென்று சுட்டிக் காண்பித்தன. அது உண்மை. அவர் மேசியாவென்று முற்றிலுமாக, திட்டவட்டமாக தேவனாலும் அவருடைய வார்த்தையிலும் உறுதிப்படுத்தப்பட்டார். அதைக் குறித்து எந்த கேள்வியும் இல்லை. அதை யாராவது கேள்வி கேட்கிறார்களா? ''அவர் மேசியா அல்லவென்று?'' அப்படி நீங்கள் செய்தால், நீங்கள் பீடத்துக்கு வர வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். அவர் மேசியாவென்று தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டார். அவர் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட பின்பு... தேவன் அவரை அடையாளப்படுத்தினார். 58பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு - அவன் நான்கு நாட்கள் கழித்து சனகரீப் சங்கத்தினரிடம் பேசினபோது, ''நசரேயனாகிய இயேசுவைக் கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார், அதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாயிருக்கிறோம். ஜீவாதிபதியாகிய அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலை செய்தீர்கள், தேவன் அவரை எழுப்பி, நீங்கள் காண்கிற இந்தக் காரியங்களைக் காணும்படிச் செய்தார் என்றான். கிறிஸ்து ஜீவித்துக் கொண்டே வந்தார். நிச்சயமாக, அவர் இன்றும் ஜீவிக்கிறார். 59இயேசு வந்து தெளிவாக தம்மை அடையாளம் காண்பித்த பிறகு (தேவன் அவரை அடையாளம் காண்பித்தார்), அவர் தீர்க்கதரிசனம் உரைத்த நாட்களுக்குப் பிறகு, அவர் வேதப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட போதிலும், ஜனங்கள் அவரைப் புறக்கணித்தனர். அது உண்மை. அவரை அவர்கள் புறக்கணித்தபின்பு, அவர் பிரசங்கம் செய்தார் - இங்கு இரட்சிப்படைய வாய்ப்புண்டாயிருந்தவர்கள். கவனியுங்கள். அவர் பிரசங்கித்தபோது யார் வேண்டுமானாலும் இரட்சிக்கப்பட வாய்ப்பிருந்தது. அவர்கள் யாரென்று நமக்குத் தெரியாது. அவர்கள் முன்குறிக்கப்பட்டவர்கள். அவர் தொடர்ந்து பிரசங்கம் செய்தார். 60அவர் பிரசங்கம் பண்ணின நாட்களுக்குப் பிறகும் அவருடைய ஊழியம் தொடர்ந்தது. ஏனெனில் அவர் பிரசங்கம் பண்ணின கடைசி கூட்டத்தார், மன்னிக்கப்பட முடியாத நரகத்திலிருந்த ஆத்துமாக்கள். நான் வேதாகமத்திலுள்ள 2 பேதுருவிலிருந்து அதைத் தெளிவாக வாசித்துக் காண்பித்தேன். அவர் போய் காவலிலுள்ள (அதுதான் நரகம்) ஆத்துமாக்களுக்குப் பிரசங்கம் செய்தார். அவர்கள் நியாயத்தீர்ப்பின் நாள் வரைக்கும் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் இப்பொழுது நியாயத்தீர்ப்பு இல்லை. இப்பொழுது எரிகிற நரகமும் இல்லை. இப்பொழுது ஒருவன் எரிகிற நரகத்தில் இருக்கிறான் என்று யாராகிலும் உங்களிடம் சொன்னால் அது தவறாகும். இப்பூமியிலுள்ள நீதிபதியும் கூட ஒரு மனிதனை நியாயஸ்தலத்தில் விசாரணை செய்யாமல், அவனைக் குற்றவாளியென்று தீர்ப்பதில்லை. தேவனும் தமது சொந்த பிரமாணங்களின் படி ஒரு மனிதனை முதலில் குற்றவாளியென்று தீர்க்காமல், அவனை அக்கினிச் சூளையில் போடுவதில்லை. அவன் இரக்கத்தைப் புறக்கணித்தான். எனவே அவன் முதலில் விசாரணை செய்யப்பட வேண்டும். அந்த விசாரணை மகா வெள்ளை சிங்காசன நியாயத் தீர்ப்பே. இப்பொழுது அவன் காவலறை என்று அழைக்கப்படும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கிறான். 61நான் தேவனுடைய கிருபையினால் இரண்டு ஸ்தலங்களையுமே தரிசனத்தில் கண்டேன் (நான் அவபக்தியாயிருக்க வேண்டுமென்று இதைக் கூறவில்லை. அது தவறாயிருக்குமானால், தேவன் என்னை மன்னிப்பாராக), நான் இரண்டு ஸ்தலங்களிலுமே இருந்திருக்கிறேன் என்று நம்புகிறேன் - இரண்டு ஸ்தலங்களிலும் - நான் மீட்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டவர்களை கண்டிருக்கிறேன். நான் இழக்கப்பட்டவர்களையும் அவர்கள் எங்கிருந்தனர் என்பதையும் கண்டிருக்கிறேன். அதனால்தான் உங்களுடைய சகோதரனாக இன்று நான் நின்று, கீழ் நோக்கிச் செல்லும் அந்த பாதையிலிருந்து விலகி ஓடுங்கள் என்று உங்களை எச்சரிக்கிறேன். அந்தப் பாதையில் நீங்கள் ஒருபோதும் செல்லவேண்டாம். அந்த ஆசீர்வதிக்கப்பட்ட மேல்நோக்கிச் செல்லும் வழியில் செல்வதற்கென, ஜீவிப்பதற்கான எல்லாவற்றையும் நீங்கள் கொண்டவர்களாக இருக்கிறீர்கள். அங்கு மீட்கப்பட்டவர்கள் சமாதானத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பாவம் செய்ய முடியாது. அவர்கள் வருத்தமாயிருக்க முடியாது. அங்கு அப்படியொன்றும் இல்லை - அவர்கள் பரிபூரணமானவர்கள். நான் இரண்டு ஸ்தலங்களையும் கண்டிருக்கிறேன். ஒருவன் அப்படிப்பட்ட வாக்குமூலத்தை அளிப்பது பயங்கரமானதென்று அறிவேன். ஆனால் தேவன் என் நியாயாதிபதி. நான் அந்த இரண்டு ஸ்தலங்களையும் கண்டிருக்கிறேன் என்று பயபக்தியுடன் நம்புகிறேன். அதை நான் நம்புகிறேன். 62இழக்கப்பட்டவர்களின் ஸ்தலத்தில் பிரவேசிப்பதென்பது எந்த ஒருவனுக்கும் தூரமாயிருப்பதாக! இங்கு சூடான இரும்புக் கம்பிகளினால் நீங்கள் துளைக்கப்பட்டு எல்லா விதங்களிலும் துன்புறுத்தப்பட நேரிட்டால், அந்த இடத்தில் பிசாசானவன் உங்களை உபத்திரவப்படுத்துவதுடன் இதனை ஒப்பிடும்போது, இது ஒன்றுமில்லை. அதற்கு எதுவுமே ஈடாகாது. மனித சிந்தை கிரகித்துக்கொள்ள முடியாது. இழக்கப்பட்டோரின் ஸ்தலம் எவ்வாறு உள்ளது என்பதை மனித சிந்தை கிரகித்துக் கொள்ளவே முடியாது. அதை விவரிக்கவே முடியாது. அது போன்று, ஆசீர்வதிக்கப்பட்டோரின் ஸ்தலம் எவ்வாறு உள்ளது என்பதையும் விவரித்துக் கூறவே முடியாது. அது மிகவும் மகத்தானது. ஒன்று மிகவும் பயங்கரமானது. மற்றது மிகவும் மகத்தானது - கேலிப் பரியாசத்திலிருந்து உயர்வானதற்கு செல்வதைப் போன்றது. எனவே, ஒருவன் எனக்கு செவி கொடுத்தால்... 63நான் வயோதிபனாகி வருகிறேன். இன்னும் எவ்வளவு காலம் எனக்குண்டு என்பதை அறியேன். விரைவில் எனக்கு ஐம்பத்தைந்து வயதாகிவிடும். இயற்கையின் விதியின்படி, நான் அநேக ஆண்டுகள் உயிர்வாழ முடியாது. இந்த ஒலிநாடா எங்கு செல்லும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இங்குள்ள ஒவ்வொருவருக்கும், இந்த ஒலிநாடா எங்கெல்லாம் செல்கின்றதோ அதை கேட்பவர்களுக்கும் நான் கூறுவது என்னவெனில்; இழக்கப்பட்டோரின் ஸ்தலத்திற்கு நீங்கள் ஒருக்காலும் செல்லவேண்டாம். நரகம் எவ்வளவு பயங்கரமாயுள்ளது என்பதை நீங்கள் கற்பனை செய்யவே முடியாது. நீங்கள் என்ன செய்தாலும், இதை மறந்து போகவேண்டாம். ஆசீர்வதிக்கப்பட்டோரின் ஸ்தலம்... இதை நான் பரி. பவுலுடன் சேர்ந்து கூற விரும்புகிறேன்: “தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷடைய இருதயத்தில் தோன்றவுமில்லை.'' எனவே, நீங்கள் இந்த ஒலி நாடாவைக் கேட்டுக் கொண்டிருக்க நேரிட்டால், அதை நிறுத்திவிட்டு, நீங்கள் ஏற்கனவே இரட்சிக்கப்படவில்லையென்றால், மனந்திரும்பி தேவனோடு சீர்ப் பொருந்துங்கள். 64இதை நான் நேரில் கண்ட அனுபவத்தையொட்டி கூறுகிறேன். அப்படி கண்டேன் என்று என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன். இந்தத் தரிசனங்கள் என்னை வஞ்சித்திருந்தால், இப்படிப்பட்ட ஒரு வாக்குமூலத்தை நான் அளித்ததற்கு தேவன் என்மேல் கிருபையாயிருப்பாராக! ஆனால் உத்தம இருதயத்துடன் தரிசனங்கள் ஒன்றும் தவறாய் போனதில்லை என்பதை அறிந்தவனாய், நான் இரண்டு ஸ்தலங்களுக்குமே சென்றிருக்கிறேன் என்று நம்புகிறேன். கீழ் நோக்கிச் செல்லும் சாலையின் வழியாக பிரயாணம் செய்வது எந்த மனிதனுக்கும் தூரமாயிருப்பதாக! 65இயேசு, தமது ஊழியத்தை முடித்தபிறகு, ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாத அந்த ஆத்துமாக்களுக்குப் பிரசங்கம் செய்தார். வேதம் அவ்வாறு நமக்குக் கூறுகிறது. மனந்திரும்பாத காவலிலுள்ள ஆத்துமாக்களுக்கு அவர் சென்று பிரசங்கம் செய்தார். அவர்களுக்கு கிருபை அளிக்கப்பட்ட போது, அவர்கள் அதைப் புறக்கணித்துவிட்டனர். இப்பொழுது அவர்கள் நியாயத்தீர்ப்புக் கென்று காத்திருக்கின்றனர். ஓ, அது என்னே ஒரு சமயமாக இருந்திருக்க வேண்டும்! இந்த உண்மையை உலகத்தார் அறிந்துகொள்ள, ஏதாவதொரு வழியில் உலகத்தை என்னால் குலுக்கி அதை உணர வைக்க முடியுமானால் எவ்வளவு நலமாயிருக்கும்! 66இயேசு தாமே, “பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்று கூறினார். பிதா அவரை ஜீவிக்கின்றவர்களுக்கு நம்பிக்கைக் கொண்டிருந்தவர்களுக்கு பிரசங்கம் செய்ய அனுப்பினார். அதன் பின்பு அதே செய்தியை நம்பிக்கையே அற்ற ஜனங்களுக்கு அளிப்பதற்கு அனுப்பினார். எனவே அதையே இக்காலத்திலும் செய்ய வேண்டும் என்பது மிகவும் பொருத்தமாய் காணப்படுகின்றது. ஏனெனில் நம்மில் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவர் தமது சுபாவத்தை மாற்றிக் கொள்வதில்லை, அல்லது தேவனுடைய முறைமையை மாற்றுவதில்லை. அவர் ஒவ்வொரு சந்ததியிலும் மாறாதவராகவே இருக்க வேண்டும். அவர் மாறாதவராக இருந்தே ஆகவேண்டும். பிதா என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்“ என்றார் அவர். 67ஊழியங்கள் அதேவிதமாகத் தான் இருக்கவேண்டும். எனவே அவர் சொன்னார்... (உங்களில் சிலர் வேத வாக்கியங்களைக் குறித்துக் கொள்வதைக் காண்கிறேன்). யோவான் 14:12,... ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.'' பாருங்கள், ''கிரியைகள்“ இழக்கப்பட்டோருக்குப் பிரசங்கித்தல்; வியாதியஸ்தர்களை சுகப்படுத்துதல், அதன்பின்பு ஒருபோதும் இரட்சிக்கப்படக் கூடாதவர்களுக்கு ஆகிய கிரியைகள். அதேவிதமாகத்தான் கிரியை நடந்து வந்தது. எனவே இது எப்படி இருந்ததென்றால், (இது அவ்வாறு இருந்ததா?) இதை நான் இவ்விதம் கூற விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் ஊழியம் இந்த கடைசி நாட்களில் மறுபடியுமாக மாம்சத்தில் அவருடைய சபையில் வெளிப்படுத்தப்படுகிறது. அதைத்தான் நம்மில் அநேகர் விசுவாசிக்கிறோம். உங்களோடு சேர்ந்து நானும் அவ்வாறே விசுவாசிக்கிறேன். இதை நான் விசுவாசிக்கிறேன். இதை நான் விசுவாசிக்காவிட்டால், இதைக் குறித்து வேறெதாவதொன்றைச் செய்வேன். ஏனெனில் இதில் சம்பந்தப்பட்டவன் நானே. தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசம் செய்தால் நீங்கள் ஜனங்களுக்காக கவலை கொள்பவராயிருப்பீர்கள். என்னை எப்பொழுதும் தடுமாறச் செய்யும் ஒரு வேத வாக்கியம் இருந்தது. அதாவது, எப்படி மோசே தேவனுடைய கருத்தைக் காட்டிலும் சிறந்த ஒரு கருத்தை தேவனிடம் கூற முடிந்தது என்பதே. ஆனால் முடிவில் அது மோசேக்குள் வாசம் செய்த கிறிஸ்துவின் ஆவி என்பதை அறிந்து கொண்டேன். புரிகின்றதா? தேவன், “மோசே, உன்னை அவர்களிடமிருந்து பிரித்துக் கொள். நான் எல்லாவற்றையும் அழித்துவிட்டு, உன்னிலிருந்து தொடங்குவேன்” என்றார். 68அவனோ, ''கர்த்தாவே, (அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலில் அவன் நின்றான்), என்னை எடுத்துக்கொள்ளும். என் பெயரைக் கிறுக்கிப்போடும்'' என்றான். ஓ, எந்த ஜனங்கள் முரட்டாட்டம் பண்ணினார்களோ, அவர்களுக்காக அவனுடைய இருதயம் பரிதபித்தது. ஒரு ஊழியக்காரன் தன் இருதயத்தில் ஜனங்களை நேசிக்கும் போது... என்னைக் காட்டிலும் நான் அதிகமாக நேசிக்கும் ஜனங்களிடம் எதையாகிலும் மறைத்து வைப்பேனானால், நான் எப்படி தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருக்க முடியும்? ஒருவர் ஒரு நபரை கைகுலுக்குதலின் மூலமாகவோ, அல்லது தெளிப்பு அல்லது தவறான ஞானஸ்நானம் அல்லது வேறெதாவதொன்றின் மூலமாகவோ சபையில் சேர்த்துக்கொண்டு, அவனை பொய்யான காரியங்களில் ஈடுபடுத்திவிட்டு, அங்கு வேதாகமம் உள்ளது என்று அறிந்திருந்தும், அவரை நேசிப்பதாக எப்படி கூறமுடியும்? என்னுடைய ஜீவனத்திற்காக நான் பிச்சையெடுக்க நேரிட்டாலும், அல்லது வேறெந்த நிலைமை வந்தாலும், ஜனங்களுக்கு சத்தியத்தை எடுத்துரைப்பதில் நான் தேவனுக்கும் ஜனங்களுக்கும் உத்தமமாக இருப்பேனாக! நான் ஒருபோதும் வஞ்சகனாக இருக்க வேண்டாம். நான் நேசிக்கிறவர்களை எப்படி வஞ்சிக்கமுடியும்? அவர்களுடைய மனதை நான் புண்படுத்த நேரிட்டாலும், அவர்களை நான் நேசிக்கிறேன். உங்கள் பிள்ளையை நீங்கள் அடித்து வளர்க்கும் காரணம், நீங்கள் அவனை நேசிப்பதனால்தான். அவன் மேல் உங்களுக்குப் பிரியம் இல்லை என்பதனால் அல்ல, நீங்கள் அவனை நேசிக்கிறீர்கள் என்பதனால் தான். அவன் தவறாயிருந்து, அவனை நீங்கள் திருத்தாவிட்டால், அவன் கொலை செய்யப்படுவான். 69ஊழியமும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. அன்று இருந்தது போலவே, இன்றும் இருந்து வருகிறது. அது பிரசங்கிக்கப்பட்டு தேவனுடைய வார்த்தையினால் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மனிதனாயிருக்க முடியாது, இது தேவனாயிருக்க வேண்டும் என்பதை அது ஊர்ஜிதப்படுத்துகின்றது. அது அப்படித்தான் இருக்கவேண்டும். கவனியுங்கள். இயேசு செய்த அதே ஆவிக்குரிய அடையாளங்கள் இந்தக் கடைசி நாட்களில் பூமியில் மீண்டும் சம்பவித்துள்ளது. எந்த ஆவிக்குரிய அடையாளத்தினால் அவர் தம்மை மேசியாவென்று அடையாளம் காண்பித்தாரோ, அதே ஆவிக்குரிய அடையாளம் இன்றைக்கும் அவரை அடையாளம் காண்பித்துவிட்டது. அவர் இன்னமும் மேசியாவாக இருக்கிறார்! பரி. பவுல் கண்ட அதே அக்கினி ஸ்தம்பம், இன்றைக்கும் புலப்படக் கூடிய அடையாளமாக பூமியில் தோன்றி, தம்மையாரென்று காண்பித்துள்ளது - அதே அக்கினி ஸ்தம்பம். அது அதே தன்மைகளுடன் தோன்றி, அதே கிரியைகளை செய்து கொண்டிருக்கிறது. 70பிதாவானவர் அவருக்குக் காண்பிக்காமல், அவர் தாமாக ஒன்றையும் செய்யமாட்டார் என்று இயேசு கூறினார். பிதா என்பவர் பரிசுத்தஆவியே, அதை நாம் உணருகிறோம். அது தேவனுடைய ஒரு உத்தியோகம் மாத்திரமே. இல்லையெனில், அவர்களிருவரில் இயேசு கிறிஸ்துவின் பிதா யார்? இயேசு, தேவன் தமது பிதா என்பதாகக் கூறினார். வேதாகமம் பரிசுத்த ஆவி அவருடைய பிதா என்பதாகக் கூறுகிறது. அவரை முறைதவறிப் பிறந்த குழந்தையாக நீங்கள் ஆக்கமுடியாது. எனவே பரிசுத்த ஆவியானவர் தேவன். அப்படியே இயேசுவும் தேவன். எனவே தேவன் - பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. இவை ஒரே தேவனின் மூன்று உத்தியோகங்களாம். அது மூன்று தன்மைகள்; அதே தேவன். நீங்கள் தேவனின் ஒரு பாகமாயிருக்கிறீர்கள், நான் தேவனின் ஒரு பாகமாயிருக்கிறேன். நான் தேவனின் முழுமை அல்ல, நீங்களும் தேவனின் முழுமை அல்ல. பாருங்கள்? பாருங்கள்? இயேசு கிறிஸ்துவின் சுவீகாரப்புத்திரர் என்னும் முறையில் தேவனுடைய தன்மைகள் நம் மேல் தங்கியுள்ளன. அவர் நமக்காக மரிக்க மாம்சத்தில் தோன்றிய தேவன். 71வரப்போகும் காரியங்களை பரிசுத்த ஆவியானவர் தாமே அவருக்கு எப்பொழுதுமே காண்பித்தார். அவர் ஒருபோதும் தவறாயிருந்ததில்லை. அது எப்பொழுதுமே பரிபூரணமாகவே இருந்தது. அது சரியா? இயேசு புகழை எடுத்துக் கொள்ளவில்லை, அவர் தேவனுக்குப் புகழை செலுத்தினார். அவர், ''பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாகச் செய்யமாட்டார்“ என்றுரைத்தார். பிதாவும்... பரிசுத்த ஆவியானவர்தான் அவர் பிதா. அது சரியா? ”தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது'' பரிசுத்த ஆவியானவர் அவருடைய பிதா. வரப்போகும் காரியங்களை பரிசுத்த ஆவியானவர் இயேசுவுக்குக் காண்பித்தார் - ஏற்கனவே சம்பவித்த காரியங்களையும் அவருக்கு அறிவித்தார். அவர் தேவன் - தீர்க்கதரிசி. ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசியினிடத்தில் மாத்திரமே வருகிறது. வார்த்தை குறைவான அளவிலே தீர்க்கதரிசிகளிடத்தில் வருகிறது. தேவன் அவர்களிடம் கூறினவைகளை தீர்க்கதரிசிகள் எழுதி வைத்தனர். ஆனால் இயேசுவோ ஒன்றுமே எழுதவில்லை, ஏனெனில் அவரே வார்த்தை. அவரே வார்த்தையாக இருந்தார். 72கவனியுங்கள், அவருக்குள் வாசம் செய்த அதே பரிசுத்த ஆவியானவர், “இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். ஏனெனில் உலகத்தின் முடிவு பரியந்தம் நான் உங்களோடிருந்து உங்களுக்குள் இருப்பேன். நான் உங்களிடத்திற்கு திரும்பி வருவேன்” என்றார். அவர், ''அவருக்குள் இருந்த பிதா நான்தான், நானே உங்களிடத்திற்கு திரும்பி வருவேன்'' என்றார். ''பரிசுத்த ஆவி உங்கள் மேல் வரும் போது, நான் உங்களுக்கு போதித்த யாவையும் உங்களுக்கு வெளிப்படுத்தி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்“ என்றார். பார்த்தீர்களா? 73பரிசுத்த ஆவியானவர் அன்று சபையில் கிரியை செய்த விதமாகவே, இன்றும் அதே காரியங்களை செய்திருக்கிறார் என்று நாம் காண்கிறோம், ஆதியில் அக்கினி ஸ்தம்பத்தின் மூலம் அறிவித்த வண்ணமாகவே, அதே காரியம். அக்கினி ஸ்தம்பம் இயேசுவின் மேல் இறங்கி வருவதை கண்டபோது, யோவான் ஸ்நானன் அதை யோர்தான் நதியில் அறிவித்தான். அது இப்பொழுதும் நிரூபிக்கபபட்டுவிட்டது. விஞ்ஞானம் கூட அதை புகைப்படம் எடுத்து விட்டது. அது மறுக்கப்பட முடியாத உண்மை. அது விஞ்ஞானப் பூர்வமாக உறுதியான ஒன்றாக உள்ளது. இது கட்டுக்கதை கருத்தோ, மனோதத்துவமோ அல்ல. ஜார்ஜ் ஜே. லேஸி கூறின விதமாக, ''புகைப்படக் கருவியின் இயந்திரக் கண் மனோதத்துவத்தைப் புகைப்படம் எடுக்காது. ஒளி புகைப்படக் கருவியின் கண்ணாடியின் மேல் விழுந்தது.'' 74சபையே, ஆறு அல்லது எட்டு மாதங்களுக்கு முன்பு இங்கு நின்றுகொண்டு, “கர்த்தர் உரைக்கிறதாவது, நான் அரிசோனாவிலுள்ள டூசானுக்குச் செல்கிறேன். அங்கு வெடி உண்டாகும். அப்பொழுது ஏழு தூதர்கள் தோன்றுவார்கள்'' என்று கூறினேன் அல்லவா? உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? (சபையார் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி.) 'லுக்' பத்திரிக்கை அந்த புகைப்படத்தை எடுத்து பிரசுரித்தது. தேவன் அதை அந்த அளவுக்கு நிஜமாக்கினார். ஆவிக்குரியது. முன்கூட்டி காணுதல். அது அவ்வாறே நிறைவேறினது. அந்த ஏழு தூதர்கள் எல்லா வேத வாக்கியங்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் செய்தியைக் கொண்டு வந்தார்கள். ஏனெனில் முழு வேதாகமத்தின் எல்லா பரம ரகசியங்களுமே ஏழு முத்திரைகளில் அடங்கியுள்ளன. அது நமக்குத் தெரியும். அது அந்த புஸ்தகம், அதன் முத்திரை, அதோடு எல்லாமே சமமாக்கப்பட்டு வெளிப்பட்டது. அந்த முழு புஸ்தகத்தின் இரகசியம் அது, அந்த ஏழு முத்திரைகளில் வைக்கப்பட்டுள்ளது. அதை நாம் கொண்டு வர தேவன் அனுமதித்தார். 75அது சம்பவித்தபோது என்னுடன் இருந்தவர்கள் இன்று இங்கு அமர்ந்துள்ளனர். அது உண்மையாக சம்பவித்தது என்பதை 'லுக்' பத்திரிக்கை நிரூபித்தது. ஏனெனில் தேவன் தான் அது சம்பவிக்குமென்று கூறினார். அதை செய்வதாகக் கூறிய தேவன் தம்முடைய வார்த்தையை ஆதரித்து அதை நிறைவேற்றுகிறார். எனவே ஜனங்களாகிய உங்கள் மத்தியிலிருப்பது, ஏதோ என்னைப் போன்ற மாம்சப்பிரகாரமான ஒரு மனிதன் அல்ல, அது நித்திய தேவன் அவர் மனிதனை உபயோகிக்கிறார், அது உண்மை. அவர் மனிதனின் மூலம் கிரியை செய்வதைத் தவிர வேறு எவ்விதத்திலும் கிரியை செய்வதில்லை. நாம் அதை அறிந்திருக்கிறோம். மனிதன் தான் அவருடைய பிரதிநிதி, அவனைத்தான் அவர் தெரிந்து கொண்டார். ஏன் என்று எனக்குத் தெரியாது. அவர் சூரியனைக் கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்க முடியும். அவர் காற்றைக் கொண்டு சுவிசேஷத்தைப் பிரசங்கித்திருக்க முடியும். ஆனால் அவர் மனிதனைத் தெரிந்து கொண்டார். மனிதன் தான் மனிதனோடு பேச வேண்டுமென்பது அவருடைய எண்ணம். அவரே நேரடியாகப் பேசுவதில்லை. ஆனால், ''கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளுக்கு வந்தது. தீர்க்கதரிசனம் உரைப்பவர்கள், பிரசங்கிமார்கள். மூல வார்த்தையை தீர்க்கதரிசனம் உரைக்கும் பிரசங்கி மறுதலிப்பானானால், அவன் எப்படி உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? இருக்கவே முடியாது. ஏனெனில் அவன் வார்த்தையின் சத்தியத்தை மறுதலிக்கிறான். இல்லையெனில் - இந்த வார்த்தையானது, வார்த்தையின் முழு நிச்சயத்தோடும், பரிசுத்த ஆவியின் முழு நிச்சயத்தோடும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது.அது வாக்குத்தத்தம் செய்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் நிறைவேற்றும். அவ்வாறே அது உண்மையா இல்லையாவென்பதை அறிந்து கொள்கிறோம். இயேசுவும் அதைத்தான் கூறினார்: ''நான் செய்வேன் என்று எழுதியிருக்கிற கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை.'' இப்பொழுது; இந்தக் காரியங்களை நாம் பார்க்கிறோம். 76ஏழு முத்திரைகளும் வெளிப்பட்டு முடிந்துவிட்டன என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அந்த ஏழு வெளிப்பட்ட சத்தியங்கள். அவைகளில் ஒன்றை நாம் தெரிந்துகொள்ள அவர் அனுமதிக்கவில்லை. ஏழு முத்திரைகள் பிரசங்கிக்கப்பட்ட போது எத்தனை பேர் இங்கிருந்தீர்கள்? எல்லோருமே என்று நினைக்கிறேன். ஏழாவது முத்திரை, அவர் அனுமதிக்கவில்லை. அவர் அந்த அறையில் நின்றுகொண்டு, அவைகளில் ஒவ்வொன்றையும் வெளிப்படுத்தினார். என் வாழ்நாளிலே பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் நான் எதையாகிலும் பிரசங்கித்திருந்தால், அது இதுதான். இங்கு நான் நின்றுகொண்டு அது சம்பவிக்கப் போகிறது என்று சொன்னேன் என்பது உண்மையென்று உங்களுக்குத் தெரியும். அங்கு நான் சென்று, விஞ்ஞானமும் மற்ற அனைத்தும், விஞ்ஞான ஆராய்ச்சியும் மற்ற அனைத்தும் - ஜனங்களுக்கு அது என்னவென்று புதிராக இருந்தபோது -அது நடந்தது என்பதை நிரூபித்தது. நான் மறுபடியும் வந்து, அது வெளிப்படுத்தப்படுவதைக் கேட்டு, ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று நிரூபித்தது. நாம் எந்த நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நாம் எங்கே இருக்கிறோம்? 77ஆறாம் முத்திரையின் கீழ் எல்லா ஏழு எக்காளங்களுமே முழங்குகின்றன என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்... நாம் அதைப் பிரசங்கிக்கும் போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அந்த ஆறாம் முத்திரையில் ஏழு எக்காளங்களுமே முழங்கின. 'ஏழு' எப்பொழுதுமே பரம ரகசியம் தான். அந்த ஏழாவதை கவனியுங்கள். அதுவே முடிவு. அது கர்த்தருடைய வருகை. பரலோகம் அமைதியாக இருந்தது. ஒருவருமே அசையவில்லை. ஏனெனில் இயேசு, “நான் எப்பொழுது திரும்பி வருவேன் என்று பரலோகத்திலுள்ள ஒரு தூதனும் அறியான். அது எந்த நேரம் என்று எனக்கே தெரியாது. தேவன் ஒருவர் மாத்திரமே அதை தம் சிந்தையில் இரகசியமாக வைத்திருக்கிறார்” என்றார். தேவன் ஒருவர் மாத்திரமே அதை அறிவார் -ஆவியானவர். அப்பொழுது ''அது எனக்குத் தெரியவில்லை'' அப்பொழுது வெளிப்படுத்தப்படவில்லை. ஏழாம் எக்காளம் எப்பொழுது முழங்கினது அல்லது ஏழாம் தூதன் அல்லது முத்திரை திறக்கப்பட்டது, பரலோகத்தில் அமைதல் உண்டாயிற்று; என்ன சம்பவிக்கப் போகின்றது என்பது அறிவிக்கப்படவில்லை. 78ஆனால் ஆறாம் முத்திரையின் கீழ் இந்த எக்காளங்கள் முழங்கினபோது, ஆட்டுக் குட்டியானவர் புறப்பட்டு வந்து காட்சியிலே தோன்றினார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர் கிருபாசனத்தை விட்டு வந்துவிட்டார். அவருடைய மீட்பின் கிரியை முடிந்துவிட்டது. அவர் வந்து, சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருடைய வலது கரத்திலிருந்து புத்தகத்தை வாங்கினார். அப்பொழுது “இனி காலம் செல்லாது”. உடனே வெளிப்படுத்தல் 10 அதிகாரம் 7-ம் வசனத்தில் ஒருதூதன் தோன்றி, “இனி காலம் செல்லாது” என்று தூதன் ஆணையிட்டு சொன்னதாக அறிவிக்கிறான். ஆனால் பாருங்கள். இந்த புஸ்தகத்தில் இருந்தது, என்னவென்றால், மீட்கப்பட்டது எல்லாம் காணப்பட்டது. அது மீட்பின் புத்தகம். அவர் மீட்ட ஒவ்வொன்றும் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அவர் யாருக்காக மரித்தாரோ, அவர்களுடைய பெயர்கள் எல்லாம் அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. அவர் சிலுவையில் மீட்டுக் கொள்ள முடியாதவர்களை முழுவதுமாக மீட்கும் வரைக்கும், அவருடைய மத்தியஸ்த ஆசனத்தை விட்டு அவர் வரமுடியவில்லை. ஏனெனில் இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் முன்குறிக்கப்பட்டிருந்தனர். அதில் காணப்படும் கடைசி நபர் மீட்கப்படும் வரைக்கும், அவர் அங்கேயே தங்கி பரிந்து பேச வேண்டியதாயிருந்தது. மகிமை! 79ஆனால் ஒருநாள் அவர் சிங்காசனத்தை விட்டு எழுந்து புறப்பட்டு வருகிறார். அப்பொழுது அந்தப் புத்தகம் எங்கிருந்தது? அது அப்பொழுதும் அதன் சொந்தக்காரராகிய சர்வ வல்லமையுள்ள தேவனிடத்தில் இருந்தது. யோவான் சுற்றிலும் பார்த்தான். அந்தப் புத்தகத்தை ஒருவனும் பார்க்க முக்கியமாக, முத்திரைகளைத் திறந்த மறைக்கப்பட்டுள்ள ரகசியம் என்னவென்பதை வெளிப்படுத்த தகுதியில்லாதவனாய் இருந்ததால், அவன் அழுதான். அந்த பரம ரகசியங்கள் ஏழு முத்திரைகளில் அடங்கியிருந்தன. இந்த ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டபோது, முத்திரைகள் வேதாகமத்தையும் திறந்துவிட்டது. அந்த ஏழு முத்திரைகள் ஏழு ரகசியங்களால் முத்தரிக்கப்பட்டிருந்தன. இந்த ஏழு முத்திரைகளும், பரமரகசியம் அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டிருந்தன. அது மீட்பின் புத்தகம் - புதிய ஏற்பாடு. பழைய ஏற்பாடு, அல்ல. புதிய ஏற்பாடு என்னவென்பதை வெளிப்படையாக அறிவித்தது. “அவர்கள் நம்மையல்லாமல் பூரணராக முடியாது'' எபிரேயர். 11. மீட்பர் மரித்தால்தான் மீட்பே வருகிறது. அவர்கள் (பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் - தமிழாக்கியோன்) ஆட்டுக்குட்டிகளின் இரத்தத்தினால் மூடப்பட்டிருந்தனர் - மீட்பரின் இரத்தத்தினால் அல்ல. மீட்பர் வரும் வரைக்கும் அவர்கள் மீட்கப்படவில்லை. 80கவனியுங்கள். இப்பொழுது இந்த மீட்பர்... யோவான் சுற்றிலும் பார்த்தான். தேவன் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்ட அந்தப் புத்தகத்தைத் தமது கையில் கொண்டவராய் சிங்காசனத்தில் வீற்றிருந்தார். மீட்பின் முழு திட்டமே அந்தப் புத்தகத்தில் அடங்கியிருந்தது. அது மானிடவர்க்கத்தால் இழக்கப்பட்டிருந்தது - ஆதாமின் காரணமாக. தேவன்... அது எங்கே திரும்பி சென்றது?சாத்தான் அதை எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆதாம் அதை இழக்க அவன் காரணமாயிருந்தான். ஆனால் அப்பொழுது அந்தப் புத்தகம் எங்கே சென்றது? அது மானிடவர்க்கத்திற்கு சொந்தமாயிருக்கவில்லை; (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக தடவை தட்டுகிறார் - ஆசி.) ஆசீர்வாதங்கள் அவர்களுக்கில்லை. மானிடவர்க்கம் அதை இழந்துவிட்டது. எனவே அது மூல சொந்தக்காரரிடமே திரும்பி சென்றது; அதுதான் தேவன். அவர் அந்தப் புத்தகத்துடன் வீற்றிருந்தார். யாராவது ஒரு மனிதன், முன் வந்து அதை பெற்றுக் கொள்ளும்படி அவர் அழைப்பு விடுத்தார். 81யோவான் சுற்றிலும் பார்த்தான். வானத்திலாவது, பூமியிலாவது எந்த ஒரு மனிதனோ, அல்லது தேவதூதனோ; யாருமே அந்த புத்தகத்தை எடுக்கவோ, அல்லது முத்திரைகளை உடைக்கவோ, அல்லது அதைப் பார்க்கவோ கூடாதிருந்தது. ஒரு மனிதனும் பாத்திரனாயிருக்கவில்லை. யோவான், தான் மனங்கசந்து அழுத்தாக கூறினான். அப்பொழுது ஒரு தூதன் அவனிடத்தில் வந்து, “யோவானே, அழாதே. ஏனெனில் யூதா கோத்திரத்து சிங்கமானவர் ஜெயங் கொண்டிருக்கிறார், அவர் பாத்திரராயிருக்கிறார்'' என்றான். யோவான் சிங்கத்தைப் பார்க்கத் திரும்பினான். ஆனால் அவன் எதைப் பார்த்தான்? ஆட்டுக்குட்டியை. அது இரத்தம் தோய்ந்த ஆட்டுக்குட்டி. அது அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாயிருந்தது. எவ்வளவு காலமாக? உலகத்தோற்றத்துக்கு முன்பே. ஆட்டுக்குட்டியானவர் வலது கரத்திலே புத்தகத்தை வைத்துக் கொண்டிருந்தவரிடம் நடந்து வந்து, அந்த புத்தகத்தை வாங்கினார். அவர் சிங்காசனத்தின் மேல் ஏறி அதில் அமர்ந்து கொண்டார். அதுதான். அது முடிந்துவிட்டது. எப்பொழுது? முத்திரைகள் வெளிப்படுத்தப்பட்ட போது கடைசி நபர்... அவர் மீட்டுக்கொண்ட அனைத்துமே, அங்கு ஒன்றுமில்லை. அவர் மீட்க வந்தார். ''அவர் ஏன் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மீட்கவில்லை? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மீட்கவில்லை?'' 82அவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில் இருந்தது. அவர் அங்கு நிற்க வேண்டும், ஏனெனில் அவர்களை மீட்பது தேவனுடைய நோக்கமாயிருந்தது. அவர்களுடைய பெயர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. ஆட்டுக்குட்டியானவரும் அடிக்கப்பட வேண்டுமென்று, அவரும் அவர்களுடன் புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். அடிக்கப்பட்ட ஆட்டுக் குட்டியானவர் திரும்ப வந்து, பரிந்து பேசுகிறார். அவரைக் கவனியுங்கள். அநேக போலிகளும், மற்றெல்லாருமே எழும்புவார்கள். ஆனால் உண்மையாகவே யாராகிலும் இரட்சிக்கப்படுவார்கள், ஏனெனில், சபை முன்குறிக்கப்பட்டுள்ளது. கறைதிரையற்றவளாய் அவள் அங்கு இருப்பாள். ஆட்டுக்குட்டியானவர் அந்த நோக்கத்திற்காகவே மரித்தார். அந்த புத்தகத்திலுள்ள கடைசி பெயர் மீட்கப்பட்ட போது, ஆட்டுக் குட்டியானவர் வந்து அந்த புஸ்தகத்தை வாங்கினார். “அதை செய்தது நானே!'. 83தேவதூதர்களும், சேராபீன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும், மிருக ஜீவன்களும், எல்லாருமே தங்கள் கிரீடங்களைக் கழற்றி வைத்து, சிங்காசனத்திற்கு முன்பாக விழுந்து, “நீர் ஒருவரே பாத்திரராயிருக்கிறீர்'' என்றனர். யோவான், 'நான்' 'ஆமென்' என்று கூச்சலிட்டதை வானத்திலும் பூமியிலுமுள்ள அனைத்துமே கேட்டன'' என்றான் - தேவனுக்கு அல்லேலூயாக்களையும் துதிகளையும் ஏறெடுத்து ஆர்ப்பரித்தல். ஆர்ப்பரிப்பின் சத்தம் மேலே எழும்பினது. ஏன்? அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த அவர்களுடைய பெயர்கள் வெளிப்பட வேண்டியதாயிருந்தது, ஆட்டுக்குட்டியானவர் அதை வெளிப்படுத்தினார். 84ஆட்டுக்குட்டியானவர் அவர்களை மீட்டுவிட்டார். ஆனால் ஒவ்வொரு பெயரும் வெளியாகும் வரைக்கும் அவரால் வரமுடியவில்லை. அது ஆறாம் முத்திரையின் கீழ், ஏழாவது உடைக்கப்படுவதற்கு முன்பு, சம்பவித்தது. (அப்பொழுது அந்த கறையற்ற...) அதன்பின்பு ஆட்டுக்குட்டியானவர் மீட்டுக் கொண்டவர்களுக்காக வந்து, அவர் மீட்டவர்களை உரிமைகோர வருகிறார். அவர் ஏற்கெனவே, பெற்றுக்கொண்டார், சரியாக இங்கே அந்த புஸ்தகத்தில், அதை அவருடைய கரத்திலிருந்து எடுத்தார். அவர் மீட்டுக் கொண்டவர்களைப் பெற்றுக்கொள்ளவே அவர் வருகிறார். அதுவே அவருடைய பணி, அதை அவர் செய்தார், அதை பெற்றுக் கொள்ள அவர் வந்துள்ளார். ஓ, என்னே தருணம்! அதை நிரூபித்தார், ஏழாம் முத்திரை அதை நிரூபித்து விட்டது. திரும்பவும் வந்து மீட்பின் புத்தகத்தை கையிலெடுத்தார். 85கவனியுங்கள், ஏழாம் தூதனின் செய்தியே அந்த ஏழாவது, அந்த ஏழு முத்திரைகளை வெளிப்படுத்த வேண்டும் அது வெளி. 10:7-இப்பொழுது நீங்கள் அதை காண்பீர்கள். இந்தத் தூதன் இறங்கி வந்து, தன் பாதங்களை பூமியின் மேலும் சமுத்திரத்தின் மேலும் வைப்பதை அவன் பார்த்தான் (அது கிறிஸ்து), அவருடைய சிரசின்மேல் வானவில் இருந்தது (அவரைக் கவனியுங்கள், வெளிப்படுத்தல் முதலாம் அதிகாரத்தில், அவருடைய சிரசின்மேல் வானவில் இருப்பதை நீங்கள் காண்பீர்கள்- பார்வைக்கு வச்சிரக் கல்லுக்கும் பதும ராகத்துக்கும் ஒப்பானவர்). அவர் இங்கு வந்து, ஒரு பாதத்தை பூமியின்மேலும், மற்ற பாதத்தை சமுத்திரத்தின் மேலும் வைத்து, கைகளையுயர்த்தி, அப்பொழுதும் அவருடைய சிரசின்மேல் வானவில் இருந்தது. அது ஒரு உடன்படிக்கை. அவர் உடன்படிக்கையின் தூதனாகிய கிறிஸ்து. அவர் பாடுபடுவதற்கென்று தேவ தூதரிலும் சற்று சிறியவராக்கப்பட்டார். அவர் இங்கே வந்து, தமது கைகளை வானத்துக்கு நேராக உயர்த்தி, இது சம்பவிக்கும் போது இனி காலம் செல்லாது என்று சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவர் நித்தியமானவர், பிதா - தேவன் மேல் ஆணையிட்டுச் சொன்னார். காலம் கடந்துவிட்டது. அது சம்பவித்துவிட்டது; அது முடிந்துவிட்டது. 86மேலும் வேதம், ''பூமிக்குரிய ஏழாம் தூதனின் செய்தியின் போது - (பூமியிலுள்ள அந்த செய்தியானள்,) - ''தன்னுடைய ஊழியத்தை பூமியில் தொடங்கும்போது,'' அந்த சமயத்தில் ''ஏழு முத்திரைகளினுடைய தேவரகசியம் வெளிப்படுத்தப்பட்டிருக்கும்“ என்று கூறுகிறது. நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்க்கிறோம். நண்பர்களே, இதுவாயிருக்குமா? இதுவாயிருக்குமா? கவனியுங்கள். கூடுமான எல்லாம். 87புத்தகத்தில் மீட்கப்பட்டவர்களாக பெயரெழுதப்பட்டவர்கள் எல்லோரையும் மீட்டுக்கொள்ளவே அவர் வந்தார். மீட்கப்பட வேண்டியவர்கள் அனைவரும் அந்தப் புத்தகத்தில் காணப்பட்டனர். அவர்கள் உலகத் தோற்றத்திற்கு முன்பே முன்குறிக்கப்பட்டனர். அவர்களை மீட்டுக்கொள்ளவே அவர் வந்தார். அவர் மீட்டுக்கொண்ட எல்லோருடைய பெயர்களுமே அதில் எழுதப்பட்டிருந்தது. 88இப்பொழுது உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த ஒலி நாடாவைக் கேட்பவர்களே , கூர்ந்து கவனியுங்கள். அந்த விகாரமான கண்களும் விகாரமான தலையும் - அதனால் தான் இந்தச் செய்தி நவீன காலத்துப் பெண்களுக்கு விரோதமாகவே இருந்து வந்துள்ளதா? இதுவே அந்தக் கடைசி தூதனின் செய்தியாயிருக்குமா? முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஆற்றங்கரையில் என்ன கூறினார்? “யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல...'' பாருங்கள்? ”கிறிஸ்துவின் முதலாம் வருகையை அறிவிக்க யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, உன் செய்தி அவருடைய இரண்டாம் வருகையை அறிவிக்கும்.'' உலகம் முழுவதிலும் அதைத்தான் அது செய்துள்ளது. அப்படியானால் வருகை சமீபமாயிருக்க வேண்டும். இப்பொழுது என்ன நிகழ்கிறது என்பதைக் கவனியுங்கள். நான் தலையை சொறிந்தேன். படுக்கையில் புரண்டேன், தரையில் இங்குமங்கும் நடந்தேன். “உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று என்னையே கேட்டுக் கொண்டேன். 89சில நாட்களுக்கு முன்பு, என் கூட காரில் பயணம் செய்த இருவரை கேட்டேன்- ஒருமுறை நான் ஜாக் மூரைக் கேட்டேன் (உங்களுக்கு ஜாக் மூரைத் தெரியும்). நான் ஷ்ரீவ்போர்ட்டிலுள்ள அவரிடம் செல்கிறேன். நான் ''சகோ. ஜாக், நீங்கள் உலகில் எனக்கு கிடைக்கப் பெற்ற மிகவும் நெருங்கிய நண்பர்'' என்று சொல்லி அவரிடம் கேட்டேன். அவரைக் கேட்பதற்கு முன்பு, என் மனைவியைக் கேட்டேன். என்னைக் குறித்து யாருக்காகிலும் தெரியும் என்றால்... என் தவறுகள் எல்லாம், அது என் மனைவியே; அவள் அருமையானவள், ஒருநாள் நான் அவளிடம், ''தேனே, உன் கணவராகிய நான், ஒரு சுவிசேஷஊழியன், நான் நேசிக்கும் அந்த ஒருவர் மேல் எந்த ஒரு நிந்தையும் கொண்டுவர நான் விரும்பவில்லை. உன்னையும் நான் புண்படுத்த விரும்பவில்லை. உன் மேலும் நான் எந்த நிந்தையும் கொண்டு வரமாட்டேன். உனக்கு கெடுதி விளைவிக்கக் கூடிய எந்த ஒரு செயலையும் புரியாதபடி தேவன் என்னை தடை செய்வாராக! அப்படியிருக்க, அது தேவனுக்கு எவ்வளவு அதிகமாக கெடுதி விளைவிக்கும் என்று நீ நினைக்கிறாய்? அவரை நான் எவ்வளவாக நேசிக்கிறேன். நீ என் மனைவி, அவரோ என் இரட்சகரும் தேவனுமானவர். உன்னை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தயங்காமல் உண்மையைச் சொல்'' என்றேன். நான், “நான் அதிகம் படித்திருக்கிறேனா என்ன...” என்றேன். 90நான் வியந்ததுண்டு. நான் இல்லாத ஒன்றைப்போல் தோற்றமளிப்பவன்... வேடிக்கையானவன். வினோதமானவன். எல்லோருமே, “இவன், எப்படிப்பட்டவன்?'' என்று கேட்கின்றனர். நல்லது, பாருங்கள். நீங்கள் இல்லாத ஒன்றாக உங்களை செய்து கொள்ள முடியாது. தேவனுடைய கிருபையினால் நீங்கள் என்னவாயிருக்கிறீர்களோ, அதுதான் நீங்கள் நான், “எனக்கு சிறிது மூளை கோளாறு ஏற்பட்டுவிட்டதா...'' என்று நினைத்தேன். அந்த ஸ்திரீகளை நேசிக்கும்போது, அவர்களை ஏன் எப்பொழுதும் குற்றப்படுத்திக் கொண்டேயிருக்கிறேன்?'' என்று எண்ணினேன். நான் பெண்களை வெறுக்கிறவன் என்று அவர்கள் கூறுகின்றனர். அவர்களை நான் வெறுப்பதில்லை... நான் பெண்களை வெறுக்கிறேனா? அது தவறு. நான் பெண்களை நேசிக்கிறேன் - என் சகோதரிகள் என்னும் முறையில். நீங்கள் தவறாயிருப்பதைப் பார்த்துவிட்டு, உங்கள் முதுகில் நான் தட்டிக் கொடுக்கமாட்டேன். அதை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். உங்களை நான் அதிகமாக நேசிப்பதால், அப்படி என்னால் செய்யமுடியாது. சிலர் அப்படி செய்யக்கூடும். அது வேறுவிதமான அன்பு. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை நான் நேசிப்பதனால், உங்களை நான் நேசிக்கிறேன். நீங்கள் தேவனுடைய குமாரன் ஒருவருக்கு துணைவியாயிருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய ஒரு பாகமாக இருக்கின்றீர்கள். உங்களை நான் நேசிக்கிறேன், ஏனெனில் நீங்கள் மனிதனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள்; மனிதன் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கிறான். எனவே நீங்கள் இருவருமாக, கிறிஸ்துவில் ஒன்றாயிருக்கிறீர்கள். ஆகையால் தான் உங்களை நான் நேசிக்கிறேன். வேறெந்த காரியமும் அதற்கு ஈடில்லை, தேவன் அதை அறிவார். என் வாழ்நாள் பூராவும் - அது உண்மை - உங்களை நான் நேசிக்கிறேன். நான் ஏன் நின்றுகொண்டு அடிக்கடி அவர்கள், “சகோ. பிரன்ஹாமின் பிரசங்கத்தைக் கேட்க வரும்போது, அவர்கள் தலைமயிரை வேறு விதமாகச் சீவி வரும்படி எல்லா பெண்களிடமும் சொல்லுங்கள். ஒரு தொப்பியை அல்லது வேறெதாவதை அணிந்து வரச் சொல்லுங்கள். ஏனெனில் குட்டை மயிரைக் கண்டால், அவர் பொறிந்து தள்ள ஆரம்பித்துவிடுவார். அழகு ''சாதனங்கள் ஒன்றையும் உபயோகிக்காதீர்கள்” என்கின்றனர். அவர்கள் அதைத்தான் செய்தனர். “ஓ, அவர் யாரையாவது கண்டனம் செய்வார்.'' 91ஒருவர், ''நீங்கள் ஏன்... ஜனங்கள் உம்மைத் தீர்க்கதரிசியென்று விசுவாசிக்கின்றனர். நீங்கள் ஏன் பெண்களுக்கு இவை போன்றவைகளைப் போதிப்பதற்கு பதிலாக, மகத்தான ஆவிக்குரிய வரங்கள் போன்றவைகளை எப்படி பெற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர்களுக்கு போதிக்கக் கூடாது?'' என்று கேட்டார். நான், ''அவர்கள் மொழியின் முதல் (ABC) எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளாமல், எப்படி அல்ஜீப்ரா கணிதத்தை அறியமுடியும்?“ என்று பதிலுரைத்தேன். முதலில் சீர் பொருந்துங்கள். எவ்வளவுக்கதிகமாக நான் பிரசங்கிக்கிறேனோ அவ்வளவுக்கதிகமாக அது மோசமாகிக் கொண்டு வருகிறது. நீங்களோ, ''நீங்கள் ஏன் அப்படி பிரசங்கிப்பதை விட்டுவிடக் கூடாது?'' என்று கேட்கிறீர்கள். இல்லை, ஐயா. அதற்கு விரோதமான சாட்சியாக ஒரு சத்தம் இருந்தே ஆகவேண்டும். இன்றைய ஊழியத்திலுள்ள மிக மகத்தான மனிதர்களில் ஒருவர் அண்மையில் என் தலைமேல் கை வைத்து, ''சகோ. பிரன்ஹாமே, நீர் அனுமதித்தால், பெண்களை அப்படிப்பட்ட காரியங்களில் நீங்கள் தனியே விட்டுவிடும்படி, தேவன் அதை உங்கள் இருதயத்திலிருந்து எடுத்துப் போட வேண்டுமென்று உங்களுக்காக ஜெபிக்கப்போகிறேன்'' என்றார். நான் அவரிடம், ''நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா, ஐயா? “நீங்கள் பரிசுத்தர் ஸ்தாபன பிரசங்கியார் ஆச்சுதே'' என்றேன். அவர், “நிச்சயமாக நான் அதை விசுவாசிப்பதில்லை. ஆனால் அது ஒவ்வொருவரைப் பொறுத்தது...'' என்றார். நான், ''இல்லை'' என்றேன்.“அது மேய்ப்பர்களைப் பொறுத்தது” என்றார் அவர். நான், “அவர்கள் அதை செய்வதில்லையே'' என்றேன். 92யாராவது ஒருவர் அதை செய்யவேண்டும். நதி கடக்கப்பட வேண்டும். தோல் உரிக்கப்பட வேண்டும். நான் அதை செய்ய விரும்பவில்லை, அதை நான் செய்ய விரும்புகிறதில்லையென்று தேவன் அறிவார். பெண்களில் அநேகர் என் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுகின்றனர். எனக்காக அவர்கள் தங்கள் உயிரையும் கொடுப்பார்கள். தேவனுடைய கிருபையினால் நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியினாலே, அந்த ஏழை நபர் எவ்வித நம்பிக்கையுமின்றி நித்தியத்துக்குள் அமிழ்ந்து போவதை பார்த்துக் கொண்டு, அதற்கு விரோதமாக நான் கூச்சலிடாமல்அசைவற்று நின்று கொண்டிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? சாமர்த்தியமுள்ள ஒருவனாக நான் இருக்கவேண்டும் என்பதற்காக அல்ல. ஆனால் இத்தேசத்தின் ஆவி சபையின் ஆவி - கிறிஸ்துவின் ஆவியல்ல, ஸ்தாபன சபையின் ஆவி இந்த ஸ்திரீகளை அந்தக் குழப்பத்திற்குள் திசைத் திருப்பிவிட்டுள்ளது. ''அதை விட்டு வெளியே வாருங்கள், அந்த அசுத்தத்திலிருந்து விலகி ஓடுங்கள்'' என்று கூச்சலிடும் சத்தமாக மாத்திரம் நான் இருக்கிறேன். அப்படிப்பட்ட காரியங்களை பிசாசு உங்களிடம் செய்ய அனுமதிக்காதீர்கள். அது தவறு! அசெம்பிளிஸ் ஆப் காட் ஜனங்களே, நீங்கள் பெண்கள் தலைமயிரைக் குட்டையாகக் கத்தரித்துக் கொள்ள அனுமதிக்கிறீர்கள், ஆனால் அவர்கள் அழகு சாதனங்களை உபயோகிப்பதை தடுக்கிறீர்கள். உண்மையில் அழகு சாதனங்கள் உபயோகிப்பதற்கு எதிராக ஒரு வேத வசனம் கூட இல்லை, ஆனால் தலைமயிரை குட்டையாகக் கத்தரித்துக் கொள்வதற்கு விரோதமாக வேதவசனம் உள்ளது. அவள் தேவனுக்கு முன்பாக ஜெபிக்கக் கூட தகுதியற்றவள் என்று வேதம் கூறுகின்றது. அவளை விவாகரத்து செய்து அவளை விட்டுச்செல்ல அவள் கணவனுக்கு அதிகாரமுண்டு. அவள் அசுத்தமுள்ளவளாக தன்னை உலகத்திற்கு எடுத்துக் காண்பிக்கிறாள். வேதம் அவ்வாறு கூறுகின்றது. அவள் அவ்விதம் செய்யும்போது, தன்னுடைய புருஷனை கனவீனப்படுத்துகிறாள். அதை திட்டவட்டமாக வேதம் கூறுகின்றது. 93ஒரு பெண் அழகு சாதனங்கள் உபயோகித்ததை நாம் வேதத்தில் காண்கிறோம் - ஒரே ஒருத்தி. அவள்தான் யேசபேல். அழகு சாதனங்கள் உபயோகித்ததாக வேதத்தில் காணப்படும் ஒரே ஒருத்தி யேசபேல். தேவன் உடனடியாக அவளை காட்டு நாய்களுக்கு ஆகாரமாக்கினார். அவள் அவமானமாக இருக்கிறாள். அவள்... நீசமான எல்லாமே யேசபேல் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் அதை செய்ய வேண்டியதில்லை. நீங்கள் அதை செய்ய வேண்டியதில்லை. அப்படியானால் உங்களைச் செய்யத் தூண்டுவது எது? பிசாசின் ஆவியே. அதை நீங்கள் உணருகிறதில்லை. நீங்கள் உணருகிறதில்லையென்று எனக்குத் தெரியும். நீங்கள் மிகவும் நல்லவர்கள். நீங்கள் நல்லவர்கள். நீங்கள் என்னுடன் கைகுலுக்கி, என்னுடன் பேசுகின்றீர்கள். 94நான் உங்களை நேசிக்கிறேன். அது உண்மை. ஆனால் நான் அதை மாத்திரம் பார்த்தால், ஒரு மாய்மாலக்காரனாயிருப்பேன் அல்லவா? பவுல், “தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்'' என்றான். அந்த நாளில், எந்தப் பெண்ணுடைய அல்லது எந்த மனிதனுடைய இரத்தப்பழியும் என்மேல் இராமலிருப்பதாக! நான் உங்களுக்கு சத்தியத்தை அறிவித்துவிட்டேன். அப்படி செய்வதை நான் வெறுத்தேன் - தேவன் என்னிடம் செய்யச் சொன்னவைகளை நான் செய்ய விருப்பமில்லாததனால் அதை வெறுக்கிறேன் என்றல்ல. நான் உங்களை நேசிக்கிறேன். உங்களை நான் புண்படுத்த விரும்பவில்லை. எனவே நான் என்ன செய்வேன்? ஆனால் பரிசுத்தமான தெய்வீக அன்பு அப்படி செய்வதற்கு என்னை உந்தித் தள்ளுகிறது. இயேசுவும் கூட சிலுவையில் மரிக்க விரும்பாமல், ''இந்தப் பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது“ என்று ஜெபம் பண்ணினார். 95இதை நான் தான் செய்யவேண்டியவனாக இருக்க வேண்டுமா? விலையேறப் பெற்றவர்களும் அருமையானவர்களுமான இந்த ஸ்திரீகளை நான் தான் கடிந்து கொண்டு அவர்களை பிய்த்து எறியவேண்டுமா? நான் இதை செய்யவேண்டுமா... ஊழியர்களாகிய என் சகோதரர்கள் தேவனை நேசிப்பதைக் காட்டிலும் பணத்தையும் ஸ்தாபனங்களையும் அதிகமாக நேசிக்கின்றனர் என்று அங்கு நின்று கொண்டு நான் தான் சொல்ல வேண்டியவனாக இருக்கவேண்டுமா? என்னைக் கட்டியணைக்கும் என் சகோதரர்களையே நான்... ஓ, நான் செய்யவேண்டுமா? ஓ, தேவனே, அதை நான் செய்யவிடாதேயும். ஆனால் தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். உண்மையான அன்பே அப்படி செய்ய என்னைத் தூண்டியது. 96அதன் காரணமாகத் தான் இச்செய்தி இவ்விதமாக இருக்கிறதோ? உலகில் வேறெங்கிலும் இப்படி இல்லை, இல்லையா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி.) அப்படி வேறெங்குள்ளது? சரி. அவர்கள் பயப்படுகின்றனர். ஆனால் இது பயமற்றதாகவே இருந்து வந்துள்ளது. நிச்சயமாக, தேவன் எப்பொழுதுமே அவ்வாறே இருக்கிறார். சரி. ஆகவே தான் ஸ்திரீகள் இச்செய்தியின் மூலம் இவ்வளவாக கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறார்களா? எனக்குத் தெரியாமல்... அது எனக்கு வெளிப்படவில்லை, எனக்கு காண்பிக்கப்பட்டது. ஆனால் அன்றொரு நாள் வரை அது என் ஞாபகத்திற்கு வரவில்லை. அதைப் பாருங்கள். சரி, ஊழியத்துடன் நிச்சயமாக பொருந்துகிறது. 97இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுங்கள். இதற்கு முன்பு இது எப்பொழுதாவது பெண்ணின் உலகமாக இருந்திருக்கிறதா? ஆம்! எலியாவின் நாட்களில் யேசபேல் என்னும் பெயர் கொண்ட ஒரு ஸ்திரீ இருந்தாள் என்று சரித்திரம் கூறுகிறது. அவள் தேவனுடைய சபையின் மேல் ஆதிக்கம் செலுத்தினாள். கடைசி நாட்களில் அவள் மறுபடியும் ஆதிக்கம் செலுத்துவாள் என்று வேதம் கூறுகின்றது - அவளுடைய ஆவி, ஒரு ஸ்தாபன சபையின் மூலமாக. அவள் ஒரு வேசியாயிருப்பாள். மற்றெல்லா ஸ்தாபன சபைகளுமே, அவளைப் போலவே, அவளுடன் கூட வேசிகளாயிருக்கும். அது சரியா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் அவள் வேசியென்றும், வேசிகளுக்குத் தாய் என்றும் வெளிப்படுத்தல் 17 கூறுகின்றது. அது ஆண்களாக இருக்கமுடியாது, அது பெண்கள். அவர்கள் உயிரோடே அக்கினிக் கடலில் தள்ளப்பட்டு அழிந்துபோனார்கள். அது உண்மையா? பார்த்தீர்களா? 98கவனியுங்கள், அந்த யேசபேல் காட்சியில் எழும்பினபோது, அதற்கு விரோதமாக ஒரு மனிதன் எழும்பினான். தேவன் ஒரு மனிதனைக் கொண்டு வந்தார். அவன் எங்கிருந்து வந்தான் என்று கூட நமக்குத் தெரியாது. அவன் அதற்கு முன்பு ஊழியம் எதுவும் செய்யவில்லை. அவன் ஆசாரியனாக ஒருபோதும் இருந்ததில்லை. எலியா என்னும் பெயர் கொண்ட அந்த வயதான கரடுமுரடான தோற்றம் கொண்ட காட்டுவாசி புறப்பட்டு வந்து, கோடாரியை மரத்தின் வேரருகே வைத்தான். அது மாத்திரமல்ல, அவனுடைய சபையோர் அனைவருமே அவனை வெறுத்தனர். அவன் தனியாக இருப்பதாக ஒரு காலத்தில் எண்ணியிருந்தான். கர்த்தரோ, “இல்லை, உன்னுடன் இணங்குகின்ற 7000 பேரை வைத்திருக்கிறேன்'' என்றார். அவர்கள்தான் தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டத்தார். அது எப்பொழுதும் தெரிந்து கொள்ளப்பட்ட கூட்டத்தாரே. அவர், “எலியாவே, பயப்படாதே, ஸ்தாபனங்கள் உன்னை மலையுச்சிக்கு விரட்டியடித்துவிட்டதால், உன் சார்பில் யாருமே இல்லையென்று நினைக்கிறாய் என்றறிவேன். ஆனால் நீ பிரசங்கிப்பதையே விசுவாசிக்கும் 7000 பேரை நான் வைத்திருக்கிறேன், அவர்களை வைத்திருக்கிறேன்'' என்றார். 99அவனுடைய நாளிற்குப் பிறகு, ரோமாபுரி ஆளுகை செய்தது. அப்பொழுது அது மீண்டும் பெண்ணின் உலகமாக மாறினது. பெண்களுடைய எல்லா நாகரீகமும், எப்படி அவர்கள் தொப்பியுடனும் மற்றவைகளுடனும் தோன்றினார்கள். அப்பொழுது தேவன் அதே ஆவியை - எலியாவின் ஆவியை - தன்மேல் கொண்ட வேறொரு மனிதனை எழுப்பினார். அது சரியா? அவன், “இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது'' என்றான். அங்கு ஒரு கலகக்காரி இருந்தாள். அவள் தன் கணவனை விட்டு அவனுடைய சகோதரனாகிய ஏரோதை மணந்து கொண்டாள். அவள் அந்நாளிலே கோமாளியைப் போல், முகத்தில் சாயம் பூசினவளாக, நடனமாடினாள். தன் மகளுக்கு நடனம் ஆட கற்றுக் கொடுத்தாள். ஏரோதியாளுக்கும் ஏரோதின் சகோதரனுக்கும் பிறந்த ஒரு குமாரத்தி இருந்தாள் - ஏரோது அவள் வளர்ப்புத் தந்தை. அவள் ஏரோதியாளின் குமாரத்தி. அவள் தன் குமாரத்திக்கு நடனம் கற்றுக் கொடுத்தாள். அவளும் தன் தாயைப் போலவே நடனமாடிக் கொண்டே ஆடைகளை ஒவ்வொன்றாகக் களையும் நடனக்காரியானாள். அவள் தாய் நான்கைந்து முறை விவாகம் செய்து, தான் விரும்பும் எதையும் செய்யலாம் என்று எண்ணியிருந்தாள். 100ஏரோது இங்கு வருகிறான். சபையைச் சேர்ந்திருந்தவர் அனைவருமே யூதர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கு ஏரோதும் அவனுடைய சபையினரும், ஜனங்கள் தீர்க்கதரிசியென்று விசுவாசித்திருந்த இந்தத் தீர்க்கதரிசியின் செய்தியைக் கேட்க வருகின்றனர். அவன் நடந்து சென்று, அவர்களிருவரின் முகத்திற்கு நேராக, ''நீர் அவளை வைத்துக் கொள்வது நியாயமல்ல'' என்றான். அது அவளை கோபமூட்டியது. வேறு சாதாரண மனிதன், ''ஏரோதியாளே, எப்படியிருக்கிறாய்? இன்று எங்கள் சபைக்கு வந்திருப்பதைக் குறித்து நாங்கள் நிச்சயமாகவே மகிழ்ச்சியடைகிறோம்'' என்று சொல்லியிருப்பான். ஆனால் யோவான் அப்படி ஒருக்காலும் சொல்லமாட்டான்! இயேசு, “நீங்கள் யோவானைப் பார்க்க வனாந்திரத்திற்குப் போனபோது, யாரைப் பார்க்கப் போனீர்கள்? ஆசாரியனைப் போல் வஸ்திரந்தரித்திருக்கும் ஒருவனையா பார்க்கப் போனீர்கள்?'' என்று கேட்டார். இல்லை, அப்படிப்பட்டவர்கள் குழந்தைகளை முத்தம் செய்து, மரித்தோரை அடக்கம் பண்ணுகின்றனர். அவர், “எதைப் பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ?'' என்று கேட்டார். அவர்கள், ''யோவானே, இங்கு வந்துவிடு. எங்களுக்கு நீ பிரசங்கித்தால், நாங்கள் உனக்கு அதிக சம்பளம் தருவோம். நாங்கள்தான் மிகப்பெரிய ஸ்தாபனம்“ என்றனர். யோவான் அப்படிப்பட்டவன் அல்ல. அவன் அதைப் பார்க்கப் போகவில்லை. அவர், ''அப்படியானால் நீங்கள் யோவானைக் காணவும் அவன் பிரசங்கிப்பதை கேட்கவும் போனபோது, யாரைப் பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையா? தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்களால் ஏற்றுக்கொள்ளக் கூடுமானால், “என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுவான்” என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டவன் இவனே'' என்றார். அவன் உடன்படிக்கையின் தூதன். அவர், ''ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் அவனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை'' என்றார். 101அந்த நாளில் அப்படிப்பட்ட ஒரு மனிதனையே தேவன் எழுப்பினார். காட்டுவாசியாகிய எலியா, அதுபோன்று யோவான் ஸ்நானன். பாருங்கள்? எலியாவின் ஆவி யோவான் ஸ்நானனின் மேல் இருந்தது. மறுபடியுமாக ஒரு ஸ்திரீயின் நாள் தோன்றும் போது, அந்த ஆவி மறுபடியும் எழும்பும். அது கர்த்தருடைய வருகைக்கு முன்பாக. அப்பொழுது பூமி எரிந்து போய், நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலை மிதிப்பார்கள். அவர்களுடைய உள்ளங்கால்களின் கீழ் துன்மார்க்கரின் சாம்பல் இருக்கும். அதை அவர் மீண்டும் இந்நாட்களில் வாக்குத்தத்தம் செய்துள்ளார். கவனியுங்கள், பரிசுத்த ஆவியானவர் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலத்துடன் அது பொருந்துகிறது. 102யாரோ ஒருவர் எழும்பவேண்டும். அவர் வந்தே ஆகவேண்டும். ஏனெனில் இது கர்த்தர் உரைக்கிறதாவது - மல்கியா 4-ம் அதிகாரம். ''கர்த்தருடைய பெரிதும், பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே அதுவே அடையாளமாயிருக்கும் என்று அவர் சொன்னார்“. அதாவது, ''நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்திற்கு அனுப்புவேன். அவன் என்ன செய்வான்? பிள்ளைகளுடைய இருதயங்களை பிதாக்களுடைய உபதேசத்திற்கு திருப்புவான் - மீண்டும் வேதாகமத்துக்கு. இந்த எல்லாவிதமான ஸ்தாபன பேதங்களையும் விட்டு, மீண்டும் வேதாகமத்திற்கு - மீண்டும் தேவனிடத்திற்கு - திருப்புவான். ''அதைத்தான் அவன் செய்வான். கவனியுங்கள், என்னே ஒரு மகத்தான நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! 103அந்தத் தீர்க்கதரிசிகள் அவர்களுடைய நாட்களில் இருந்த நவீன பெண்மணிகளை கடிந்து கொண்டனர். அதன் விளைவாக தங்கள் ஜீவனை கிரயமாக செலுத்தினார்கள். அந்த காலங்கள் ஒவ்வொன்றும் பெண்ணின் உலகமாயிருந்து பெண்கள் ஆதிக்கம் செலுத்தினதாக வரலாறு நிரூபிக்கின்றது. 104இன்றைய நாளை பாருங்கள். இந்நாட்களில் ஒன்றில் நமக்கு ஒரு ஜனாதிபதி தோன்றுவார்; அது இப்பொழுதே சம்பவிக்கும் என்று தோன்றுகிறது. உண்மையாக அவள் தான் ஜனாதிபதி. அவர் பெயரளவில் ஒரு பொம்மை மாத்திரமே (figurehead). (சகோ . பிரன்ஹாம் ஜனாதிபதி கென்னடியை குறிப்பிடுகிறார் - தமிழாக்கியோன்). அண்மையில், மற்றொரு தேசங்களில் ஒன்று; அந்த ஜனங்கள் அவளை வெகுவாய் புகழ்ந்து பாராட்டினார்கள். முடிவில் ஜனாதிபதி, “நான் அவள் கணவன் என்று கூறினார். அமெரிக்க ஜனாதிபதி!” அவள்தான் நாகரீகங்களை உருவாக்குகிறாள், பெண்கள் அதைப் பின்பற்றுகின்றனர். யேசபேல் செய்த விதமாக. “யேசபேல் மார்க்கம்” என்னும் என் பிரசங்கத்தை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அதைக் குறித்து உங்களுக்குத் தெரியும். நாம் எங்கே இருக்கிறோம் என்று அறிகிறீர்களா? இந்தப் பட்டினத்தில் ஓரிரண்டு வாரங்களுக்கு முன்பு என்ன சம்பவித்ததென்று உங்களுக்குத் தெரியுமா? “விசுவாச லூத்தரன்” சபையைச் சேர்ந்த போதகர் ஒருவர், “புனித இருதயம்” சபையைச் சேர்ந்த கத்தோலிக்க குருவானவரை தன் சபையில் பிரசங்கம் செய்யும்படி அழைப்பு விடுத்தார். அவரும் அப்படி செய்தார். “விசுவாச லூத்தரன்” போதகரும் அந்தக் கத்தோலிக்க குருவானவரின் சபைக்குச் சென்று பிரசங்கம் செய்தார். 105உலக சபைகளின் ஆலோசனை சங்கம் இப்பொழுது ரோமாபுரியில் கூடுகின்றது... என் அருமை நண்பர் டேவிட் டியூப்ளஸிஸ் அனுப்பிய இந்த பொதுவான கடிதம் (circular letter) அண்மையில் நான் போர்டின் மைல் கிரிக் (Fourteen mile creek) என்னுமிடத்தில் உட்கார்ந்து கொண்டு அவரிடம் இதைக் குறித்து கதறினேன். அவர் சபையை பாபிலோனுக்குள் திருப்பிக் கொண்டிருக்கிறார் என்று அவர் உணரவில்லை. எல்லோருமே, ''ஓ, எல்லா சபைகளுமே இப்பொழுது ஒன்றாகப் போகின்றன“ என்கின்றனர். ஆம், அது எனக்குத் தெரியும். 1933-ம் ஆண்டில் என் தீர்க்கதரிசன புத்தகத்தில் எழுதப்பட்ட விதமாகவே, அது சம்பவிக்கும். சாத்தான் ஒன்றாக இணைக்கிறான் என்பதை ஏன் நீங்கள் உணருவதில்லை? வேதாகமம் அதை கூறுகின்றது. சிறிது காலத்திற்குப் பின்பு, அவர்கள் ஒன்றாக ஆனவுடன், ஸ்தாபனங்களுக்கிடையே உள்ள பாகுபாடு முடிவடைந்துவிடும். அங்கே உங்கள் மிருகத்தின் முத்திரை இருக்கும். உண்மை. 106அதைப்பற்றி தொடர்ந்து பேச நேரமில்லை. இப்பொழுது ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கு பதினைந்து நிமிடங்கள் உள்ளன. இதை நான் முடிக்க விரும்புகிறேன். இந்த கருத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நாம் எங்கே இருக்கிறோம் என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று இந்த வேதவாக்கியங்களை உங்கள் முன் வைக்கிறேன். இன்னும் சில நிமிடங்களில் நாம் முடித்துவிடலாம். 107என்ன சம்பவித்தது என்பதை இப்பொழுது கவனியுங்கள். அந்தத் தீர்க்கதரிசிகள் அவர்கள் நாட்களிலிருந்த பெண்களைக் கடிந்து கொண்டு, பெண்களை வெறுப்பவர்கள் என்று அழைக்கப்பட்டனர். அது உண்மை என்று சரித்திரம் நிரூபிக்கின்றது. ஒரு நிமிடம் பொறுங்கள். வேத வாக்கியங்களைக் குறித்துக் கொண்டிருப்பவர்களே, 1 தீமோத்தேயு 5:6ஐ குறித்துக் கொள்ள விரும்புகிறீர்களா? வேதம், “சுகபோகமாய் வாழ்கிறவள்...'' (அது தேவனுக்குப் பிரியமானவைகளாய் இருக்கமுடியாது. எனவே அது...) ”சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்'' என்று வேதம் கூறுகின்றது. தீர்க்கதரிசியாகிய பரி. பவுல் அதைத்தான் சொன்னான். இந்த உலகப்பிரகாரமான நிலையில் வாழ்கின்ற ஸ்திரீ,உயிரோடிருக்கும் போதே செத்தவள். அவள் இரக்கத்தைப் புறக்கணித்தால் அவள் பிரிக்கும் கோட்டைத் தாண்டி, அவளுக்கு ஒரு ஸ்தலமும் இல்லாத இடத்திற்குச் சென்றுவிடுவாள்.அப்படியானால் அவள் வர்ணம் தீட்டிய கண்களுடனும், கத்தரிக்கப்பட்ட தலைமயிருடனும் எங்கிருப்பாள்? திரும்பிவர வழியில்லாத நிலைக்கு அவள் கோட்டை கடந்து சென்றுவிடுகிறாள். அவளுக்கு பிரசங்கிக்கப்பட ஒரு ஊழியம் இருந்தே ஆகவேண்டும். ஆனால் அந்த சமயத்தில் எல்லாமே முடிந்து போயிருக்கும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது செய்யப்பட்டுவிட்டது - அது அவர்களை சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டேயிருக்கிறது. 108மகத்தான அற்புதங்களை நிகழ்த்தும் ஒரு ஊழியம் உண்டாயிருக்கும் (யோவேல் அப்படி கூறியிருக்கிறான்), ஆனால் மீட்பிற்கு சமயமிராது. எல்லாமே முடிந்துவிட்டது. ஆட்டுக் குட்டியானவர் தமது புத்தகத்தை கையிலெடுத்தார், அவரால் மீட்கப்பட வேண்டியவர்கள் முடிந்துவிட்டனர். இயேசு முதலில் பிரசங்கித்து, புறக்கணிக்கப்பட்டு, அதன்பின்பு காவலிலுள்ளவர்களுக்கு ஆவியில் பிரசங்கித்தது போல. அவர்கள் மீட்கப்படமுடியாது - இரட்சிக்கப்படுவதற்கு நேரமில்லை. அதே ஊழியம் மீண்டும் நடக்கவேண்டும். அது ஒருக்கால் மூன்றாம் இழுப்பாக இருக்குமானால்? - நித்தியமாக இழக்கப்பட்டவர்களுக்கு. அப்படி இருக்குமானால்? அது அப்படியல்ல என்று நம்புகிறேன். அப்படியிருந்தால்? அதைக் குறித்து ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். அப்படியிருந்தால்? அப்படியில்லாமலிருக்க தேவன் செய்வாராக. எனக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர். ஆனால் அது அருகாமையில் உள்ளதாக நிச்சயமாகத் தோன்றுகிறது. நான் சிறுவனாக இருந்தபோது ஏன் அந்தத் தரிசனம் வந்தது? அதைக் குறித்து நான் ஏன் முன்பு சிந்தனை செய்யவில்லை? அன்றொரு நாள் அந்த அறையில் நான் ஏன் தரிசனம் காணும் நிலையையடைந்தேன்? “அது இங்கேயேயுள்ளது'' என்று சொல்லுங்கள். சரியாக இழக்கப்பட்ட ஆத்துமாக்கள் மத்தியில்தான் உள்ளது - இழக்கப்பட்டவர்களின் ஆத்துமாக்கள். இயேசு அவர்களுக்கு பிரசங்கித்து, சாட்சி கொடுத்தார். ஆனால் அவர்களோ மனந்திரும்பவேயில்லை. நான் அதிகமாக பிரசங்கிக்கும் தோறும், அவர்கள் அதிகமாக மோசமாகிக் கொண்டே வருகின்றனர். அங்கு மனந்திரும்புதல் இல்லை. அதற்கு இடமேயில்லை. 109ஏழாவது முத்திரை திறக்கப்பட ஆயத்தமாயிருந்தபோது, ஆட்டுக்குட்டியானவர் தமது புத்தகத்தை கையில் எடுத்தார் ஆறாம் முத்திரை. அவர் நம்மிடமிருந்து ஏழாம் முத்திரையின் இரகசியத்தை மறைத்துவிட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் அதை செய்யவில்லை. அந்த தூதன் ஒவ்வொரு நாளும் அங்கு நின்று கொண்டு இரகசியங்களை சொல்லிக் கொண்டே வந்தார், ஆனால் இதன் பேரில் மாத்திரம் ஒன்றும் செய்யவில்லை. “பரலோகத்திலே அமைதல் உண்டாயிற்று” என்று சொன்னார். யாருமே அறியவில்லை. அது கர்த்தருடைய வருகை. “ஓ, அது அவ்வாறு இருக்கமுடியாது'' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். அவ்வாறு அல்ல என்று நான் நம்புகிறேன். நாம் இன்னும் சற்று தொடர்ந்து கவனிப்போம். இங்கு சிலவற்றை எழுதி வைத்திருக்கிறேன். சரி. 110நினைவில் கொள்ளுங்கள். ''சுகபோகமாய் வாழ்கிறவள் உலகத்தின் காரியங்களில் பிரியமாயிருந்து, அதன்படி நடக்கிறவள். அவள் சபைக்கு சென்று பரிசுத்தவாட்டியைப் போல் பாவனை செய்யமுடியும். ஆனால் அதற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை, உயிரோடே செத்தவள்''. அவளுக்கு ஸ்தாபனங்கள் என்ன செய்துள்ளன என்று பாருங்கள். அவைகள் அவளைப் பரிசுத்த வார்த்தையைக் கையாள அனுமதித்து விட்டார்கள். அது வேதத்துக்கு முரணானது, அவைகள் அவளைப் பிரசங்கியாக செய்துவிட்டன. அது வேதத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு பாவத்திற்கும் அவளே குற்றமுள்ளவளாயிருக்கும் போது அவளை அரசாளுபவளாகவும், மேயராகவும், மாகாணத்தின் ஆளுநராகவும், இன்னும் நாட்டிலுள்ள எல்லா பதவிகளையும் அவளுக்கு அளித்ததுமின்றி, அவளை தேவனுடைய வீட்டில் ஒரு ஊழியக்காரியாகவும் செய்துவிட்டார்கள். அவளே பாவம் அனைத்துக்கும் காரணமானவள். நான் உரிமையைப் பற்றி பேசவில்லை... அவள் குற்றமுள்ளவள். ஒவ்வொரு குழந்தையும் குருடாகப் பிறப்பதற்கு அவளே காரணம். ஒவ்வொரு கல்லறையும் தோண்டப்படுவதற்கு அவளே காரணம். பாவம், வியாதி, வருத்தம் உண்டானதற்கு அவளே காரணம். ஸ்திரீ அதற்கு காரணமாயிராவிட்டால், நோயாளி வண்டியின் (ambulance) சத்தமே ஒலித்திருக்காது. கூக்குரலே இருந்திருக்காது; பாவம், மரணம், வருத்தம், துன்பம் இவையனைத்தும் இருந்திருக்காது. ஆனால் ஒரு ஸ்திரீ இவைகளை உருவாக்கிவிட்டாள். அவள் பிரசங்கபீடத்துக்கு சென்று பிரசங்கிப்பதை தேவன் தடை செய்கிறார். ஆயினும் அவர்கள் இன்னும் அதை செய்து கொண்டேயிருக்கின்றனர். ஸ்தாபனம் - அது எந்நிலையிலுள்ளது என்று பாருங்கள். 111அவள் ஒரு தேவதை. பிசாசு எவ்விதம் கிரியை செய்கிறது! கத்தோலிக்க ஜனங்கள் பெண்களை தெய்வங்களாக்கி, அவர்களிடம் ஜெபிக்கின்றனர். அது உண்மை. தேவ மாதாவாகிய மரியாள் போன்றவை. பிராடெஸ்டெண்டுகளை உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் இழுக்க, இயேசுவிடம் சற்று அதிகமாக ஜெபிப்பது உதவி செய்யுமானால், அவர்கள் அப்படியே செய்யலாம் என்று அந்த சங்கத்தில் அவர்கள் கூறினதை நான் அறிவேன். ஓ, சர்க்கரை தடவிய மாற்றமுடியாத செயல்கள். அவர்கள் கூறுகின்றனர். அது அந்த பழைய பிசாசே. ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப்பட்டிராதவர் அனைவரும் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ளும்படி அவன் செய்தான் என்று வேதம் கூறுகின்றது. முன் குறிக்கப்பட்ட சபைக்கு நான் பேசிக் கொண்டிருக்கிறேன்- வெளியிலிருப்பவர்களுக்கு அல்ல. இல்லை, ஐயா. ஒவ்வொரு கூட்டத்தாரிலிருந்தும், தமது முன்குறிக்கப்பட்டவர்களை அவர் வெளியே இழுத்துவிடுகிறார். அவர்களுக்காகத்தான் அவர் ஒவ்வொரு காலத்திலும் வருகிறார். 112அதோ அவள் நிற்கிறாள். அதோ அவள். அது அவள் - வார்த்தையை அவள் பிரசங்கித்து, வார்த்தையைக் கையாடி, தேவதையாக ஆகி, ஒவ்வொரு பாவத்துக்கும் காரணமாயிருக்கிறாள். ''உபதேசம் பண்ணவும், அதிகாரம் செலுத்தவும் ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை'' என்று வேதம் கூறுகிறது. அவள் கீழ்ப்படிய வேண்டுமென்று நியாயப்பிரமாணமும் கூறுகிறது. அவள் அதிகாரம் செலுத்தக் கூடாது. ஆனால் அவர்களோ அவளை தேசத்தின் அதிகாரியாகவும், மேயராகவும், ஆளுநராகவும் செய்திருக்கின்றனர். விரைவில் அவள் ஜனாதிபதியாகிவிடுவாள், நிச்சயமாக பார்த்தீர்களா? அவ்விதமாகத்தான் அது போய்க் கொண்டிருக்கிறது. ஜனங்கள் இவ்வாறு செய்யும் காரணம் என்னவெனில், அவர்களுக்கு இந்த வார்த்தையைக் குறித்து கவலையில்லை. இல்லை ஐயா. அவர்கள் அதை ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அங்கு நின்று கொண்டிருந்த யூதர்களைக் கவனியுங்கள் - கல்விமான்கள், அருமையானவர்கள், அவர்களைப் பார்த்து இயேசு, ''நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்“ என்றார். 113உங்களுக்கு முன்னால் ஒரு நியாய விசாரணையை நடத்த விரும்புகிறேன். இதை ஒரு நிமிடம் முயற்சி செய்வோம். தேவனுக்கு எதிராக நான் நிற்பதற்காக அவர் என்னை மன்னிப் பாராக! உங்களுக்கு ஒன்றைக் காண்பிப்பதற்காகவே ஒரு நிமிடம். நீங்கள், “தேவனுக்கு மகிமை, நான் அந்நியபாஷையில் பேசினேன் அல்லேலூயா அதை நான் பெற்றுக் கொண்டேன் என்று எனக்குத் தெரியும். தேவன் ஸ்தோத்திரிகப்படுவாராக! ஆம்!'' என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். ஹ, ஹா, நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். அப்படித்தானே? இஸ்ரவேல் ஜனங்களை நினைத்துப் பாருங்கள். எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை வெளியே அழைத்து வந்து, அவர்களை இரட்சித்த பின்பு, அவர்கள் செய்தியை பின்பற்றாததனால், தேவன் அவர்களை அழித்துப்போட்டார் என்று வேதம் கூறுகின்றது. அவர்கள் வானத்திலிருந்து விழுந்த மன்னாவைப் புசித்தார்கள். அவர்கள் புசிப்பதற்கென தேவன் பூமியில் பொழிந்த மன்னாவை அவர்கள் புசித்தார்கள். அவர்கள் செய்தியாளனின் சமுகத்தில் நின்றார்கள், அக்கினி ஸ்தம்பத்தைக் கண்டார்கள். தேவனுடைய சத்தத்தைக் கேட்டார்கள், அது உறுதிப்படுவதையும் அவர்கள் கண்டார்கள். அவர்கள் கோராவை விசுவாசிக்க எண்ணினதால்... “ இன்னும் அநேக பரிசுத்தமுள்ள மனிதர் இருக்கக்கூடும்; இது, அது மற்றது இருக்கக்கூடும். நாங்களும் பரிசுத்தமுள்ளவர்களாய்தான் இருக்க வேண்டும். இவையனைத்தும் நாங்களும் செய்யவேண்டும். எல்லா ஜனங்களும் பரிசுத்தரே. தேவன், “உன்னை விலக்கிக்கொள். இங்கிருந்து வெளியேறு” என்றார். மோசே, “கர்த்தரின் பட்சமாயிருக்கிறவர் எல்லோரும் என்னோடு வாருங்கள்” என்றான். தேவன் பூமியை பிளந்து அவர்களை விழுங்கிப் போட்டார். 114அவர்கள் நல்லவர்களே. நிச்சயமாக அவர்கள் நல்லவர்கள். அவர்கள் அருமையானவர்கள், ஆம், ஐயா. ஆனால் அது போதாது. ''கர்த்தாவே, கர்த்தாவே என்று சொல்லுகிறவர்களல்ல, என் பிதாவின் சித்தம் செய்கின்றவனே.'' தொடங்குகிறவனல்ல, முடிக்கிறவனே. அங்கு குறுக்கு வழிகள் கிடையாது. அப்படி செய்தால், பந்தயத்தின் முடிவில் நீங்கள் தகுதியை இழந்துவிடுவீர்கள் (disqualified). அங்கு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. வேதம் சொல்லும் வழியாகவே நீங்கள் வரவேண்டும். வேதம், “நீங்கள் மனந்திரும்பி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்'' என்று கூறினால், அதற்கு குறுக்கு வழியே கிடையாது. கைகளை குலுக்கி, ஸ்தாபனத்தில் சேர்ந்து கொள்ளுதல் என்பதெல்லாம் கிடையாது. நீங்கள் அந்த வழியாகத்தான் வரவேண்டும். நீங்கள் மரித்து, தேவனுடைய ஆவியினால் பிறக்காவிட்டால், நீங்கள் இழக்கப்படுவீர்கள். அவ்வளவுதான். குறுக்கு வழிகள் எதுவுமில்லை நீங்கள், ''ஓ, நான் சபையைச் சேர்ந்தவன்“ என்று சொல்லுகிறீர்கள். எனக்குத் தெரியும். அது நல்லது. ''என் தாய்...'' அதை நான் சந்தேகப்படவில்லை, ஆனால் நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அந்த வழியாகத்தான் நீ வரவேண்டும், ஏனெனில் அதற்கு குறுக்கு வழி கிடையாது. நியாயத்தீர்ப்பின் போது நீ தகுதியற்றவனாகி விடுவாய். அந்த ஒரே வழியாக மாத்திரமே நீ வரவேண்டும். ஒரே ஒரு வழி உண்டு, கிறிஸ்துவே அந்த வழி. கிறிஸ்துவே உன்னில் வார்த்தையாக ஜீவித்து, அந்த காலத்திற்கென அவர் வாக்குத்தத்தம் பண்ணியுள்ள ஒவ்வொன்றையும் உண்மையென நிரூபிக்கிறார். உங்களுக்குப் புரிகிறதா? (சபையார் ”ஆமென்“ என்கின்றனர் - ஆசி.) கவனியுங்கள், 115சிலர், “இந்த ஜனங்கள் நல்லவர்கள், என்கின்றனர். நிச்சயமாக. அவர்கள் நல்லவர்கள் அல்ல என்று நான் சொல்லவில்லை. பரி. சிசிலியாவும் மற்றவர்களும் நல்ல ஸ்திரீகள் அல்ல என்று நான் சொல்லவில்லை. என் தாயும் நல்லவர்களே. அதன் காரணமாக அவர்களிடம் நான் நிச்சயமாக ஜெபத்தை ஏறெடுக்க மாட்டேன். நிச்சயமாக. நான் அநேக நல்ல பெண்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் தேவதைகள் அல்ல - அவர்கள் ஸ்திரீகள். மனிதன்... தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே. ஏன் பெந்தெகொஸ்தே உலகத்தைச் சார்ந்த ஒரு மனிதன் நமது விலையேறப்பெற்ற சகோதரன், சகோ. டியூப்ளஸிஸ் அனுப்பிய பொதுவான கடிதம்... உங்களில் சிலர் அதை பெற்றிருப்பீர்கள் - உலக சபைகளின் ஆலோசனை சங்கத்தில் போப்பின் அருகில் அமர்ந்து, அது மிகவும் ஆவிக்குரியது என்று சொல்லவேண்டும்? அதுவா ஆவியைப் பகுத்தறிதல்? ''ஓ, கர்த்தரின் ஆவி அங்கு இருந்தது“ - மிகவும் ஆவிக்குரியதாயிருந்தது என்று. ஏன் சொல்ல வேண்டும்? பார்த்தீர்களா ஏன்? 116ஏனெனில் பிராடெஸ்டெண்டுகளையும் அதையும் இணைக்க அது ஒரு தருணம். அதை நாம் அநேக ஆண்டுகளாக எதிர்த்துப் போராடி வருகிறோம். வேதம் அதை எடுத்துக் கூறி, அது நிறைவேறும் என்று நமக்குக் கூறியுள்ளது. நமது மகத்தான தலைவர்களில் ஒருவர் அங்கு வந்து, “நாம் செய்வது சரியே'' என்கிறார். உடனே பிராடெஸ்டெண்டு சபைகள் அனைத்துமே அதனுடன் இணைந்து கொண்டிருக்கிறது. நீங்கள் திட்டவட்டமாக, அந்த கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை கவனிப்பீர்களானால்... முதலில் வார்த்தை அதை உரைத்தது, பின்பு 1933ம் ஆண்டில் கர்த்தருடைய ஆவியானவர் அதை உரைத்து, தேசங்கள் சண்டையிட்டுக்கொள்ளும் என்றும், இயந்திரங்கள் எப்படியிருக்கும் போன்றவைகளை முன்னுரைத்தது. முதலில் இவையாவும் சம்பவிக்கும் என்றார். அது இப்பொழுது சம்பவித்து வருகிறது. அது ஒருபோதும் தவறவேயில்லை. அது உருவாகிக் கொண்டிருப்பதை இங்கு காண்கிறோம். 117அண்மையில் நான் பிரசங்கித்த “யேசபேல் மார்க்கம்'' என்னும் செய்தி உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அன்று காலை எலியா அவர்களிடம் கூறுவதற்காக சாலையின் வழியாக நடந்து வந்தது உங்களுக்கு ஞாபகமிருக்கும்... அதைக் குறித்து நான் பிரசங்கித்தேன். அப்பொழுது நான், இந்த உலகசபைகள் ஆலோசனை சங்கம் முடிவில் மிருகத்தின் முத்திரையாக ஆகிவிடும், ஏனெனில் அது மிருகத்துடன் இணைந்துவிடும் என்று முன்னறிவித்தேன். அது இப்பொழுது நடந்து கொண்டுவருகிறது. என் காலத்தில் அதைக் காண நான் உயிர் வாழ்ந்துவிட்டேன். இலட்சக் கணக்கான பிராடெஸ்டெண்டுகள் அதனால் கவர்ச்சிக்கப்படுவதை நீங்கள் கேள்விப்படுகின்றீர்கள். ஏன்? அதைத்தான் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் குருடராயிருக்கின்றனர். இயேசு அந்த பரிசேயர்களை நோக்கி, ''குருடருக்கு வழி காட்டும் குருடர்களே“ என்று கூறினார். ''குருடன் குருடனுக்கு வழி காட்டினால், அவர்கள் எல்லோருமே குழியில் விழுவார்களே'' என்றார் அவர். அங்குதான் அவர்கள் விழுந்து போகின்றனர். என்னுடன் நின்று, என்னுடன் பேசின மனிதன் அப்படிப்பட்ட வாக்குமூலத்தை அளித்தார் என்பதை என்னால் எப்படி நம்ப முடியும்? அது அவர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது - அது ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைக்கப்பட்டு, கற்றுக் கொள்ள விருப்பமுள்ள பாலகருக்கு வெளிப்படுத்தப்படுகின்றது. 118என்றாவது ஒருநாள் இதற்காக நான் கொல்லப்படக் கூடும் என்று அறிவேன். அது உண்மை. அது நேரிடும். ஆனால் இங்கு சத்தியம் அறியப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பரிசுத்த ஆவியின் திட்டத்தில் முதலாவதாக மரித்தது யோவான் ஸ்நானன் (அவன் அதை ஏற்க மறுக்கவில்லை) அவன் ஆண்மைத் தனம் கொண்டு மரித்தான் பின்பு கர்த்தராகிய இயேசு வந்தார் அவர்கள் அவரை சிலுவையிலறைந்தார்கள் ஆவியானவர் மனிதனைப் பாவத்திலிருந்து இரட்சிப்பார் என்று அவர் பிரசங்கித்தார் (அது சரியா?) பின்பு அவர்கள் ஸ்தேவானைக் கல்லெறிந்தார்கள் அவன் பாவத்திற்கு விரோதமாய் பிரசங்கித்தான் அவன் அவர்களை மிகவும் கோபமூட்டினான் அவர்கள் அவன் மண்டையைப் பிளந்தார்கள் அவனோ ஆவியில் மரித்து தன்னுடைய ஜீவனை விட்டு ஜீவனையளிக்கும் விருந்தளிப்பவரிடம் சென்று அங்கு மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டான். அங்கு பேதுருவும் பவுலும் திவ்விய யோவானும் இருந்தனர் சுவிசேஷம் பிரகாசிப்பதற்காக (அவர்கள் என்ன செய்தனர்?) தங்கள் ஜீவனை இழந்தனர் உண்மையான தேவனுடைய வார்த்தை உத்தமமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் இரத்தத்தை பழைய தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்துடன் கலந்தனர். பலிபீடத்தின் கீழுள்ள ஆத்துமாக்கள் தவறு செய்தவர் அனைவரையும் ஆண்டவர் தண்டிக்க வேண்டும் என்பதற்காக எவ்வளவு காலம் அழுது கொண்டிருக்கின்றனர்! ஆனால் இந்த பரிசுத்த ஆவியின் சுவிசேஷத்திற்காகவும் இந்த இளஞ்சிவப்பு வெள்ளத்திற்காகவும் தங்கள் ஜீவனின் இரத்தத்தைக் கொடுப்போர் (ஆம், அது உண்மை,) இன்னும் அநேகர் இருப்பார்கள். அதில் இரத்தம் சொட்டிக் கொண்டேயிருக்கிறது (ஆம் என்றாவது ஒருநாள் அது நிகழும். நான் காத்துக் கொண்டிருக்கிறேன்... அந்த மணி நேரத்துக்காக, அது முடிவடையும் போது). 119ஒரு சகோதரி ஒரு சொப்பனம் கண்டார்கள். அவர்கள் எனக்கு அந்த சொப்பனத்தை எழுதி அனுப்பியிருந்தார்கள். அவர்கள், ''அந்த சபையார், உம்மை இரகசியமாகக் கொல்வதற்காக வழியை வகுத்துக் கொண்டிருந்ததாக நான் சொப்பனத்தில் கண்டேன்“ என்றார்கள். என்றாவது ஒருநாள் என்னுடைய காரை விட்டு நான் வெளியே இறங்கி உள்ளே செல்லும் போது, நான் சுடப்படுவேன். ஆனால், ”அது இப்பொழுதல்ல, பிறகு சம்பவிக்கும் என்று ஆவியானவர் கூறினாராம். எதன் பேரிலும் நான் ஒப்புரவாவதை தேவன் தடை செய்வாராக! சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவையேயன்றி வேறொன்றையும் அறியேன். நாம் ஒரு பயங்கரமான நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாவம் இதை செய்துள்ளது. ஆம், அவர்கள் ஸ்தேவானை கல்லெறிந்து கொன்றார்கள். அவர்கள் யோவான் ஸ்நானனை சிரச்சேதம் செய்தனர் - ஏரோதியாள் செய்தாள். நம்முடைய ஜீவனை நாம் எப்படி இழப்போம் என்று தெரியாது. ஆனால் என்றாவது ஒருநாள் அது சம்பவிக்கும். சரி. கவனியுங்கள். 120பரி. யோவானில் (நீங்கள் அந்த வசனத்தை அறிய விரும்பினால்) அது யோவான் 6:49. “அவர்கள் மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள்” என்று இயேசு கூறினார். நல்லது, என் சகோதரியே, ''இந்த ஸ்திரீ ஆவியில் நடனமாடுவதை நான் பார்த்தேன்'' என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஓ, ஆம் ஹ, ஹ, ஹா நானும் கூட அவர்கள் நடனமாடுவதைப் பார்த்திருக்கிறேன். அவள் அந்நிய பாஷை பேசுவதை கண்டிருக்கிறேன். ஆம், இயேசு, “அநேகர் அந்நாளில் என்னிடத்தில் வந்து, ”நான் இந்த காரியங்களையெல்லாம் செய்தேனே என்று சொல்வார்கள்'' என்றார். ''அவர்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் நித்திய காலமாக பிரிக்கப்பட்டார்கள்'' என்றார் இயேசு. அவர்கள் மரித்துப் போனார்கள். அதாவது அவர்கள் நித்தியமாக போய் விட்டார்கள். அவர்கள் வனாந்தரத்திலேயே அழிந்துபோனார்கள். 121உங்களுக்கு எபிரெயர் 6-ம் அதிகாரம் ஞாபகமிருக்கிறது அல்லவா? ஒரு காலத்தில் சத்தியத்தை அறிந்திருந்தும், அதில் நடக்க மறுப்பவர்களுக்கு, மனந்திரும்புவது கூடாத காரியம் பாருங்கள், எல்லைக்கோடு... கடைசி முறையாக சத்தியம் ஒரு நபருக்கு உரைக்கப்பட்டு, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், எபிரெயர் நிருபத்தின்படி, உலகத்திலுள்ள எதுவுமே அவர்களை இரட்சிக்கமுடியாது. அவர்கள் முடிந்துபோனார்கள். மனந்திரும்புதல், மீட்பு எதுவுமே அவர்களுக்கு இல்லை. அவர்கள் நித்தியகாலமாக பிரிக்கப்பட்டவர்கள். வேதம் அவ்வாறு கூறுகின்றது. “நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்” சுவிசேஷத்தின் சத்தியம் நிரூபிக்கப்பட்டு, திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படும் போது, அதை விட்டு திரும்பி, அதிலிருந்து அகன்று சென்றால், அவர்கள் அத்துடன் முடிந்துபோகிறார்கள். அவ்வளவு தான். அது பயங்கரமானது, ஆனால் அதைநான் சொல்லியே ஆகவேண்டும். தங்களுடைய ஆதி மேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள் அந்தகாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இந்த அந்தகாரச் சிறைக்குத் தான் உலகமும் இன்று போய்க் கொண்டிருக்கிறது. மனந்திரும்புதலே இல்லை. 122சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் சிக்காகோவிலிருந்து திரும்பி வந்தபோது, ''அமெரிக்கா இந்த ஆண்டு இச்செய்தியை ஏற்றுக்கொள்ளும், இல்லையேல் ஒருக்காலும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறினது நினைவிருக்கும். அவள் எந்நிலையை அடைந்து விட்டாள் என்று பாருங்கள். இது மூன்றாம் இழுப்பாக இருக்க முடியுமா? என்று நான் ஐயமுறுகிறேன். ஓ, தேவனே, அது தூரமாயிருப்பதாக, மூன்றாம் இழுப்பு இதற்காகத்தானா? அப்படி இருக்குமா? நண்பர்களே, இதை சிந்தித்துப் பாருங்கள், சிந்தித்துப் பாருங்கள். எனக்கு விருப்பமில்லை. இயேசு “இவ்விதமான மாய்மாலம்...'' என்றார். (நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால் மத். 23:27). ”அதைப் படி'' என்று நான் இங்கு குறிப்பு எழுதி வைத்திருக்கிறேன். ''குருடரான பரிசேயரே“ என்பதை நீங்கள் காணலாம். 123நாம் இரண்டு நிமிடங்கள் எடுத்துக்கொள்ளலாம்? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி.) அந்த வசனத்திற்கு வேதாகமத்தைத் திருப்புவோம். ஏனெனில் ”அதைப் படி“ என்று எழுதி வைத்திருக்கிறேன். அதில் ஏதோ ஒன்றை நான் வாசிக்க எண்ணினேன். வேறெதாவதொன்றைக் குறைத்துவிடுகிறேன், ஆனால் இதை ஒரு நிமிடம் படிப்போம். மத்தேயு: 23, ஒரு நிமிடம். சரி. நாம் 27-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் வீட்டிற்குச் சென்று, உங்களால் முடிந்தால், முழு அதிகாரத்தையும் வாசியுங்கள். இன்னும் சில நிமிடங்கள். இப்பொழுது இங்கு கவனியுங்கள். மத்தேயு: 23, 27-ம் வசனத்திலிருந்து தொடங்குவோம். ''மாயக்காரராகிய வேதபாரகரே!.. (அவர் பரிசுத்தமான மனிதரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்) மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள் (அதாவது மரித்தவர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அகத்தத்தினாலும் நிறைந்திருக்கும். அவர்களுக்குள்ளே மாய்மாலமும், பொறாமையும், விரோதமும்; ஆனால் புறம்பே “நான் டாக்டர் இன்னார் இன்னார்'' அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள் (உலக சபைகளின் ஆலோசனை சங்கமும் பெந்தெகொஸ்தேயினரும் அங்கு உட்கார்ந்து கொண்டிருப்பதை பாருங்கள்); உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். அக்கிரமம் என்றால் என்ன? அது சரியென்று உங்களுக்குத் தெரிந்திருந்தும் அதை செய்யாமலிருப்பது. இயேசு - எந்த சந்ததியின்மேல் இதை சுமத்துகிறார் என்று கவனியுங்கள். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து பாருங்கள்? ஹா, தீர்க்கதரிசிகளின் எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்க மாட்டோம் என்கிறீர்கள். அக்காலத்தில் நாங்கள் வாழ்ந்திருந்தோமானால், நாங்கள் கர்த்தருடைய வார்த்தையை விசுவாசித்திருப்போம். கவனியுங்கள். ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக் குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள். நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம் அளவை நிரப்புங்கள் அதுதான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. அவர் இங்கு என்ன சொல்லுகிறார் என்று கவனியுங்கள். சர்ப்பங்களே, விரியன் பாம்புக்குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வீர்கள்? மத்: 23: 27-33 124நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்வீர்கள்? அவர் போதகர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அது உண்மை - பரிசுத்தமான மனிதர். வேதம் முன்னுரைத்து இவைகளைச் செய்யக்கூடாது என்று ஜனங்களிடம் சொல்லியிருக்கும்போது, சில மோசமான நாற்றமெடுக்கும் டாலர்களுக்காக, அல்லது செல்வாக்குக்காக, அல்லது யாராகிலும் உங்கள் முதுகில் தட்டி உங்களை “டாக்டர் என்று அழைக்கவேண்டும் என்பதற்காக, நீங்கள் எப்படி ஒப்புரவாக முடியும்? அந்த ஜனங்களை நீங்கள் நேசிப்பதாக எப்படி கூறமுடியும்? (என் பிரசங்கம் ஒலிநாடாவிலும் பதிவு செய்யப்படுகிறது). அந்த ஜனங்களை நீங்கள் நேசிப்பதாக கூறிக்கொண்டு, அப்படிப்பட்ட காரியம் நிகழ்வதை நீங்கள் எப்படி அனுமதிக்கமுடியும்? பரிசேயர்களே, குருடர்களே, சர்ப்பங்களே, நரகாக்கினைக்கு நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்ளப் போகிறீர்கள்? இன்று ஒரு மனிதன் இவைகள் தவறு என்று தெரிந்து கொண்டு, அதே சமயத்தில் அங்கு நின்றுகொண்டு தன் சபையை வளரச் செய்து, இவைகளை பெண்களிடமும் ஆண்களிடமும் எடுத்துக் கூற எப்படி தவற முடியும்? நரகம் உங்களுக்கென்று உண்டாக்கப்பட்டிருக்க, நீங்கள் எப்படி நரகாக்கினைக்குத் தப்பித்துக் கொள்ள முடியும்? நீங்கள் எப்படி தப்பித்துக் கொள்ளப் போகிறீர்கள்? கவனியுங்கள், இங்கு கவனியுங்கள், அது என்னவாக இருக்கப் போகிறது? ஆகையால், (34ம் வசனம்) இதோ, தீர்க்கதரிசிகளையும், ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன். (அனுப்புவேன் - வரப்போகும் காலத்தில். இதோ உங்கள் பரிசேயர் மறுபடியும் தோன்றுகின்றனர்); அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள். 125அவர்களுக்கு தீர்க்கதரிசிகளை கர்த்தருடைய வார்த்தையுடன் அனுப்புவதாக அவர் முன்னுரைத்தார். அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பிதாக்கள் புரிந்த அதே செயலை. ஏனெனில் அதுதான் நீங்களும். ஆவிகள் மரிப்பதில்லை. ஆவிகளினால் பீடிக்கப்பட்ட மனிதன் தான் மரிக்கிறான், ஆனால் ஆவிகள் மரிப்பதில்லை. அவர், ''நீங்கள் புத்திரராயிருக்கிறீர்கள், நீங்களே அவர்கள்“ என்றார். இவை எப்படியிருக்கின்றன என்பதை கவனியுங்கள். 126பவுல் அங்கு நின்றுகொண்டு (அவன் தீர்க்கதரிசியென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?), பெண்கள் தலைமயிரைக் குட்டையாக கத்தரித்துக் கொள்ளக் கூடாதென்றும், அவர்களுடைய ஸ்தாபனங்களையும் எவ்வளவாக கண்டித்தான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று அவன் அறிவித்தான். அது உண்மை. இன்று அவர்கள் அதை இனிப்பாக்கி, ஒத்துப் போகிறார்கள். அவர்கள் வித்தியாசம் ஒன்றையும் அறிவதில்லை. அது பரிதாபமானது. சமயம் ஏற்கனவே முடிந்துவிட்டிருந்தால், இதைக் கூற விரும்புகிறேன்: ''அவர்கள் குருடர்கள், அவர்கள் குருடராயிருக்க முன்குறிக்கப்பட்டுள்ளனர்“ தேவன் இரக்கமாயிருப்பாராக. அவர்களால் அதை காண முடியவில்லை. இயேசு, ''நீங்கள் குருடராயிருக்கிறீர்கள். குருட்டு வேதபாரகரே, பரிசேயரே மாய்மாலக்காரர்களே! எல்லோரும் படிக்கும் அதே வார்த்தையை நீங்களும் படிக்கின்றீர்கள். ஆயினும் நீங்கள் இங்கு வந்து என்னைக் குற்றப்படுத்துகின்றீர்கள். இந்நாளுக்கென்று வார்த்தை என்ன உரைத்துள்ளதோ அப்படியே நான் இருக்கிறேன். நான் இந்நாளில் செய்தியாளனாக இருக்கவேண்டியவன். ”நான் மேசியா'' அவர் அநேக வார்த்தைகளில் அதை கூறினார். ''நான் மேசியாவென்று நிரூபிக்கத் தவறிவிட்டேனா? என்னைக் குறித்து எழுதியிருப்பவைகளை நான் செய்யாமலிருந்தால், என்னைக் குற்றப்படுத்துங்கள். குருட்டு பரிசேயரே, நீங்கள் அப்படிப்பட்ட காரியத்திற்கு உங்கள் ஜனங்களை வழி நடத்தி, முழு கூட்டத்தாரையும் நரகத்துக்கு அனுப்புகிறீர்கள். நல்லது, “குருடர் குருடருக்கு வழிகாட்டுகிறார்கள்'' என்று திட்டவட்டமாகக் கூறினார். 127நீங்கள், “ஓ, நான் பரி. பவுலின் காலத்தில் வாழ்ந்திருந்தால் பரி. பவுலின் பக்கம் சேர்ந்து கொண்டிருப்பேன்” என்கிறீர்கள். “மாய்மாலக்காரரே அவனுடைய உபதேசத்தின் பக்கம் நீங்கள் ஏன் சேர்ந்து கொள்வதில்லை? இப்பொழுது செய்வதையே தான் அப்பொழுதும் நீங்கள் செய்திருப்பீர்கள். ஏனெனில் நீங்கள் உங்கள் ஸ்தாபன பிதாக்களாகிய பரிசேயர், சதுசேயர், சுயநீதிக்காரரின் பிள்ளைகள். அதுதான். நாம் வாழும் இம்மணி நேரத்தில் இதை உங்களிடம் கூறுகிறேன். இது மூன்றாம் இழுப்பாக இருக்குமோ என்று வியப்புறுகிறேன். ஒரு நிமிடம். ”இப்படிப்பட்டவர்கள் அதிகஆக்கினையை அடைவார்கள்'' என்று இயேசு கூறியுள்ளார். இது பயங்கரமானது அல்லவா? 128ஒருமுறை எதிரிகள் இந்நாட்டைக் கைப்பற்ற இருந்தபோது, ஒரு மகத்தான அமெரிக்கர் நள்ளிரவில் குதிரையின் மேல் ஏறி சாலையில் சவாரி செய்து, “எதிரி வந்து கொண்டிருக்கிறான்” என்று கூக்குரலிட்டார். அவர்தான் பால்வியர். நானும் ஒரு அமெரிக்கன்தான். இந்த நள்ளிரவு வேளையில் நானும் சவாரி செய்து கொண்டு, ''அவர் வருகிறார் என்றல்ல, ''அவர் இங்கிருக்கிறார்“ என்று அறிவிக்கிறேன். அவர் வரவில்லை. அவர் ஏற்கனவே இங்கிருக்கிறார். அவர் ஜெயங்கொண்டுவிட்டார். அது முடிந்துவிட்டது என்று நான் ஐயமுறுகிறேன். ஜெயங்கொள்ளுதல் - இந்நள்ளிரவில்! 129டூசானில் ஏழு தூதர்கள் தோன்றியபோது, அது என்ன செய்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள் - தேவனுடைய பரமரகசியம் நிறைவேறுதல். அதன்பின்பு உடனே மலைத் தொடர்களின் வழியாக வரும்போது... அந்த மலைகளைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கவனியுங்கள். சகோ. ஃபிரட்டிடம் அதன் புகைப்படங்கள் சில உள்ளன. சகோ. டாமும் நானும் அதைக் குறித்து சில திரைப் படத்தை வைத்திருக்கிறோம். என்றாவது ஒருநாள் அதை உங்களுக்குக் காண்பிப்போம் என்று நினைக்கிறேன். (அது எங்கேயுள்ளது என்று உங்களுக்குக் காண்பிப்போம்). அந்த சம்பவம் உங்கள் எல்லோருக்கும் தெரியும். கவனியுங்கள் - அந்த மூன்று சிகரங்கள். ''அதுதான் உன் முதலாம் இரண்டாம், மூன்றாம்...'' என்று அவர் கூறினார். 130அதனுடைய சிறந்த ஒரு புகைப்படம் சகோ. ஃபிரட்டிடம் உள்ளது. அவரும் சகோதரி மார்த்தாளும் கடந்து வந்தபோது - பூமியிலுள்ள நீர்த்துளிகளினால் மேகம் உண்டாகி மற்றெல்லாவற்றையும் மறைத்துவிட்டது. மூன்று இழுப்புகள் மாத்திரமே காணப்படுகின்றன - ஒன்று இங்கே, ஒன்று இங்கே, ஒன்று அங்கே அந்த ஏழு... 131கவனியுங்கள். முதல் மூன்று; மூன்று பரிபூரணத்தைக் குறிக்கிறது. அது ஊழியம் புறப்பட்டு சென்றபோது. இரண்டாம் இழுப்பு தீர்க்கதரிசன ஆவியின் மூலம் சிந்தனைகளைப் பகுத்தறிதல். முதலாவது வியாதியஸ்தர்களை சுகப்படுத்துதல்; இரண்டாவது, எங்கும் சென்ற தீர்க்கதரிசனம் - சிந்தனைகளிலுள்ள இரகசியங்களை பகுத்தறிதல். அப்பொழுது வார்த்தை தாமே வெளிப்படுத்தப்பட்டது. அது கிருபையாகும். ஆனால் ஏழாவது முடிவு என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இது முடிவு இழுப்பாக இருக்கக்கூடுமா? எல்லாம் முடிந்துவிட்டிருக்குமா?. சற்று யோசித்து பாருங்கள்? ஏழு எப்பொழுதுமே முடிவைக் குறிக்கிறது - மூன்று இழுப்புகள். 132இயேசுவின் ஊழியத்தில் மூன்று இழுப்புகள் இருந்தன என்று உங்களுக்குத் தெரியுமா? கவனியுங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்பொழுதாவது உத்தமமாக இருந்தால், இப்பொழுது ஒரு சில நிமிடங்களுக்கு உத்தமமாக இருங்கள். அவருடைய முதலாம் இழுப்பு வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்துதல். அவர் மிகவும் பிரபலமானார். எல்லோரும் அவரை விசுவாசித்தது போல் தோன்றினது. அது சரியா? அவர் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினவராய் சுற்றித் திரிந்தபோது, எல்லோரும் அவரைத் தங்களுடைய சபையில் வரும்படி அழைத்தார்கள். ஆனால் ஒருநாள் அவர் தீர்க்கதரிசனம் உரைக்கத் தொடங்கினார். ஏனெனில் அவரே வார்த்தையாயிருந்தார், அவரே மோசேயினால் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசி. அவர்கள் எவ்விதமாக ஜீவிக்கிறார்கள் என்றும், அவர்கள் செய்யும் காரியங்களையும் அவர் அவர்களிடம் கூறினபோது, அவர் பிரபலமற்றவரானார். அதுவே அவருடைய இரண்டாம் இழுப்பு. அது மீண்டும் நிறைவேறியுள்ளதா என்று வியப்புறுகிறேன். ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். அப்படியிருக்குமா? முதலாவது, எல்லாரையும் சுகப்படுத்துதல், இரண்டாவது... ஓ, அது இயேசு மாத்திரமாகத்தான் இருக்கமுடியும். ''ஓ, அது பெயல்செபூலாகவும் இருக்கமுடியும். அப்படித்தான் அவர்கள் அப்பொழுது கூறினார்கள். அதே ஆவிகள் அதேவிதமான ஜனங்களில் தங்கியுள்ளன - ஒரு போதும் இரட்சிக்கப்படக் கூடாதபடிக்கு ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்ட ஜனங்கள். ஏனெனில் அவர்கள் முன்பே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டவர்கள்... யூதாஸ்காரியோத்தைப் போல. அவன் கேட்டின் மகனாகப் பிறந்தான். நீங்கள், “யூதாஸா?'' என்று கேட்கலாம். நிச்சயமாக. 133அவன் மிகவும் பக்தியுள்ளவன் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஆனால் ஆவனால் செய்தியுடன் கடைசிவரை செல்ல முடியவில்லை. அவன் அதன் ஒரு பாகத்தை ஏற்றுக் கொண்டான். ஆனால் எஞ்சியுள்ள பாகத்தை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் தெய்வீக சுகமளித்தல் போன்றவைகளை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் தேவன் பேசி அணில்களை சிருஷ்டிக்கிறார் என்பதற்கு வரும்போது, அது அவர்களுக்கு மிகவும் ஆழமாகிவிடுகிறது. ''அது இருக்காது'' என்கின்றனர். அதுதான் யூதாஸ். அவனுடைய ஆவி ஒரு குறிப்பிட்ட இடம் வரைக்கும் செல்ல முடியும். அதற்கு அப்பால் அவனால் செல்லமுடியாது. சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்தது போன்ற செயல்களைப் புரிந்தவரைக்கும் அவர்களால் மோசேயை ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் மற்றவர்கள் இதை, அதை மற்றதை செய்யக் கூடாது என்று அவர்களிடம் கூறப்பட்டபோது, “அவன் தன்னை நம்மெல்லோருக்கும் மேலாக தேவனாக உயர்த்திக் கொள்கிறான்'' என்றனர். கோராவும் மற்றவர்களும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே அவர்களுக்கு ஒரு ஸ்தாபனம் அவசியமாயிருந்தது. தேவன் அவர்களை விழுங்கிப்போட்டார். 134இயேசு தம்முடைய ஊழியத்தில், வியாதியஸ்தர்களை சொஸ்தமாக்கினபோது, அவர் மிகவும் அற்புதமானவராகக் கருதப்பட்டார். ''ஓ, கலிலேயாவைச் சேர்ந்த அந்த வாலிப தீர்க்கதரிசி குருடர்கள் பார்வையடையச் செய்கிறார், அவர் மரித்தோரையும் கூட உயிரோடெழுப்புகிறார். அவர் அப்படி செய்ததாக மூன்று சான்றுகள் எங்களிடம் உள்ளன. அவர் உண்மையாக மரித்தோரை உயிரோடெழுப்பினார்'' என்றனர். ஆனால் ஒருநாள் அவர் திரும்பி, “விரியன் பாம்பு சந்ததியினரே, நீங்கள் போஜன பான பாத்திரங்களின் வெளிப்புறத்தை சுத்தம் செய்கிறீர்கள். நீங்கள் பரிசுத்தவான்களாகக் காட்சியளிக்கிறீர்கள், ஆனால் உட்புறத்தில் நீங்கள் ஒரு பாம்புக் கூட்டமேயல்லாமல் வேறொன்றுமில்லை'' என்றார். ஓ, தீர்க்கதரிசனம் புறப்பட்டுச் சென்று, அந்த ஸ்தாபனத்தை குற்றப்படுத்தினபோது, அது மாறினது. அவர்கள் அவருக்கு விரோதமானார்கள். அது உண்மை. முடிவில், அவரைப் புறக்கணித்து அவரை சிலுவையிலறைந்தார்கள். 135ஆனால் நீங்கள் ஊழியத்தைக் கொல்லமுடியாது. அது தொடர்ந்து ஜீவிக்கிறது. நீங்கள் செய்தியாளனை நித்திரைக்குட்படுத்தலாம், ஆனால் செய்தியை நீங்கள் அப்படி செய்ய முடியாது. அது உண்மை அவர் தொடர்ந்து ஜீவித்தார். கவனியுங்கள், அவருடைய ஊழியத்தின் மூன்றாம் இழுப்பு வந்தபோது, முதலாவது வியாதியஸ்தரை சுகப்படுத்துதல், இரண்டாவது அவர்களுடைய ஸ்தாபனத்தை கடிந்து கொண்டு அவர்கள் செய்ததை தீர்க்கதரிசனமாக உரைத்தல் - அவர்கள் என்னவாயிருந்தனர் என்றும், என்ன நேரிடப் போகிறது என்றும், என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்ன நடக்கப் போகின்றது, என்ன நடந்தது - என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்ன நடக்கப்போகிறது. அதைத்தான் அவர் செய்தார். அது சரியா?(சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி.) ஆனால் அவருடைய மூன்றாம் இழுப்பு ஒரு போதும் இரட்சிக்கப்படக் கூடாதபடிக்கு இழக்கப்பட்டவர்களுக்கு அவர் பிரசங்கித்தபோது, அவர்கள் வர்ணம் தீட்டிய பெரிய கண்கள் இருந்த அந்த பாதாளத்தில் இருந்தார்கள். இரக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் நித்திய காலமாக தேவனுடைய சமுகத்திலிருந்து பிரிக்கப்பட்டு நரகத்திலிருந்த ஆத்துமாக்களுக்கு அவர் பிரசங்கித்தார். அவர் யாரென்பதை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டியிருந்தது. ஆகவே தேவன் அவரை அங்கு அனுப்பினார். ஒருக்கால் அவருடைய ஊழியம் இந்த கடைசி நாட்களிலும் அதே நிலைக்குத்தான் படிப்படியாக வருகிறதோ என்று வியப்புறுகிறேன் - அன்றிருந்தது போலவே. ”என் பிதா என்னை அனுப்பினது போல, நானும் உங்களை அனுப்புகிறேன். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்.'' 136இழக்கப்பட்டவர்கள் - ஒருபோதும் இரட்சிக்கப்படவே முடியாதவர்கள். அவர்கள் இரக்கத்தைப் புறக்கணித்தனர். அதுவே அவருடைய மூன்றாம் இழுப்பு. ஏதாகிலும் கேள்விகள் உண்டா? அவருடைய முதலாம் இழுப்பு, அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தினார். அது சரியா? (சபையார் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி.) அவருடைய இரண்டாம் இழுப்பு, அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். அவருடைய மூன்றாம் இழுப்பு, நித்தியமாக இழக்கப்பட்டவர்களுக்கு பிரசங்கித்தல். மூன்று மலைகள் போன்றவை - நித்தியமாக இழக்கப்பட்டவர்கள். 137நோவாவின் ஊழியம் - எல்லா ஊழியங்களும் அதையே செய்தன. நோவா பிரசங்கித்தான். அது முற்றிலும் உண்மை. அவன் பேழைக்குள் சென்றான். அவன் பேழைக்குள் சென்றபோது, ஏழு நாட்களுக்கு ஒன்றுமே சம்பவிக்கவில்லை. அவனுடைய சாட்சி விமோசனமில்லாதவர்களுக்கு (doomed) பிரசங்கிக்கப்பட்டது... சோதோம் கொமோரா. இயேசு இவ்விரண்டையுமே குறிப்பிட்டார். “மனுஷகுமாரனுடைய வருகைக்கு முன்னால், நோவாவின் நாட்களில் நடந்தது போலவும், சோதோமின் நாட்களில் நடந்தது போலவும் இருக்கும்.'' அவர் நோவாவை குறிப்பிட்டார். நோவாவின் ஊழியத்தில் மூன்று இழுப்புகள் இருந்தன. அவனுடைய மூன்றாம் இழுப்பு, பேழையின் கதவு அடைக்கப்பட்டவுடன், இழக்கப்பட்டவர்களுக்காயிருந்தது. யாரும் உள்ளே பிரவேசிக்கவும் வெளியே வர முடியாததுமான இடத்தில் தேவன் அவனை உட்காரவைத்தார். அவர்கள் உள்ளே... ஏழாம் மலையிலே, உயரமான மலையிலே, அங்குதான் அவர் பேழையைக் கொண்டு நிறுத்தினார். அதுசரியா? 138சோதோமின் நாட்களில், முதலாம் இழுப்பு நீதிமானாகிய லோத்து. “சோதோமின் பாவங்கள் நீதிமானாகிய லோத்தினுடைய இருதயத்தை நாள்தோறும் வாதித்தது'' என்று வேதம் கூறுகின்றது -அந்த பெண்கள் நடந்து கொண்ட விதம். ''நோவாவின் நாட்களில் நடந்தது போல...” என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? புசித்தும், குடித்தும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும் - ஸ்திரீகள். பாருங்கள் - ஸ்திரீகள். சோதோமின் நாட்களில் என்ன? ஸ்திரீகள். முதலாவது செய்தி லோத்து. அவர்கள் அவனை எள்ளி நகைத்தார்கள். பிறகு அவர் வேறொரு செய்தியாளர்களை அனுப்பினார் - இரண்டு பேர்களை அவர்கள் அங்கு சென்றனர். (அதுதான் சோதோமுக்கு அவருடைய இரண்டாம் இழுப்பு). ஆனால் கடைசியாக சென்ற ஒருவரை கவனியுங்கள். இரக்கத்திற்கு மேல் இரக்கம் அளிக்கப்பட்டு அப்பொழுது அது முடிவடைந்துவிட்டது - அந்த சமயத்தில் அது முடிவடைந்திருந்தது. அங்கு சென்ற அந்த மூன்றாம் செய்தியாளன்... மூன்றாம் இழுப்பு. அவர் யார்? அவர் எப்படிப்பட்ட ஊழியத்தை உடையவராயிருந்தார்? அவர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுடன் உட்கார்ந்து, தமக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்கு அறிவித்தார். அது சரியா? ஆனால் அவர் பாபிலோனுக்குள் இல்லை. சோதோமுக்குள் நுழைந்த போது, அவர் நீதிமான்களைத் தேடினார். ஆபிரகாம், “ஐம்பது நீதிமான்களை நான் கண்டால் என்றான் - முடிவில் பத்து நீதிமான்கள் வரை கீழிறங்கினான். தேவன், “சரி, பத்து நீதிமான்களைக் கண்டுபிடி'' என்றார். 139சகோதரியே, ஒரு நிமிடம் ஒன்றை உன்னிடம் கூற விரும்புகிறேன். நீ ஒருக்கால் பழைமை நாகரீகமுடையவளாய் இருக்கலாம். ஆனால் இந்த செக்ஸ் ராணிகளிடம் இல்லாத ஒன்று உன்னிடம் உள்ளது. அவள் பெற்றுக் கொள்ளமுடியாத ஒன்றை நீ பெற்றிருக்கிறாய். நீ உடை உடுத்துவதில் பழமை நாகரீகமுடையவளாய் இருக்கலாம். ஆனால் நீ கனமுள்ள சீமாட்டியைப் போல் உடை உடுத்தியிருக்கிறாய். அவர்கள், ''அந்த உருளும் பரிசுத்த வாட்டியைப்பார்'' என்று உன்னைப் பார்த்து ஏளனம் செய்யலாம். கவலைப்படாதே. முழு உலகமே அந்த செக்ஸ் ராணியைப் பார்த்தாலும், இந்த உருளும் பரிசுத்தவாட்டி பெற்றுள்ள ஒன்றை அவள் பெற்றிருக்கவில்லை. அவள் அதை ஒருக்காலும் பெறமுடியாது. அவள் நித்திய காலமாக இழக்கப்பட்டவள். அவள் விமோசனமற்றவள். பாருங்கள்? உங்களுக்கு ஒழுக்கம் உண்டு, உங்களுக்கு நற்குணம் உண்டு. அவளிடத்தில் ஒன்றுமில்லை. இழக்கப்பட்ட ஆத்துமாக்களை நரகத்தில் சிக்க வைக்கும் கண்ணி மாத்திரமே அவளிடம் உள்ளது. குருடர் அதற்குள் நடந்து செல்கின்றனர். உங்களிடம் ஒன்றுண்டு. 140உங்கள் பெயர்கள் ஸ்தாபன புத்தகத்திலும் கூட இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் நீதியுள்ள வாழ்க்கையே தேவனுடைய கோபாக்கினை பூமியின் மேல் இன்று விழாதபடி நிறுத்தி வருகிறது. உலகம் அதை நம்பாது. உருளும் பரிசுத்தவாட்டிகள் என்று அழைக்கப்படும் ஸ்திரீகளே, தேசத்தின் பாவங்களுக்காக இரவும் பகலும் தேவனிடம் கதறி அழுவதைத் தவிர வேறொன்றையும் அறியாத சிறிய மனிதர்களே, நீங்கள் தான் தேவனுடைய கோபாக்கினையை நிறுத்தி வைத்திருக்கலாம், ''நான் பத்து பேரைக் கண்டால், அதை அழிக்கமாட்டேன். பத்து பேரைக் கண்டால். “சோதோமின் நாட்களில் நடந்தது போலவே நடக்கும்''. நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? ''நான் பத்து மெதோடிஸ்டுகளைக் கண்டால், நான் பத்து பாப்டிஸ்டுகளைக் கண்டால், நான் பத்து பெந்தெகொஸ்தேயினரைக் கண்டால், நான் பத்து விளையாட்டு வீரர்களைக் கண்டால், நான் பத்து செனட் உறுப்பினர்களை (Senators) கண்டால்'' என்றல்ல; ஆனால் ''நான் பத்து நீதிமான்களைக் கண்டால்!'' ஒரேயொரு நீதிமான் தான் உண்டு, அது கிறிஸ்து. கிறிஸ்து ஜீவியம் செய்தல், அவர்களுள் அந்த பத்து ஒருவர் - ''நான் அழிக்கமாட்டேன்''. 141ஆனால் அந்தக் கடைசி செய்தியாளன் தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு (doomed) பிரசங்கித்தார். அவர் அங்கு சென்றார். என்ன நடந்தது என்று வேதம் கூறவில்லை. ஆனால் அடுத்தநாள் அக்கினி விழுந்தது. சரியா? அவர் அந்த அடையாளங்களைச் செய்த பிறகு, அவருடைய தீர்க்கதரிசன ஊழியத்தை முடித்தவுடன், தீர்க்கதரிசன ஊழியத்தின் போது, ''சாராள் ஏன் நகைத்தாள்?'' என்று கேட்டார். அவள், ''நான் நகைக்கவில்லை“ என்றாள். அவர், “ஆம், நீ நகைத்தாய்” என்றார். அது முடிந்தவுடனே, அவர் பாபிலோனுக்குள், அல்லது சோதோமுக்குள் பிரவேசித்தார். அங்கு நீதிமான்களை அவர் காணவில்லை. எனவே அக்கினி விழுந்தது. அவர் லோத்தையும் அவனுடைய இரண்டு குமாரத்திகளையும் கண்டார். அங்கிருந்து உடனடியாக வெளியேறிச் செல்ல. அது வெளியேறியது. அவர் அங்கு சென்றார். அவர் அங்கு பிரயாணப்பட்டு சென்றார். அதற்கு முன்னால் அவர் தமது செய்தியாளர்களை அனுப்பினார். ஆனால் காரியங்கள் இப்படியாக இருக்கின்றன என்று கண்டுகொள்ள அவரே சென்றார். அவர் அது எதனால் நிறைந்திருப்பதைக் கண்டார்? முகங்களில் வர்ணம் தீட்டிய ஸ்திரீகள் - தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு செய்தி. அவர்கள் என்ன செய்தார்கள்? அதைக் கண்டு நகைத்தார்கள். 142இன்று அவர்கள் என்ன செய்கின்றனர்? அதேதான். “நான் அசெம்பிளிஸ் ஆப் காட்டை சேர்ந்தவன்”, “நான் ஒருத்துவத்தைச் சேர்ந்தவன்'', ''நான் ஆவியில் நடனமாடினேன். தேவனுக்கு மகிமை. நான் அந்நிய பாஷையில் பேசுகிறேன். தொடர்ந்து செய்து கொண்டிருங்கள். நான் விரும்பினால் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வேன்'', ''நான் இதைச் செய்வேன்'', ''நான் அதைச் செய்வேன்'', ''நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெறவேண்டிய அவசியமில்லை. அவர்கள் என்ன சொன்னாலும் கவலையில்லை. எப்படியாயினும், ”பவுல் ஸ்திரீகளை வெறுப்பவன்.'' சரி. தொடர்ந்து செய்து கொண்டேயிருங்கள். இந்நாட்களில் ஒருநாள், நீங்கள் ஏற்கனவே கடக்காமலிருந்தால், அந்தக் கோட்டை கடந்துவிடுவீர்கள். சரியானதை செய்ய நீங்கள் ஒருபோதும் விரும்பமாட்டீர்கள். நான் சொன்னதை கேட்டீர்களா?... சகோதரனே, சகோதரியே என்ன சொல்லப்பட்டது என்பதை உணருகிறீர்களா? நீங்கள் அந்தக் கோட்டை கடப்பீர்கள், நீங்கள் அதை செய்ய விரும்பமாட்டீர்கள். நீங்கள் சுவிசேஷத்தைக் கேட்டுக் கொண்டுதான் இருப்பீர்கள், நிச்சயமாக. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள். அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சுவிசேஷமானது தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு பிரசங்கிக்கப்படும் - நித்தியமாக இழக்கப்பட்டவர்களுக்கு; ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாதவர்களுக்கு, அந்த இடத்தில் நீங்கள் ஏற்கனவே இருக்கிறீர்கள், ஆயினும் அதை அறியாமலிருக்கிறீர்கள். நீங்கள் சந்தோஷமாக ஜீவிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உயிரோடே செத்தவர்களாயிருக்கிறீர்கள். 143கவனியுங்கள். அந்த மணி நேரத்தின் செய்தியைப் புறக்கணித்தவர்கள் எல்லோரும் தண்டிக்கப்படுவதற்கு முன்பு - சுவிசேஷமானது முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு பிரசங்கிக்கப்பட்டது. அவர்கள் கிருபையை இழந்து போவதற்கு முன்பு. நோவா பேழையினுள் அடைக்கப்பட்டது ஒரு சாட்சி. தேவன் பேழையின் கதவையடைத்தார் - அவனுடைய மூன்றாம் இழுப்புக்கு பின்பு. சோதோமின் மூன்றாம் இழுப்புக்குப் பின்பு கதவுகள் அடைக்கப்பட்டன. அதன் பின்பு அங்கு இரக்கமே இருக்கவில்லை. பத்து நீதிமான்கள் அங்கு காணப்படவில்லை. இரட்சிக்கப்படக் கூடாதபடிக்கு இழக்கப்பட்டவர்களுக்கு சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது. ஏனெனில்... ஒவ்வொரு காலத்திலும் அவ்வாறே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு காலமும் நியாயத்தீர்ப்புக்கு முன்பு செய்தியைப் புறக்கணித்தது. அவர்கள் மீண்டும் அதை செய்து விட்டார்களா? அந்த நதியில் தோன்றிய அக்கினி ஸ்தம்பம் அதைத்தான் குறிப்பிடுகிறதா? இது படிப்பறிவில்லாத அறியாமையுள்ள ஒரு ஏழை மனிதன் அல்ல, இது தேவனே என்று தேவன் திட்டவட்டமாக நிரூபித்திருக்கும் போது, வார்த்தையில் நிலைத்திருப்பதற்குப் பதிலாக, ஸ்தாபனங்களில் இணைந்து விடுகின்ற அந்த போதகர்களை கடிந்து கொண்டு, பெண்கள் தலைமயிர் கத்தரித்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் என்ன செய்ய வேண்டுமென்று காண்பிக்கும் அந்த செய்தியுடன் அது தனியாக பிரத்தியட்சமானதா? மூன்றாம் இழுப்பு மீண்டும் நித்தியமாக இழக்கப்பட்டவர்களிடம் திரும்பி வரவேண்டிய அந்த இடத்திற்கு நாம் வந்திருக்கிறோமா? 144நான் சிறுவனாக இருந்தபோது எனக்களிக்கப்பட்ட தரிசனம் அதைத்தான் காண்பிக்கிறதா? நான் மேற்கே போனேன். அங்கு சுவிசேஷத்தின் பொன் நிறமுள்ள சிலுவை கீழ் நோக்கி பிரகாசித்து, வானத்திலிருந்து அடையாளத்தை அதேவிதமாக அறிவித்தது. அந்த சிலுவை, கட்டப்பட்ட ஒரு கூர்நுனிக் கோபுரம் போல் தெளிவாக காட்சியளித்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருக்கால் அது முடிவு பெறும் தலை பாகமாக இருக்கக்கூடுமா? 145அது லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர் வழியாக வந்து கூர்நுனிக் கோபுரத்தின் தலை பாகம் இங்கே வந்திருக்கிறதா... தலைக்கல்லை பொருத்துதல். இது அதுவாக இருக்கமுடியுமா? அப்படியானால், நாம் எங்கே இருக்கிறோம்? (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை ஏழு முறைகள் தட்டுகிறார் - ஆசி.) இது ஒருக்கால்... இதுவல்ல என்று நம்புகிறேன், ஆனால் இதுவாகத்தான் இருக்கவேண்டும். (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை மூன்று முறைகள் தட்டுகிறார் - ஆசி.) இது இருக்கப் போகிறது. அந்த ஊழியங்களை நினைத்துப் பாருங்கள்... அவை ஒன்றோடொன்று பொருந்தி இணைகின்றன. அது வந்தே ஆகவேண்டும்; தேவன் மாறுவதில்லை. அதை யோசித்துப் பாருங்கள். உங்கள் மனச்சாட்சியை உங்கள் ஆவிக்குரிய பற்களினால் கடித்து, நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அது அப்படியிருக்குமானால் என்ன, நீங்கள் இருக்கிற விதமாகவே இருந்து வருகிறீர்களே. நீங்கள் அதே வழியில் சென்று கொண்டிருக்கலாம்... நீங்கள் முடிந்துவிட்டீர்கள். வெளியிலிருப்பவர்களாகிய நீங்கள் ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்தை வாங்கின பின்பு, ஆறாம் முத்திரை வெளிப்படுத்தப்பட்டுவிட்டது, மற்ற எல்லா முத்திரைகளும். அது முடிந்துவிட்டது. அது ஒருக்கால் இருக்கலாம். அது அப்படியில்லையென்று நம்புகிறேன். அது ஒருக்கால் இருக்கலாம். சரி. ஆகையால்தான் இந்த மூன்றாம் இழுப்பு இவ்வளவு தாமதமாகிறதா? 146முதலாம் இழுப்பிலிருந்து இரண்டாம் இழுப்பு. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு சென்றது என்பதை கவனியுங்கள். நான் முதலாம் இழுப்பை முதலில் தொடங்கினபோது, நான் முன்னுரைத்தது ஞாபகமிருக்கிறதா? ''ஒரு சமயம் வரும் அப்போது இருதயத்தின் இரகசியங்களையும் நான் அறிந்து கொள்வேன்“ என்று நான் கூறினேன். உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? எத்தனை பேர்... என் கூட்டங்களில் பங்கு கொண்டவர்கள் அனைவருக்கும் அது ஞாபகமிருக்கும். ஒரு இரவு நான் ரெஜினாவில். மேடைக்கு சென்றேன். சகோ. பாக்ஸ்டர் அங்கிருந்தார் - ஆயிரக்கணக்கான ஜனங்கள். ஒரு மனிதன் மேடையின் மேல் வந்தார். (சகோ. பிரன்ஹாம் தன் விரலை சொடுக்குகிறார் - ஆசி.) அப்பொழுது அது சம்பவித்தது. அன்று முதல் அதே விதமாக நடந்துவருகிறது. 147நான் ஊழியத்தை விட்டு வந்து அநேக ஆண்டுகள் (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறைகள் தட்டுகிறார் - ஆசி.) ஆயின - ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள்... அது என்ன? அதை செய்தது எது? தொடக்கத்தில் ஆதியாகமத்தின் காலத்தில் இருந்த வண்ணமாக அது “தேவனுடைய நீடிய பொறுமையா?'' அவர் உலகத்தைப் படைத்தபோது, அவர் ஏழாம் நாளில் ஒன்றையும் படைக்கவில்லை. அவர் ஓய்ந்திருந்தார். அந்த ஆறாம் ஆண்டில் தேவன் நீடிய பொறுமையுள்ளவராயிருந்தார். ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லோரும் மனந்திரும்ப வேண்டுமென்று தேவன் நீடிய பொறுமையுள்ளவராயிருந்தார். மறுபடியும் ஆதி: 15:16-ல் (நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால்) 16:15. அவர் ஆபிரகாமிடம், எமோரியரின் அக்கிரமம் - அவர்கள் புறஜாதியார் - “இப்பொழுது உன்னை அங்கு நான் கொண்டு செல்லமுடியாது. ஏனெனில் புறஜாதியாராகிய எமோரியரின் அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை. அவர்களை நான் நியாயந்தீர்ப்பேன். (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறைகள் தட்டுகிறார் - ஆசி) அந்த நாலாம் தலைமுறையிலே நான் வந்து, அந்த தேசத்தை இருப்புக் கோலால் நியாயந்தீர்ப்பேன்'' என்றார். அது சரியா? 148தேவனுடைய நீடிய பொறுமை இவ்வளவு காலமாக - ஊழியம் இடைவிடாமல் ஒலிநாடாவின் மூலமாகவும், மற்றவைகளின் மூலமாகவும் உலகம் முழுவதிலும் சுற்றி இன்னும் ஒரு ஆத்துமா உள்ளதா என்று கண்டறியவா இருந்து வந்துள்ளது? ஒருக்கால் கடைசி ஆத்துமா மிக அண்மையில் உள்ளே வந்திருக்கக் கூடும். இவ்வளவு காலமாக இருந்து வந்துள்ள அக்கிரமம் இதுதானா? இயேசு மாறாதவராயிருப்பாரானால் - அவர் மாறாதவரே (எபி. 13:8) - அவருடைய செய்தியும் மாறாததாக இருக்க வேண்டும் (முடிக்கப் போகிறேன்). அவருடைய கிரியையும் மாறாததாக இருக்க வேண்டும். 149முதலாம் இரண்டாம் இழுப்புகள் சந்தேகமின்றி... முதலாம் இரண்டாம் இழுப்புகள் பற்றி உங்கள் மனதில் ஏதாகிலும் கேள்வி உள்ளதா? அவர் கூறின விதமாகவே அது நிறைவேறினதா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) பின்பு ஏன் மூன்றாம் இழுப்பைக் குறித்து கேள்வி கேட்கிறீர்கள்? நீங்கள் ஏன் கேள்வி கேட்க வேண்டும்... முதலிரண்டு இழுப்புகளும் வேத வாக்கியங்களினால் அடையாளம் காண்பிக்கப்பட்டன. மூன்றாவதும் கூட வேத வாக்கியங்களினால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது என்று இன்று காலை உங்களுக்கு நிரூபித்தேன். நீங்கள் உலகத்தை நோக்கிப் பார்த்து அது எங்குள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் எவ்வாறு சத்தியத்தைப் புறக்கணித்தனர் என்றும், தீர்க்கதரிசனம பாகம் எவ்வாறு சரிவர அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது என்றும் பாருங்கள். இப்பொழுது நாம் எங்குள்ளோம்? ஓ தேவனே, இரக்கமாயிரும். அது என் இருதயத்திற்கு உள்ளேயிருந்து இரத்தம் வடியச் செய்கிறது. அதைக் குறித்து என்ன? நாம் எங்கேயுள்ளோம்? 150அந்த ஏழு சிகரங்களை ஞாபகம் கொள்ளுங்கள் (அவைகள் உங்களுக்கு அறிவிக்கும்). அதற்கு அப்பால் வேறொரு சிகரம் இல்லை. அது கண்டத்தை பிரிக்கும் இடத்தில் (Continental Divide) உள்ளது. அது அங்கிருந்து வனாந்தரத்திற்குள் செல்கின்றது - நித்தியம் தோன்றுகின்றது. ஏழு சிகரங்கள், கண்டத்தை பிரிக்கும் அந்த இடத்தின் மேல். அது சரியானதற்கும் தவறானதற்கும் இடையேயுள்ளது. அதன் முடிவில், மூன்றாம் இழுப்பு அந்த மலை தொடர்ச்சியின் கடைசி இழுப்பு. அதுசரியா? சரி, 151நோவா உள்ளே சென்றான். அதன்பின்பு ஏழு நாட்களாக ஒன்றும் நடக்கவில்லை. ஏழு நாட்களில் நியாயத்தீர்ப்பு வந்தது. அது மாத்திரம்... இப்பொழுது கவனியுங்கள், முடிக்கும் தருணத்தில், நோவாவின் காலத்தில் அவர்கள் மாத்திரம் அந்த அடையாளத்தை அறிந்திருந்தார்களானால், அவர்கள் மாத்திரம் அறிந்திருந்தார்களானால்... (நான் இப்பொழுது முடிக்கப் போகின்றேன்). அவர்கள் மாத்திரம் அந்த அடையாளத்தை அறிந்திருந்தார்களானால் - அந்த நாளில் இருந்த உலகத்தை, சற்று நேரத்துக்கு முன்பு நாம் படித்த அந்த வேத வாக்கியத்தில் தேவன் அதை நிரூபித்தது போல், அவர் அந்த ஜனங்களை அழித்தார். அவர்களுக்கு இரக்கம் இல்லாமல் இல்லை. அவர்களுக்கு ஒரு தீர்க்கதரிசியின் மூலம் இரக்கம் அனுப்பப்பட்டது. அவர்களோ அதை விசுவாசிக்கவில்லை. தேவன் இரக்கமுள்ளவராயிருக்கிறார். அவர் இரக்கத்தை அனுப்பினார், அவர்களோ அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் எப்பொழுதுமே இரக்கத்தை முதலில் அனுப்புகிறார். அந்த அடையாளம் கடைசி காலத்தின் அடையாளம் என்று மாத்திரம் அவர்கள் அறிந்திருந்தால்? அவர்கள் எல்லோரும் அதை பார்த்தவுடன் இரட்சிப்பு எடுபட்டுபோனது... யாருமே... முதலாவதாக, கதவுகள் அடைக்கப்பட்டன. அவர்கள் மாத்திரம்... ஒருவன் மாத்திரம் அந்த அடையாளத்தை அறிந்திருந்தான். அது நோவாவும் அவனுடைய கூட்டத்தாரும். அவன் ஒருவன் மாத்திரமே அறிந்திருந்தான். கதவு நன்றாக மூடிக் கொண்டபோது, நோவா அறிந்து கொண்டான். அதுவே முடிவு என்பதை அவன் அறிந்து கொண்டான். அவன் அறிந்து கொண்டான். அது உண்மை. அவர்கள் மாத்திரம் அந்த அடையாளத்தை அறிந்திருந்தால், 152ஓ, அவர்கள் மாத்திரம் அந்த அடையாளத்தை அறிந்திருந்தால்! ஆபிரகாமுடன் இருந்த அந்த ஒருவர் அங்கு வருவதை கண்டபோது; அந்த காலத்து நவீன பில்லிகிரகாமும், ஓரல் ராபர்ட்ஸும் அங்கு சென்று குருடாக்கப்பட்ட ஜனங்களுக்கு செய்தியைப் பிரசங்கித்தபோது, அந்த காலத்து நீதியுள்ள மெதோடிஸ்டுகளும் பாப்டிஸ்டுகளும் அவர்களுக்கு ஒரு அடையாளமாக அளிக்கப்பட்டிருந்தனர் - அதாவது லோத்து - என்பதை அறிந்திருந்தார்களானால் அவர்களுடைய பாவம் லோத்தின் ஆத்துமாவை வாதித்தது. மெதோடிஸ்டுகளும் பாப்டிஸ்டுகளும் என்ன செய்தார்கள்? லோத்து செய்தது போல. அதே காரியம்தான். அதிலிருந்த நீதிமான்கள் வெளியே வந்தனர். பில்லி கிரகாம் அங்கு சென்றபோது... “தீர்மானம் செய்து கைகளை உயர்த்தி, வாயில் மெல்லும் பசையை (Chewing gum) மென்று, ஒருவரையொருவர் வேடிக்கையாக குத்தி கேலி செய்து கொண்டு, தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டு, முகங்களில் வர்ணம் தீட்டிக் கொண்டு, சிறிதும் கூட அதைக் குறித்த அசைவில்லை”. அடுத்த நாள் பில்லி வந்து, “எனக்கு 30,000 கிடைத்துவிட்டனர்'' என்று கூறி, ஒரு ஆண்டு கழித்து அங்கு சென்று ”எனக்கு 30 பேர் கூட இல்லை'' என்று கூறினார். ''நான் தீர்மானம் செய்துவிட்டேன், நான் நரகத்துக்குப் போவதில்லை, நான் பரலோகத்துக்குச் செல்கிறேன்“ என்றெல்லாம் அவர்கள் கூறினர். பார்த்தீர்களா? பாவத்திற்குள் நடந்து செல்லுதல். 153சுவிசேஷமானது அக்கினி ஸ்தம்பத்தின் கீழ் வல்லமையோடும், அற்புதங்களுடனும் அடையாளங்களுடனும் பிரசங்கிக்கப்பட்ட போதிலும், எல்லாமே அதேவிதமாக நடந்து கொண்டிருக்கிறது. அது முன்னறிவிக்கப்பட்டு உரைக்கப்பட்டது... அவர்களோ, “உருளும் பரிசுத்தர் கூட்டத்தினர். அது மனோவசியம், ஒருவிதமான குறி சொல்லும் ஆவி, பிசாசு. அது அவ்வளவுதான். அதை நம்பாதீர்கள். அது நமது ஸ்தாபனத்தில் இல்லை. அதற்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை'' என்றனர். அவர்கள் மாத்திரம் அந்த அடையாளத்தை அறிந்திருந்தால்! அவர்கள் மாத்திரம் அறிந்திருந்தால்... இயேசு, “எருசலேமே, நீ மாத்திரம் உன் நாளை அறிந்திருந்தாயானால், நீ மாத்திரம் அடையாளம் கண்டுகொண்டிருந்தால் நலமாயிருக்கும். இப்பொழுதோ நீ உன் சொந்த தீர்மானத்துக்கு விடப்பட்டிருக்கிறாய். நீ மாத்திரம்... ஓ, எருசலேமே, எருசலேமே கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழ் கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக, நான்எ த்தனையோ தரம், வரவிருக்கும் நியாயத்தீர்ப்பிலிருந்து நீ தப்பித்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உன்னைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன். ஆனால் நீ உன் நாளை அறிந்து கொள்ளவில்லை. தீர்க்கதரிசிகளைக் கல்லெறிந்து, நீதிமான்களைக் கொலை செய்கிறவளே, உன் நாளை மாத்திரம் நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும். நீ மாத்திரம் உன் நாளை அறிந்திருந்து, உன் வேதத்தை அறிந்திருந்தாயானால், என் வருகை உன் முடிவுக்கு அடையாளம் என்பதை அறிந்திருப்பாய். ஆனால் நீ இப்பொழுது குருடாயிருக்கிறாய். நீ கடிந்து கொள்ளப்பட்டாய். உன்னுடைய நேரம் முடிந்துவிட்டது'' என்றார். அவர் சொன்னபடியே அவளுடைய நேரம் முடிந்திருந்தது. அது உண்மை. நீ மாத்திரம் நேரத்தை அறிந்திருந்தாயானால்! 154கவனியுங்கள், இயேசு அந்த பிரகடனத்தை செய்த பின்பும், உலகம் தன் போக்கிலேயே சென்று கொண்டிருந்தது. உலகம் சர்வ சாதாரணமாக சென்று கொண்டிருந்தது. ஏன்? அவர்கள் தங்களுடைய வேளையை, மணி நேரத்தை அறிந்து கொள்ளவில்லை. நோவா பேழைக்குள் சென்றபோது, உலகம் தன் போக்கிலேயே சென்று கொண்டிருந்தது. அக்காலத்திலிருந்த பரியாசக்காரர் அப்பொழுதும் செக்ஸ் விருந்துகளை நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் புசித்தார்கள், குடித்தார்கள், பெண் கொண்டார்கள், இன்று ஜனங்கள் புரிந்துவரும் அதே செயல்களை புரிந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் அதே போன்ற, சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. “ஆ அந்த உருளும் பரிசுத்தன் பேழையின் கதவை அடைத்துவிட்டான். இப்படி ஏதாகிலும் ஒன்றை நீங்கள் கேட்டதுண்டா? அவன் என்ன சொல்லுகிறான் தெரியுமா? நாமெல்லாரும் தண்ணீரில் மூழ்கிவிடப் போகிறோமாம். அர்த்தமற்றது. அதற்கு தண்ணீர் எங்கேயுள்ளது?'' என்றனர். நோவாவின் காலத்தில் பரியாசக்காரர். “மனுஷகுமாரன் வருகையிலும் அப்படியே நடக்கும் சரி. நோவா அடையாளம் என்னவென்பதை அறிந்திருந்தான். லோத்தின் நாட்களிலும் அதுபோன்றே இருந்தது. இயேசுவின் காலத்திலும் அவ்வாறே இருந்தது; இன்றும் அவ்வாறேயுள்ளது. அவர்கள் கடைசி முறையாக பரியாசம் பண்ணுவார்கள். சோதோமிலும் அவ்வாறே நிகழ்ந்தது. அந்த செய்தியாளன் அங்கு நின்று கொண்டிருந்தபோது, அவர்கள் அறியவில்லை... தேவனிடமிருந்து வந்த செய்தி. அவர்கள் எள்ளி நகைத்து, தங்களுடைய பொல்லாத செய்கைகளுக்கு அவர்களையும் உட்படுத்த முயன்றார்கள். அது சரியா? ''எங்களை சேர்ந்து கொள்ளுங்கள், எங்களில் ஒருவராகிவிடுங்கள். எங்கள் பையன்களில் ஒருவராக இருப்பீர்கள். வாருங்கள். எங்களை சேர்ந்து கொள்ளுங்கள்''. அவர்கள் தங்கள் அடையாளத்தை அறிந்து கொள்ளவில்லை. 155அந்த செய்தி போய்க் கொண்டிருந்தபோது, அவர்கள் அதை அறிந்து கொள்ளவில்லை. அக்கினியும், கோபாக்கினையும், தேவனுடைய நியாயத்தீர்ப்பும் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை... அக்கினி எரிந்து கொண்டிருக்கிறது. வானங்களில் கந்தகக் கற்கள் பற்றியெறிந்து கொண்டிருக்கின்றன. அவர்களால் அதைக் காண முடியவில்லை. ஆனால் செய்தியாளர்களுக்கோ அது தெரிந்திருந்தது. லோத்தும் கூட அதை அறிந்திருந்தான். அது அங்கிருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான். நிச்சயமாக. இன்றுள்ளது போலவே. அதே காரியம்தான். கோபாக்கினை பற்றி எரிந்து கொண்டிருக்கிறது; அணு குண்டுகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. எல்லாமே முடியப்போகும் தருணத்தில் உள்ளது. இன்றைக்கு அவ்வாறேயுள்ளது... பாருங்கள், ஜனங்களே. கவனியுங்கள். உங்களுக்குத் தெரியுமா? நீங்கள், ''சகோ. பிரன்ஹாமே, ஓ, இதைக் குறித்தெல்லாம் என்ன?'' என்று கேட்கிறீர்கள். உங்களுக்குத் தெரியுமா? ஜனங்கள் எப்பொழுதும் போல் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக் கொண்டேயிருக்கக் கூடும் - அவர்கள் சுவிசேஷம் என்று அழைப்பதை; ஆனால் அது முடிவடைந்திருக்கும். நோவாவின் நாட்களில் அவர்கள் அப்படியே செய்தார்கள். லோத்தின் நாட்களில் அவர்கள் அப்படியே செய்தார்கள். இயேசுவின் நாட்களிலும் அவர்கள் அப்படியே செய்தார்கள். அது சரியா? கோபாக்கினை வந்துவிட்டது என்று இயேசு யூதர்களிடம் சொல்லிய பின்பும்... ''நீங்கள் முடிந்துவிட்டீர்கள். இனி வேறொன்றும் இல்லை. நீங்கள் முடிந்துவிட்டீர்கள்“ என்றார் அவர். அவர்களோ , “ஓ, அந்த உருளும் பரிசுத்தன். அவன் எந்த பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு வந்தான்? அவன் எங்கிருந்து வந்தான்'' என்றனர். அவர் அப்பொழுது அவருடைய மூன்றாம் இழுப்புக்கு ஆயத்தமாயிருந்தார் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது உண்மை. “எத்தனை தரமோ உன்னைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன்'' என்றார் அவர். 156லோத்து தன் கடைசி அழைப்பைவிடுத்தான், அதாவது தூதன் அதை செய்தார் - செய்தியாளன், அது யாராயிருப்பினும், தேவன் அந்நாளில் பிரதிநிதியாகத் தோன்றினார். தேவன் மாம்சத்தில் பிரதிநிதியாகத் தோன்றி, தமது கடைசி அடையாளத்தைக் காண்பித்து, தமது கடைசி வேலையைச் செய்தார். அதன்பின்பு எல்லாமே முடிந்துவிட்டது. நோவா தன் கடைசி பிரசங்கத்தை செய்தான். அவன் உள்ளே சென்றவுடன் கதவு அடைக்கப்பட்டது. அவ்வளவுதான். அவர்கள் அதைப் பார்த்து நகைத்தார்கள், கேலி செய்தார்கள். யோசித்துப் பாருங்கள். ஜனங்கள் பிரசங்கித்துக் கொண்டே செல்லமுடியும். உலக சபைகள் ஆலோசனை சங்கம், அவர்கள் வாக்குரைத்தபடியே, கத்தோலிக்க சபையுடன் சேர்ந்து கொள்ள முடியும். எல்லா ஸ்தாபனங்களும் அதற்குள் வரக்கூடும். ஆனால் மிருகத்தின் முத்திரை ஏற்கனவே அங்குள்ளது. அதை அவர்கள் தரித்துக் கொண்டுவிட்டனர். அவர்கள் ஓ, “அல்லேலூயா தேவன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. கடந்த இரவு அநேகர் இரட்சிக்கப்பட்டனர்” என்கின்றனர். அப்படியா? ''அவர்கள் ஆவியில் நடனமாடினார்கள், அந்நிய பாஷை பேசினார்கள்'' அதனால் ஒன்றுமேயில்லை. ''ஓ, அவர்கள் சாந்தகுணமுள்ளவர்கள். ஆம், ஐயா. அவர்கள் ஆவியின் கனியைப் பெற்றிருக்கின்றனர். அது அடையாளமல்ல, சிறிதளவும் கூட இல்லை. இயேசுவுக்கும் பரிசேயருக்கும் இடையே யாரிடம் ஆவியின் கனி இருந்தது என்பதைக் காண்பிக்கட்டும். சற்று முன்பு நான் கூறிய வண்ணமாக, நான் இங்கு நின்றுகொண்டு ஒரு நிமிடம் கிறிஸ்துவுக்கு விரோதமாக பேசப் போகின்றேன். அதை கூறுவதற்கும் கூட தேவன் என்னை மன்னிப்பாராக. ஆனால் உங்களுக்கு ஒன்றைக் காண்பிக்கவே. 157நான் உங்களிடத்தில் வந்து இப்படி கூறுகிறேன் என்று வைத்துக் கொள்வோம், “சபையோரே, உங்கள் நண்பர் யார்? யார் ஆவியின் கனியை வெளிப்படுத்துவது? தயையுள்ள அந்த வயோதிப குருவானவர். நீங்கள் வியாதியாயிருக்கும் போது உங்களை ஆஸ்பத்திரியில் வந்து காணுகின்றாரே, அந்த சாதுவான வயோதிப குருவானவர் அல்லவா? அது உண்மை. உங்களுக்கு பண நெருக்கடி இருக்கும்போது, உங்களுக்கு பணம் கடனாக கொடுத்து உதவுபவர் யார்? சபை அங்கத்தினரே, அந்த தயையுள்ள வயோதிப குருவானவரிடம் நீங்கள் செல்லும் போது, அவர் கடனுதவி செய்கிறார் அல்லவா?'' “எப்பொழுதும் அன்பாகவும் தயவாகவும் இருந்து, ஆவியின் கனியை காண்பிப்பது யார்? உங்கள் தயையுள்ள வயோதிப குருவானவர். அவருடைய பாட்டனார், பாட்டனார், பாட்டனார், பாட்டனார், முப்பாட்டனார், இப்படி வழிவழியாக வந்த அந்த ஜெபஆலயத்தில் அநேக ஆண்டுகளாக படித்தது யார்? - கடினமாக உழைத்து படித்து, இந்த வார்த்தையை அறிந்து கொள்வதற்காக டாக்டர் பட்டங்கள் பி.எச்.டி, மற்றும் எல்.எல்.டி பட்டங்களைப் பெற்று, தமது சபையின் முன்னால் ஒவ்வொரு ஞாயிறுதோறும் பிரசங்கம் செய்வது யார்? உங்கள் தயவுள்ள வயோதிப குருவானவரே.'' 158''இயேசு என்றழைக்கப்படும் இந்த துரோகி யார்“? இவர் எந்த பள்ளிக்கூடத்தில் படித்துவிட்டு வந்தார்? இவர் எந்த பள்ளிக்கூடத்திலிருந்து வெளிவந்தவர்? அவருடைய ஐக்கிய அட்டை எங்கே? அவர் எந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவர்? உங்கள் குடும்பத்தில் சச்சரவு உண்டாகும் போது அவர் என்ன செய்கிறார்? உங்களிடத்தில் வருவது யார்? உங்கள் தயையுள்ள வயோதிப குருவானவர். அவர்கள் முயல்கின்றனர்... உங்கள் அண்டை வீட்டாரிடம் உங்களுக்கு சச்சரவு உண்டாகும் போது, உங்கள் தயையுள்ள வயோதிப குருவானவர் வந்து உங்களுக்கு சமரசம் செய்து வைக்கிறார். ''நீங்கள் எல்லோரும் தேவனுடைய பிள்ளைகள், நீங்கள் அப்படி சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது'' என்று அவர் ஆலோசனை கூறுகிறார். அதைத் தான் அவர்... நசரேயனாகிய இயேசு என்ன செய்கிறார்? அவர் எல்லாவற்றையும் கிழித்தெறிகிறார். அவர் என்ன செய்கிறார்? உங்கள் ஸ்தாபனத்தை கடுமையாகக் கடிந்துகொள்கிறார். அவர் என்ன செய்கிறார்? உங்கள் குருவானவரை “குருடருக்கு வழி காட்டும் குருடன்'' என்றழைக்கிறார். அவரை ”புல்லின் கீழுள்ள பாம்பு“ என்று அவர் அழைத்தார். தேவன் நியமித்த பலியை அவர் எடுத்துப்போட்டு, மேசைகளை உதைத்து, காசுகளை வெளியே எறிந்து, ”அவர்களை கோபத்துடன் பார்த்தார். உங்கள் குருவானவர் இப்படி கோபத்துடன் பார்ப்பதை நீங்கள் எப்பொழுதாவது கண்டதுண்டா? அப்படியானால் ஆவியின் கனி எங்குள்ளது?'' 159அந்நிய பாஷை பேசுவதனால் அல்ல, ஆவியில் நடனமாடுவதனால் அல்ல, ஒரு ஸ்தாபனத்தை சேர்ந்து கொள்வதனால் அல்ல, ஆவியின் கனியினால் அல்ல (கிறிஸ்தவ விஞ்ஞானம கூட்டத்தார் உங்கள் யாவரையுமே அதில் மிஞ்சிவிட முடியும்). அதே சமயத்தில் இயேசு கிறிஸ்து தேவன் என்பதை மறுதலிக்கவும் முடியும். அதுவல்ல. வார்த்தை ஜீவிப்பதாகும். அதுதான். அவர்கள் மாத்திரம் என்றும் நோக்கிப் பார்த்திருந்தால் அவர் தான் மேசியாவென்றும், அவர் தான் மாம்சத்தில் வெளிப்பட்ட ஜீவ வார்த்தை என்றும் அவர்கள் அறிந்திருப்பார்கள். தேவனுடைய ஆவியை தனக்குள் கொண்டுள்ள எந்த மனிதனும், எந்த ஸ்திரீயும் - அந்த வார்த்தை அவர்களுக்குள் ஜீவிக்கிறது. அதுவே முன்குறிக்கப்பட்டவர்களின் இருதயத் துடிப்பாக அமைந்துள்ளது. ஏனெனில் கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்கு வருகிறது. அவர்கள் ஜனங்களுக்கு வார்த்தையாகத் திகழ்கின்றனர் - எல்லா மனிதராலும் வாசிக்கப்படும் எழுதப்பட்ட நிரூபங்களாயுள்ளனர். அது சரியா? மூன்றாம் இழுப்பானது வந்துவிட்டதா? 160ஒலிநாடாவில் இந்த செய்தியை கேட்கிற ஜனங்களே, இந்த சபையோரை இந்நேரத்தில் நீங்கள் காண வேண்டுமென்று விரும்புகிறேன். நீங்களும் அதேவிதமான உணர்ச்சியை பெற்றிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அப்படியிருக்குமானால்? இங்கு குவிக்கப்பட்ட வேத வாக்கியங்களைப் பாருங்கள். அப்படியிருக்குமா? மூன்றாம் இழுப்பு, இரட்சிப்பின் செய்தியை புறக்கணித்து நித்தியமாக தண்டிக்கப்பட வேண்டியவர்களுக்கு பிரசங்கிக்கப்பட வேண்டிய ஒன்றா? ''நல்லது, சபை போய்க் கொண்டிருக்கிறது'' என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆம், அவர்கள் அப்படித்தான் போய்க் கொண்டிருப்பார்கள். அவர்கள் அதே விதமாகத்தான் போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் அப்பொழுதெல்லாம் நோவா பேழைக்குள் இருந்தான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். மணவாட்டி கிறிஸ்துவோடு முத்தரிக்கப்பட்டிருக்கிறாள். கடைசி நபர் மீட்கப்பட்டுவிட்டார். ஆறாம் முத்திரை தன்னை வெளிப்படுத்திவிட்டது. ஏழாம் முத்திரை அவரை மறுபடியும் பூமிக்கு கொண்டு வருகிறது. ஆட்டுக்குட்டியானவர் வந்து அவருடைய வலது கரத்திலிருந்து புத்தகத்தை வாங்கி, உட்கார்ந்து, தமக்கு சொந்தமானவர்களை - தாம் மீட்டுக் கொண்டவர்களை - உரிமையாக்கிக் கொண்டார். அது சரியா? அது எப்பொழுதுமே அந்த மூன்றாம் இழுப்பாக இருந்து வந்துள்ளது. 161மூன்று என்பது பரிபூரணத்தைக் குறிக்கிறது. மனிதர்களின் மத்தியில் அது கிறிஸ்துவை மீண்டும் மாம்சத்தில் தோன்றச் செய்யும் போது, ஊழியம் அதன் பரிபூரணத்தை அடைகின்றது. “லோத்தின் நாட்களில் நடந்ததுபோல என்று முன்னுரைக்கப்பட்டது போல. யோசித்துப் பாருங்கள். ஜனங்கள் பிரசங்கித்துக் கொண்டேயிருக்கலாம். அவர்கள் இரட்சிக்கப்படுகின்றனர் என்று நினைத்து, அவர்கள் சரியானதை செய்து கொண்டிருக்கின்றனர் என்றும், அவர்களுடைய ஸ்தாபனங்கள் வளர்ந்து வருகின்றன என்றும் எண்ணிக் கொண்டிருக்கலாம். நிச்சயமாக. ஆனால் அவர்களுக்கு துளியளவு கூட நம்பிக்கை கிடையாது. அந்தத் தரிசனம் அதுவாயிருக்குமானால் - அது ஸ்திரீகளுக்கு விரோதமாக மிகவும் கடினமாக இருந்தது - நாம் அந்த மணி நேரத்துக்கு வந்து விட்டோம். கதவு அடைபட்டுவிட்டது. ஏற்கனவே அந்தப் புத்தகம் அவர் கையிலுள்ளது. அதை யோசித்துப் பாருங்கள். 162முடிக்கும் முன்பு, இதை உங்களிடம் கூற விரும்புகிறேன் நான் முடிக்கப் போகிறேன். ஐயர்லாந்து நாட்டில் கடலை நோக்கினாற்போல், ஒரு பெரிய பாறை (reef) கடற்கரையை ஓட்டினாற்போல் போய்க் கொண்டிருந்ததாம். இந்தப் பெரிய குன்றின் மேல், ஒருநாள் ஒரு மனிதன் கடற்கொந்தளிப்பு ஏற்படப் போகின்ற நேரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தானாம். இந்த கடற்கொந்தளிப்பைக் குறித்து நன்கு அறிந்திருந்த ஒரு நல்ல மனிதன் அந்த குன்றின் மேல் வசித்துவந்தார். எந்த நேரத்தில் கடற்கொந்தளிப்பு ஏற்படும் என்று அவருக்குத் தெரியும். ஆனால் இதன்மேல் நடந்து சென்று கொண்டிருந்த மனிதன் எந்த நேரத்தில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதைக் குறித்து கவலை கொள்ளவேயில்லை. அவன் “எல்லாம் தெரிந்த மேதாவிகள்” என்று எண்ணிக் கொள்பவர்களில் ஒருவன். அவனுக்கு தன்னுடைய சொந்தக் கருத்து இருந்தது. அவன் விளையாட்டு வீரனைப்போல் நல்ல தேகக்கட்டு கொண்டவன். அவன் சாமர்த்தியமுள்ளவன், புத்திசாலி. ஆனால் அவன் கொந்தளிப்பு ஏற்படும் நேரத்தை அறிந்திருக்கவில்லை. அவன் தேசத்தைக் குறித்து அறிந்திருக்கவில்லை. சந்திரன் எப்பொழுது தன்னை பூமியிலிருந்து இழுத்துக் கொண்டதென்றும், அடையாளம் நிகழும் நேரம் என்னவென்றும் அவன் அறிந்திருக்கவில்லை. 163அவ்வாறே தேவன் தம்முடைய ஆவியை பூமியிலிருந்து இழுத்துக் கொள்ளும்போது, சகோதரனே, பூமி அவ்வளவுதான். எல்லாமே முடிந்துவிட்டது. சந்திரன் தன்னுடைய ஸ்தானத்திலிருந்து நகர்ந்துவிட்டால், ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் தேவன் தொடங்கின விதமாக, தண்ணீர்கள் பூமியை மூடிக்கொள்ளும். ஆனால் சந்திரன் அந்த இடத்திலேயே உள்ளது. அது எப்பொழுதாவது தலையைத் திருப்பும் போது, கடலில் கொந்தளிப்பு ஏற்படுகின்றது. கொந்தளிப்பின் மத்தியிலேயே வாழ்ந்து வந்த அந்த ஞானமுள்ள வயோதிபன், அது எந்த மணி நேரமாயிருந்தது என்பதை அறிந்திருந்தான். ஆனால் இந்த மனிதனோ அதை அறியவில்லை. அதை அவன் கற்றுக் கொள்ளவேயில்லை. அதைக் குறித்து அவன் கவலை கொள்ளவும் இல்லை. இந்த ஞானமுள்ள வயோதிபன் ஓடிப்போய், “எனக்கு அருமையானவனே, மேற்கொண்டு போகத் துணியாதே. வேகமாகத் திரும்பி வா. அங்கு ஒரு சுவர் உள்ளது. நீ அந்த சுவரின் மேல் ஏறமுடியாது. நீ அழிந்து போவாய். அதற்கான அடையாளங்கள் தெரிய ஆரம்பித்துவிட்டன. அலைகள் கொந்தளித்து ஒரேயடியாக வேகமாய் பாய்ந்து வரும். உன்னால் திரும்பி வரவே முடியாது. மேற்கொண்டு போகாதே” என்றான். அந்த மனிதனோ அவனைத் திரும்பிப் பார்த்து நகைத்து, “நீ போய் உன் வேலையைப் பார். என்னால் என்ன செய்ய முடியுமென்றும் என்ன செய்ய முடியாதென்றும் எனக்குத் தெரியும்'' என்றான். கொந்தளிப்பின் அலைகளில் அவன் சிக்கிக் கொண்டான். 164நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாயிருக்கக் கூடும், அங்கு அது உங்களைப் பிடித்துக் கொள்ளும். ஜனங்களே, மேற்கொண்டு செல்லாதீர்கள். நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசித்தால், இன்று காலை என் வார்த்தையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே காலதாமதமாகியிருக்கக் கூடும், எத்தனையோ வேத வாக்கியங்கள் அவ்விதமாக சுட்டிக் காட்டுகின்றன. நான் அப்படித்தான் என்று திட்டவட்டமாக கூறவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனக்குத் தெரியாது. ஆனால் சற்று கவனித்துப் பாருங்கள். நான் உங்களுக்குச் சொல்ல பயப்படுகிற காரியங்களை ஏறக்குறைய பத்து பக்கங்களில் எழுதி வைத்திருக்கிறேன், அவைகளை கூறாமல் விட்டுவிட்டேன். திருமதி. உட் அதற்கு சாட்சி - திரு. உட்டும் கூட. அவர்களைக் காண இன்று நான் சென்றிருந்தபோது நான், “அவர்களிடம் நான் சொல்ல முடியாது. என்னால் முடியாது... இத்தனை வேத வாக்கியங்களை மாத்திரம் கூறிவிட்டு அதை அவர்களிடம் விட்டுவிடப் போகின்றேன். ஏனெனில், ”இது ஒலி நாடாவில் பதிவு செய்யப்படப் போகின்றது'' என்றேன். இந்த செய்தியை பரிகசிக்கப் போகும் ஜனங்களிடத்திலும் இந்த ஒலிநாடா செல்லும். பரவாயில்லை, என்றாகிலும் ஒருநாள், நீங்கள் உங்கள் வழிகளை விட்டுத் திரும்புவது என்பது கூடாத காரியமாயிருக்கும். சென்று கொண்டேயிருங்கள். ஒரு ஸ்தாபன அங்கத்தினராகவே இருங்கள், உங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளுங்கள், உங்கள் முகத்தில் வர்ணம் தீட்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமானால் சென்று பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். அதை மூன்று கடவுள்களாக்கிக் கொண்டு அஞ்ஞானியாகிவிடுங்கள். போங்கள், உங்கள் ஸ்தாபனத்தில் நிலைத்திருங்கள். உங்களுக்கு விருப்பமானால் அப்படி செய்யுங்கள். ''நான் ஆவியில் நடனமாடினேன், நான் அந்நிய பாஷை பேசினேன், நான் பெற்றுக் கொண்டேன்'' என்று சொல்லிக் கொண்டிருங்கள். 165பிசாசுகளும் அப்படிப்பட்டவைகளைச் செய்வதை நான் கண்டிருக்கிறேன். மந்திரவாதிகள் அந்நிய பாஷை பேசி அதற்கு அர்த்தம் உரைப்பதையும் அவர்கள் மண்டை ஓட்டிலிருந்து இரத்தத்தைக் குடித்து, பிசாசை கூப்பிட்டு, அந்நியபாஷையில் எழுதி, அதற்கு அர்த்தம் உரைத்து, ஆவியில் நடனமாடுவதையும் நான் கண்டிருக்கிறேன். முகம்மதியர்கள் ஆவியில் நடனமாடிக் கொண்டே வந்து, முடிவில் கண்ணாடித் துண்டுகளை எடுத்து தங்கள் விரல்களைக் கீறிக் கொள்ளுவார்கள். ஒரு ஈட்டியை எடுத்து முகத்தை இப்படி கீறிக்கொண்டு, அதை வெளியே எடுக்கும் போது ஒரு சொட்டு இரத்தம் கூட முகத்திலிருந்து வராது. இந்தியர்கள் வெறுங்காலில் மூன்று அடி ஆழம், மூன்று அல்லது நான்கு அடி அகலமுள்ள குழியில் உள்ள நெருப்பின் மேல் நடப்பார்கள். அது நன்றாக சூடேறும்வரை கரித் துண்டுகளைப் போட்டு காற்றடிப்பார்கள். அப்படியிருந்தும் அவர்களுடைய பாதங்கள் வெந்து போவதில்லை. இவர்கள் இயேசு கிறிஸ்து என்று ஒருவர் இருக்கிறார் என்பதையே மறுதலிக்கின்றனர். 166இல்லை, இல்லை, நண்பர்களே. வார்த்தை மாத்திரமே இதை உரைக்கிறது. ஜனங்களும் வார்த்தையும் ஒன்றாக ஆகவேண்டும். இயேசுவும் வார்த்தையும் ஒன்றாயிருந்தனர். அவரே வார்த்தையாயிருந்தார். இயேசு மானிடரில் ஜீவிக்கும் போது, அது அவனையும் வார்த்தையையும் ஒன்றாகச் செய்து விடுகிறது. நீங்கள் யாரென்பதை உங்கள் வாழ்க்கை அறிவிக்கிறது. இப்பொழுது நாம் ஜெபிக்கும்போது, தேவனுடைய நிலைக் கண்ணாடியில் உங்களை நோக்கிப் பார்த்து, ''இன்று காலை நான் எப்படி காணப்படுகிறேன்?'' என்று கேட்டுக் கொள்ளுங்கள். (கூட்டத்திலுள்ள ஒருவர் அந்நிய பாஷை பேசி தீர்க்க தரிசனம் உரைக்கிறார் - ஆசி). ''நான் தேவனை விட்டு வெகு தூரம் அலைந்து திரிந்தேன் இப்பொழுது வீட்டுக்கு வருகிறேன் (எப்பொழுதாவது ஜெபித்திருப்பீர்களானால், இப்பொழுது ஜெபியுங்கள்) உமது அன்பின் கரங்களை விரிவாய் திறவும் ஆண்டவரே, நான் வீட்டுக்கு வருகிறேன். வீட்டுக்கு வருகிறேன், வீட்டுக்கு வருகிறேன்...'' 167நீங்கள் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கும் போது, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். பாவத்தினால் அந்தகாரப்பட்டுள்ள ஒரு இடம் உங்கள் இருதயத்தில் உள்ளதா? அப்படியானால் அதைப் போக்கிக் கொள்ள இதுவே தருணம், இரக்கம் எடுபட்டிருக்காது என்று நம்புகிறேன். ஆனால் ஒருக்கால் அப்படியிருக்கக் கூடும் என்று தோன்றுகிறதல்லவா? நான் பேசி முடிந்த பிறகு, பரிசுத்த ஆவியானவர் ஜனங்களின் மத்தியில் என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். ''அது உங்களுக்காக பேசப்பட்ட சத்தம்...'' உங்கள் வாழ்க்கையில் ஏதாகிலும் அந்தகாரம் இருக்குமாயின் நாம் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், பீடத்தண்டை வரமாட்டீர்களா? இப்பொழுதே. மனச்சோர்வும், பாவக்கறையும் இருக்குமானால், அதை இன்னும் தள்ளிப்போட வேண்டாம். அது அப்படியல்லவென்று நம்புகிறேன், ஆனால் ஒரு நாளில் கிருபை எடுபடும், அது ஒருக்கால் இன்றாக இருக்கலாம். “இப்பொழுது ஆண்டவரே, நான் வருகிறேன்...'' 168உங்கள் நாசியில் சுவாசம் இருக்கும் இந்நேரத்தில் - இந்த ஒலி நாடாவைக் கேட்கப்போகும் ஜனங்கள் இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை மாத்திரம் காண முடிந்தால் ஜனங்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து நெருக்கிக் கொண்டு, கதறி அழுது, எல்லா பக்கங்களிலிருந்தும் வந்து கொண்டிருக்கின்றனர். நான் சிறுவனாயிருந்த போது கண்ட தரிசனம்... இதுதான் அந்த மணி நேரமா? இதுதான் அந்த நேரமா? மனச்சோர்வுடனும், மகிழ்ச்சியற்றவர்களாகவும் அங்கே அவர்கள்... பூமியிலேயே நரகம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. பிரசங்க பீடமும் வழிநடைபாதைகளும் இப்பொழுது ஜனங்களால் நிரம்பி வழிந்துள்ளது. இங்குள்ள நூற்றுக் கணக்கானோரிலிருந்து: எவராகிலும் பிரசங்கபீடத்தின் அருகாமையிலும் வழி நடைபாதைக்கும் வரமுடியாவிட்டால் அங்கேயே எழுந்து நின்று... “ஜனங்கள் அறியவேண்டும் என்பதற்காக நான் எழுந்து நின்று ஜெபிக்க விரும்புகிறேன்” என்று சொல்லுங்கள். அல்லது முழங்கால்படியுங்கள், எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஓ, என்னே! இப்பொழுது யாரும் உட்கார்ந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியாது. ஜனங்கள் எல்லாவிடங்களிலும் நின்று கொண்டிருக்கின்றனர். இதை நான் கூற விரும்புகிறேன். நான் இப்பொழுது கூறினதை அப்படியில்லாமலிருக்க தேவன் செய்வாராக! உள்ளே வராத பிள்ளைகள் எனக்கும் உண்டு. எனக்கு இரண்டு பெண்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். எனக்கு சகோதரர்களும் உண்டு. உள்ளே வராத என் ஜனங்கள் உண்டு, கிருபை நம்மை விட்டுப் போய்விட்டது என்பதை, தேவன் அப்படியில்லாமலிருக்கும்படி செய்வாராக! அப்படி இருக்குமானால், இவையாவும் பாவனையாகவே இருக்கும். ஆண்டவரே, இன்னும் கிருபை உள்ளதா? ஆண்டவரே, இந்த விஷயத்தில் நான் தவறாயிருக்கட்டும். அப்படியில்லாமல் இருக்கட்டும், ஜனங்கள் இன்னும் இரட்சிக்கப்படட்டும். ஆண்டவரே, அதை அருள்வீராக. நான் ஜெபித்து அந்த கூட்டத்தாரை உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில். 169எல்லோரும் ஜெபம் செய்யுங்கள்... அப்படியிருக்குமானால்? அப்படித்தான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அப்படியிருக்குமானால்? உங்கள் வழியில் நீங்கள் ஜெபியுங்கள். நீங்கள் எந்த விதத்தில் ஜெபம் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த விதத்தில் ஜெபம் செய்யுங்கள். ஒருக்கால் இது உண்மையாயிருக்குமானால், நாம் என்ன செய்யப் போகிறோம், நண்பர்களே? நாம் என்ன செய்யப் போகிறோம்? நமக்கு என்ன சம்பவிக்கப் போகின்றது? எல்லோரும் ஜெபியுங்கள். நீங்கள் விரும்பும் விதத்தில் ஜெபியுங்கள். உங்கள் சொந்த விதத்தில், தேவனிடத்தில் கதறுங்கள். ஓ, தேவனே! உமது அன்பின் கரங்களை விரிவாய்த் திறவும் ஓ, ஆண்டவரே, நான் வீட்டுக்கு வருகிறேன் 170ஆண்டவரே, இதை நான் நீண்ட காலம் முன்பே செய்ய வேண்டுமென்றிருந்தேன். நான் நீண்ட காலம் தாமதித்து விட்டேனோ?இது... இது முடிந்துவிட்டதா? ஓ, தேவனே, உமது அன்பின் கரங்களை விரிவாய் திறந்து என்னை ஏற்றுக்கொள்ளும், ஆண்டவரே, என் இருதயத்திலுள்ள ஏதோ ஒன்று அதற்காக கெஞ்சுகிறது. ஒருமுறை திறவும். என் பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தால், ஆண்டவரே இப்பொழுது என்னுடன் பேசும், இப்பொழுதே அதை நான் பெற்றுக் கொள்ளட்டும். தேவனே, தயவு கூர்ந்து அதை செய்வீராக. “வீட்டுக்கு வருகிறேன், வீட்டுக்கு வருகிறேன் இனி ஒருபோதும் அலையாதிருக்க (ஆண்டவரே, இனி ஒருபோதும் செய்யமாட்டேன்) உமது அன்பின் கரங்களை விரிவாய்த் திறவும் ஓ, ஆண்டவரே, நான் வீட்டுக்கு வருகிறேன்'' 171அவர்கள் இயேசுவை அடையாளம் கண்டுகொண்ட போது, தன் ஒரே பேறான குமாரன் கொலை செய்யப்பட்டது போல ஒவ்வொருவரும் புலம்பி அழுவார்கள் என்று வேதம் சொல்லுகிறது. வீட்டுக்கு வெளியில் இருப்பவர்களே, உங்கள் கார்களில் இருந்து கொண்டு சிற்றலை வரிசையில் இதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களே, கட்டிடத்தை சுற்றிலும் உள்ளவர்களே, உங்களில் அநேகர் உங்கள் தலைகளை சுவரில் சாய்த்து, “தேவனாகிய கர்த்தாவே, எனக்கு இரங்கும்'' என்று சொல்லுங்கள். நண்பர்களே, மிகவும் உத்தமமாக இருங்கள். எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள். நாம் எங்கிருக்கிறோம்? (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை அநேக முறைகள் தட்டுகிறார் - ஆசி.) ''ஆண்டவரே, நான் வீட்டுக்கு வருகிறேன். வீட்டுக்கு வருகிறேன், வீட்டுக்கு வருகிறேன்...'' 172கர்த்தராகிய இயேசுவே, எனக்குத் தெரிந்தவரையில் இதை நான் செய்துவிட்டேன். எவ்விதம் செய்வது என்று எனக்குத் தெரிந்தவரையில் எல்லாவற்றையும் செய்துவிட்டேன். ஆண்ட வரே, இரக்கத்தின் கதவுகள் இன்னும் திறந்திருக்கும்படியாக அருள்வீராக. நூற்றுக்கணக்கானோர் இந்த வேளையில் உம்மைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டவரே, எல்லா பாவக் கறையையும் போக்கி, இன்று அவர்களை உள்ளே ஏற்றுக் கொள்வீராக. என் முழு இருதயத்தோடும் முறையிடுகிறேன். இது யாரோ ஒருவர் பேசுவது மாத்திரமல்ல, வேத வாக்கியங்களே எங்களை இந்த மணி வேளைக்கு கொண்டு வந்திருக்கிறது. நான் சிறுவனாக இருந்த போது கண்ட தரிசனத்தில், அந்த ஜனங்களை அந்நிலையில் நான் கண்டபோது, இரக்கம் பூமியிலிருந்து எடுபட்டு நரகமே இங்குள்ளது என்று நினைக்கிறேன். ஆண்டவரே, ஜனங்கள் இந்த பயங்கரமான நிலையில் இருக்கின்றனர். சர்வ வல்லமையுள்ள தேவனே, தெரிந்து கொள்ளப்பட்ட இந்த சபையின் மீது உமது ஆசீர்வாதங்களை ஊற்ற வேண்டுமாய் ஜெபிக்கிறேன். அவர்கள் லோத்துக்கு இருந்ததைப் போலவும் நோவாவுக்கு இருந்ததைப் போலவும், இயேசுவுக்கு இருந்ததைப் போலவும், நித்தியமாக இழக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு சாட்சியின் ஊழியத்தை பெற்றுக் கொண்டும், அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் முத்திரிக்கப்பட்டு, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை சாட்சியாக அறிவிக்க அருள்புரியும். ஆண்டவரே, அதை அருள்வீராக. எங்கள் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வீராக. இயேசுவின் நாமத்தில் கெஞ்சிக் கேட்கிறோம். 173நீங்கள் விரும்பும் விதத்தில் இப்பொழுது ஜெபியுங்கள். அவசரப்படாதீர்கள் அவசரப்படாதீர்கள்! (சகோ. பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசி) ஒருக்கால் உங்களுடைய பெயர் புத்தகத்தில் கடைசியாக இருக்குமானால்? “...நான் வீட்டுக்கு வருகிறேன், வீட்டுக்கு வருகிறேன், வீட்டுக்கு வருகிறேன்...'' சகோ நெவில், நீங்கள் அங்கே சென்று அவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் ஜெபிக்கிறதான வேளையில் பாஸ்டர் அவர்கள் உங்களோடு சேர்ந்து ஜெபிக்க போகிறார். நான் தொடர்ந்து பாடட்டும். உமது அன்பின் கரங்கள் பரந்து விரிந்து இருக்கிறது தேவரீர், நான் வீட்டிற்கு வருகிறேன் இதோ வீட்டிற்கு வருகிறேன், நான் வருகிறேன், இனி நான் சுற்றித் திரிய வேண்டியதில்லை; (ஆம் ஆண்டவரே.) உமது அன்பின் கரங்கள் பரந்து விரிந்து இருக்கிறது தேவரீர், நான் வீட்டிற்கு வருகிறேன் இதோ வீட்டிற்கு வருகிறேன், நான் வருகிறேன், இனி நான் சுற்றித் திரிய வேண்டியதில்லை; (ஆம் ஆண்டவரே) உமது அன்பின் கரங்கள் பரந்து விரிந்து இருக்கிறது தேவரீர், நான் வீட்டிற்கு வருகிறேன் (சகோ. பிரன்ஹாமும் சபையாரும் இந்த பாடலை பாடிக் கொண்டிருக்கும் வேளையில் சகோ. நெவில் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். “சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள் பரலோக பிதாவே, உமக்கு முன்பாக எங்களுடைய பாதையை நாங்கள் ஆராய்ந்து பார்க்கும்படி நீர் இன்று எங்களுக்கு கொடுத்த இந்நேரத்திற்காக மிகவும் சந்தோஷமடைகிறோம். எங்கள் தேவனே, இதோ எங்களுடைய உள்ளத்தின் ஆழத்திலிருந்து இன்றைக்கு உம்மை நோக்கி மண்றாடுகிறோம் ஆண்டவரே, எங்களுக்காக மாத்திரமல்ல ஒருவருக்காக ஒருவர் கேட்கிறோம். தேவரீர், இந்த மணி வேளையிலே நீர் உம்முடைய இரக்கத்தை கொஞ்சம் விரிவாக்கியிருப்பீரானால், பிதாவே, இதுவே, மக்கள் தாமே தங்களுடைய பெருமையையும், ஆடம்பரங்களையும் எல்லாவற்றையும் விட்டொழுகிறதான நாளாக இந்நாள் இருப்பதாக. கர்த்தராகிய இயேசுவே, இதோ இன்று இங்கே முழங்காலில் இருக்கிறவர்களும் மற்றும் இந்த கட்டிடம் முழுவதும் தங்கள் தலையை தாழ்த்தி இருக்கிறவர்களுக்கு உதவி செய்யும்படி கேட்கிறோம். ஓ, தேவரீர், இந்த காலை வேளையிலே பரத்திலிருந்து அந்த சத்தம் எங்களோடு பேசட்டும். ஒரு உறுதியை எங்களுக்கு தாரும் ஆன்டவரே. ஓ, தேவரீர், இந்நாளிலே, இங்கு மரித்துக் கொண்டிருக்கிற புருஷனும் ஸ்திரீயும், இயேசுவே, பரத்திலிருந்து இறங்கி வருகிற சாட்சியினாலே இக்காலை வேளையிலே ஆறுதல் அடைவார்களாக. இயேசு கிறுஸ்துவின் நாமத்தில் இவைகளை அருளும்படி கெஞ்சி மன்றாடுகிறோம். தேவரீர், உம்முடைய இரத்தத்தினால் உன்டாகும் இரக்கம் இன்னுமாய் நீடித்திருக்குமானால், இன்றைக்கு வருகிறவர்களின் அடிபடையின் பேரிலேயே ஒவ்வொருவர் மேலாக வரட்டும். அவிதமாகவே இருக்கட்டும்) சகோ. நெவில் தொடர்ந்து ஜெபிக்கிறார். “அது மாத்திரம் அல்ல, தேவரீர், நீரே சர்வ வல்லவர் என்று ஒவ்வொருவரும் திருப்தியோடு கடந்து போவார்களாக. ஓ, இதுவே உம்முடைய இரக்கத்தின் நீடிப்பாய் இருக்கும் பட்சத்தில், ஒவ்வொருவருக்கும் தனிபட்ட விதானத்திலே அப்படியாய் நடக்கட்டும்”) எங்களுக்கு அருளும் ஆன்டவரே. [பிதாவே அது இப்பொழுதே நடப்பதாக. மேலும், எல்லா புத்திக்கும் மேலான சமாதானம் காத்துக் கொண்டிருக்கிற இருதயத்தின் மேல் மறுபடியும் வருவதாக] ஆம், ஆண்டவரே [இதுவே அந்த மணி வேளையாய் இருக்கட்டும்] ஆம். [நீர் பரத்திலிருந்து எங்களுடைய ஜெபத்தை கேட்டீர் என்று விசுவாசிக்கிறோம்] தேவனே, அருவீராக. [எங்களுக்காக பண்டக சாலையிலே என்ன இருக்கிறதோ, அது தீர்ந்து போகும்போது, தேவரீர், அப்பொழுது முடிவு என்ன என்று நாங்கள் அறிந்துக் கொள்வோம்“] ஆம் ஆண்டவரே. [அப்படி இல்லை என்றால், அந்த சாட்சி வரட்டும்] ஆம், ஆண்டவரே. [இதோ இங்கே வந்தவர்கள் இந்நாளில் சமாதானத்தை கண்டறிவார்களாக”] தேவரீர், அருவீராக. [இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவைகளை கேட்கிறேன். ஆமென்] 174ஆண்டவரே, நீர் பெக்கியையும், சாராளையும், ஜோசப்பையும் இரட்சிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறேன். அவர்களையும் கூட, ஆண்டவரே, என் பிள்ளைகளுக்கு இது நேரிட வேண்டாம், கர்த்தாவே. என் சகோதரர்களுக்கும், என் நண்பர்களுக்கும் இது நேரிட வேண்டாம். ஆண்டவரே, இதை அருள்வீராக. எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரியாது, ஆனால் கர்த்தாவே, ஏதோ ஒன்றை நாங்கள் காண்கிறோம். எங்களுக்கு முன்னால் இப்பொழுது இருப்பது, எங்களை அசைக்கக் கூடிய ஒரு அடையாளமா?ஆண்டவரே, இதை அருள்வீராக. சீக்கிரமாக எங்கள் அனைவரையும் உம்மண்டையில் இழுத்துக் கொள்ளும், கர்த்தாவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம். எங்களுக்கு நீர் தேவை. பிதாவே, அப்படியே ஆகக்கடவது. பரிசுத்த ஆவியானவர் தாமே இப்பொழுது நமது இருதயங்களில் ஆறுதலைத் தருவாராக. இந்த மணி வேளையில் நாங்கள் உமக்கு சாட்சிகளாக இருக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். ஏனெனில் இது நடந்தே ஆக வேண்டுமென்று எங்களுக்குத் தெரியும். இது காலங்கள் தோறும் முன்னுரைக்கப்பட்டு வந்துள்ளது. கடைசி காலத்திலுள்ள நாங்கள் இந்த அடையாளங்கள் தோன்றுவதைக் காணும்போது, அதை சந்தித்தே ஆகவேண்டும். இந்தக் காரியம் சம்பவிக்குமென்று எங்களுக்குத் தெரியும். இது அநேக ஆண்டுகளாக எங்களுக்கு அறிவிக்கப்பட்டு வந்துள்ளது. இப்பொழுது அது எங்கள் வாசற்படியில் இருப்பதை நாங்கள் காண்கிறோம். மகத்தான தேவனின் கோபாக்கினை, தெருக்களின் வழியாகச் சென்று, கதவுகளின் மேல் இரத்தம் காணப்படாத விருத்தசேதன மற்றவர்களை பொறுக்கியெடுத்து, சங்காரத்தூதன் அவர்களை சந்திக்கும்படி செய்தது. அவர்கள் தங்கள் விருப்பப்படி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே மரித்தவர்களாயிருக்கின்றனர்; இரக்கம் பெறாதவர்களாய், தேவனற்றவர்களாய், ஒருபோதும் இரட்சிக்கப்பட முடியாதவர்கள். 175தேவனே, இரட்சிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் உமக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! கடைசி தூதன் இந்த தேசத்தின் வழியாக கடந்து வந்து, இரத்தத்தின் கீழ் இல்லாதவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், நாங்கள் உள்ளே இருப்பது எங்கள் இருதயங்களுக்கு எவ்வளவு ஆசீர்வாதமாக உள்ளது! அப்படிப்பட்டவர்கள் இரக்கம் பெறாமலே மரித்தனர். அது மோசேயின் கடைசி இழுப்பு. முதலாம் இழுப்பு, அவன் வாலிபனாக இஸ்ரவேல் ஜனங்களுடன் பேசுகின்றான். இரண்டாவது, அவர்களை விடுவிக்க அங்கு சென்றான். மூன்றாவது கடைசி செய்தி... அற்புதங்கள் செய்யப்பட்டுவிட்டன. மோசே மீட்கப்பட்டவர்களுடன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை நோக்கி சென்றான். ஓ, தேவனே, இரக்கமாயிரும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். 176இதை கேட்க விரும்புகிறேன்; ஜெபித்துக் கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு இரக்கம் உண்டு என்று உணருபவர்களே, தேவன்... தேவனுடைய ராஜ்யத்தில் இருப்பதாக உணருபவர்கள் எப்படியோ நங்கூரமிடப்பட்டதாக உணருபவர்கள், நீங்கள் கிறிஸ்தவர்களென்றும் மறுபடியும் பிறந்தவர்களென்றும் கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கும் விசுவாசத்தைப் பெற்றவர்கள், எவ்வித சந்தேகமுமின்றி நீங்கள் கிறிஸ்தவர்களென்று உறுதியாய் அறிந்துள்ளவர்கள் அனைவரும் எழுந்து நிற்க விரும்புகிறேன் - அப்படி நம்புகிறவர்கள், உங்களுக்கு இப்பொழுது கிருபை அளிக்கப்பட்டுள்ளது என்றும், நீங்கள் கிறிஸ்தவர்கள் என்றும், உங்கள் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டுள்ளது என்றும், உங்கள் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்று விசுவாசிப்பவர்கள் அனைவரும். 177ஜனங்களாகிய உங்களிடம் இதை எடுத்துக் கூறுவது மிகவும் கடினமான காரியம். எல்லாவிடங்களிலிருந்தும் ஜனங்கள் எழுந்து நிற்பதைக் காண்பதற்கு நான் தேவனுக்கு மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நீங்கள்... இந்தக் காரியம் உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்றாகிலும் ஒருநாள் அது உண்மையாக இருந்தே ஆகவேண்டும். அதற்கு வந்தே ஆகவேண்டும், ஒருக்கால் அது இப்பொழுதாக இருக்கலாம். உலகமானது எல்லா விதத்திலும் தன் சொந்த போக்கிலேயே சென்று கொண்டிருக்கும். ஜனங்கள் இன்னும் படத்துக்கு வந்து கொண்டிருப்பார்கள், இன்னும் கதறி அழுவார்கள். ஆனால் அதனால் எவ்வித பிரயோஜனமும் இராது. அது ஏற்கனவே போய்விட்டிருக்கும், அது முடிந்துவிட்டிருக்கும். இரக்கம் இருக்கவே இருக்காது. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ''பரிசுத்த ஸ்தலம் புகையினால் நிறைந்திருக்கும்'', ''அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்''. அங்கே இரக்கமேயில்லை. ஆட்டுக்குட்டியானவர் புத்தகத்தை கையில் வாங்கும் போது, அவ்வளவுதான். அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். அது இப்பொழுதே இருக்கக்கூடும் என்று அநேகமாக காணப்படுவதுபோல் உள்ளது. ஒருக்கால் நமக்கு இன்னுமொரு நாள் அளிக்கப்படலாம், ஒருக்கால் அந்த நாள் இன்றாக இருக்கலாம். ஒருக்கால் நாளை கடைசி நாளாக... ஒருக்கால் இன்றிரவு கடைசி இரவாக இருக்கக்கூடும். ஒருக்கால் கடைசி ஆண்டாக இருக்கலாம். எனக்குத் தெரியாது, நண்பர்களே, எனக்குத் தெரியாதென்று உங்களிடம் கூறுகிறேன். அது ஒருபோதும் அறிவிக்கப்படாது. 178ஆனால் தேவன் ஜீவபுத்தகத்தில் பெயரெழுதப்பட்டுள்ள கடைசி நபரை மீட்டுக் கொள்ளும் போது, அதோடு முடிந்துவிடும். பாருங்கள். அதன்பின்பு எப்படியாயினும் வேறு யாரும் இருக்கமுடியாது. வேறு யாருமே இருக்கமுடியாது. அவ்வளவுதான். அது முடிந்துவிட்டது. அது உண்மையென்று எத்தனை பேருக்குத் தெரியும்? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி.) அது உண்மை. நாங்கள் உணருகிறோம்... இத்தனை ஆண்டு காலமாக நான் பிரசங்கித்து, எச்சரித்து வந்த இந்த சபையோருக்கு இப்படிப்பட்ட ஒரு செய்தியை திறமையற்ற விதத்தில் (Amateur form) நான் அளித்ததை காணும் போது - நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று இதை கூறுகிறேன் - திறமையற்ற விதம். இன்னும் சில காரியங்களை நான் உங்களிடம் கூறியிருந்தால், அது உங்களை குலுக்கி பயப்படுத்தியிருக்கும். ஆனால் அவைகளை கூறாமல் விட்டுவிட்டேன். அவைகளைக் கூற வேண்டாமென்று எனக்குத் தோன்றினது; ஏனெனில் எனக்கு நிச்சயமாகத் தெரியாது. நான் எங்கே நடக்கிறேன் என்று நிச்சயமாகத் தெரியாவிட்டால், நான் மெதுவாகவே காலடி வைத்து நடப்பேன் - ஆனாலும் நான் இதை உங்களிடம் கூறுகிறேன். 179கவனியுங்கள், நீங்கள் சந்தோஷமாயிருக்கிறீர்கள் அல்லவா? உங்கள் வாழ்க்கையில் இதைக் காட்டிலும் மேலான காரியம் ஒன்றை நீங்கள் செய்துள்ளதாக நினைத்துப் பார்க்க முடியுமா? ஒருக்கால் இப்பொழுது அது முடிந்திருந்தால்? எல்லாமே செய்து முடிந்துவிட்டிருந்தால்? “ஓ, சகோ. பிரன்ஹாம் ஒருக் கால்...'' என்று நீங்கள் சொல்லலாம். ஆம், எனக்குத் தெரியும். அவர்கள் தங்கள் போக்கில் சென்று கொண்டேயிருக்கக் கூடும். ஒவ்வொரு காலத்திலும் அவர்கள் அப்படித்தான் செய்தனர். அதை உங்களுக்கு நான் விளக்கி, வேதத்திலிருந்தும் நிரூபித்தேன். உலகம் தன் போக்கில் சென்று கொண்டேயிருந்தது. ஆனால் அது முடிவடைந்திருந்தது. மூடத்தனமான பிரசங்கம் இழக்கப்பட்டவர்களை இரட்சிக்கிறது. அது மனிதனுக்கு மூடத்தனமாகத் தென்படுகிறது. ஆனால் அது தேவனுடைய ஞானம். தேவன் ஆவியாயிருக்கிறார். அவர் ஆவிக்குரிய வழிகளில் கிரியை செய்து, தமது அற்புதங்களை நடப்பிக்கிறார் - அற்புதமான வழிகள். ஆனால் நாமோ மானிடர்; நாம் முடிவுள்ளவர்கள். நமக்குத் தெரியாது. நம்மால் பார்க்க முடிந்தவைகளை நாம் பார்க்கிறோம். ஆனால் நமக்குள் இருக்கும் ஏதோ ஒன்று... 180இந்த அறையை விட்டு நீங்கள் வெளியே செல்லும்போது, நீங்கள் பகல் வெளிச்சத்தை உங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் கண்டிராமல் இருந்தால், நீங்கள் இந்த அறையிலிருந்து பகல் வெளிச்சத்திற்குள் பிரவேசித்தீர்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள். அது உஷ்ணமாயுள்ளது. அந்த உஷ்ணத்தை உங்களால் உணர முடிகின்றது. அதை உணர்ந்து, உங்கள் உடலில் உணர்ச்சியே இல்லாமலிருந்தால், அல்லது உங்களுக்கு கண் பார்வையே இல்லாமலிருந்தால் பசுமையான மரங்களை, இயற்கையை காண உங்களுக்கு கண் பார்வை இராமலிருந்தால், ஒருவருக்கும் கண் பார்வை இல்லையென்றால், நீங்கள் ஏதோ ஒன்றின் பிரசன்னத்தில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்கள் உணர்ச்சி அதை உங்களுக்கு தெரியப்படுத்திவிடும். உங்களுக்குத் தெரியும்... “இது சூரியன், இது பிரதிபலிக்கிறது. இது பொருட்களைப் புலப்படுத்துகின்றது என்று நான் உங்களிடம் கூறினால், அது அங்குள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். ஏனெனில் உங்கள் உணர்ச்சியினால் அதை உங்களால் உணர முடிகிறது. அது சரியா”? (சபையார் ''ஆமென்“ என்கின்றனர் - ஆசி.) 181அவ்வாறே கிறிஸ்து இங்கிருக்கிறார் என்பதை நாம் அறிகிறோம். ஒருக்கால் உங்கள் கண்களால் அவரைக் காணாமல் இருக்கலாம். ஆனால் தரிசனத்தின் மூலமாக அவர் இங்கிருக்கிறார் என்பதை உங்களுக்கு அறிவிக்கிறேன். அதை நாம் உணருகிறோம். நமது புலன்கள் அறிவிக்காத ஏதோ ஒன்று இங்குள்ளது என்று நாம் அறிகிறோம். கிறிஸ்து இங்கிருக்கிறார் என்று ஆவியானவர் தாமே அறிவிக்கிறார். அவர் நம்மை மீட்டுக் கொண்டார் என்று உணருகிறேன். நமது பெயர்கள் அவருடைய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன என்று உணருகிறேன். நாம் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினால் மீட்கப்பட்டிருக்கிறோம் என்று விசுவாசிக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன். நீங்களும் ஒருவரையொருவர் நேசிக்கிறீர்கள் என்றறிவேன். ''ஓ, நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும்“ கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் உன்னதமானவருடையது போன்றே இருக்கும்'' நாம் ஒருவருக்கொருவர் அப்படிப்பட்ட உணர்ச்சியைத்தான் பெற்றிருக்க வேண்டும்; நாம் பெற்றிருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணர்ச்சியைத்தான் நாம் ஒருவருக்கொருவர் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் நாம் ஒருவரிலொருவர் அன்பு கூரும்போது, தேவனிடத்திலேயே அன்பு கூருகிறோம். கண்ட சகோதரனிடத்தில் நீ அன்பு கூராமல், காணாத தேவனிடத்தில் நீ அன்பு கூருவதாக எப்படி சொல்லிக் கொள்ள முடியும்? நாம் ஒருவரிலொருவர் அன்பு கூர வேண்டும். தமது சத்துருக்கள் சிநேகிதர்களாக வேண்டுமென்று அவர்களுக்காக தமது ஜீவனைக் கொடுத்த அன்பைக் காட்டிலும் மேலான அன்பு எந்த மனிதனிடத்திலுமில்லை. 182ஓ, உங்களுக்கு, “நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும்'' என்னும் பாடல் தெரியுமா? அது அற்புதமானது அல்லவா? நமது இருதயங்களை அன்பினால்... சகோதரியே, அந்த பாடலுக்கு எங்களுக்கு சுருதி கொடுப்பீர்களா? அவர்கள் ஒரு நிமிடம் வாசிக்கட்டும்... அது முடிந்திருந்தால்?இப்பொழுது வந்துள்ள மூன்றாம் இழுப்பு, இழக்கப்பட்டவர்களுக்கு பிரசங்கிக்கப்பட வேண்டுமென்றால்? எல்லா முன்னடையாளங்களும் இப்பொழுது வெளிப்படையானால்? நாம் உள்ளே இருக்கிறோம்! நாம் உள்ளே இருக்கிறோம்! அது மிகவும் அற்புதமாயிருக்கும் அல்லவா? என்னே ஒரு ஐக்கியம்! ஓ, நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் (அதை செய்வது இது தான்) கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம் உன்னதமானவருடையது போன்றே இருக்கும். 183அது என்ன? ஒரே சிந்தையுள்ளவர்களின் ஐக்கியம். உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. பாருங்கள், நாம் தேவனை, நாம் சொல்லும் எல்லாவற்றையும் செய்யும் எடுபிடி வேலைக்காரனாக செய்து விடுகிறோம் “தேவனே, இதை செய்யும், அதை செய்யும்,'' இயேசு, ''உம்முடைய இராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுகிறது போல், பூமியிலேயும் செய்யப்படுவதாக என்று ஜெபம் செய்யுங்கள்“ என்றார். அப்படியானால் பரலோகம் நம்மிடம் கீழே கொண்டு வரப்பட்டுள்ளது. நாம் பரலோகத்துக்கு மேலே கொண்டு செல்லப்பட்டுள்ளோம். நாம் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுடன் கூட உன்னதங்களிலே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அந்த செய்தி உண்மையென்று நாம் விசுவாசிக்கிறோம். அதாவது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து நம்மை மீட்டுக் கொண்டார் என்பது. இப்பொழுது நாம் கண்களை மூடி, கைகளையுயர்த்தி பாடுவோம். ''நமது இருதயங்களை கிறிஸ்தவ அன்பினால் பிணைக்கும் கட்டு ஆசீர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தையுள்ளவர்களின் இருதயம் உன்னதமானவருடையது போன்றே இருக்கும்.'' 184இப்பொழுது யாரும் சிரிக்காதீர்கள். இது சிரிக்கும் நேரமல்ல. இந்த பாடல் வாசிக்கப்படும் போது, ஆழமான உத்தமத்துடன் உங்கள் பக்கத்திலுள்ள ஒருவருடன் கை குலுக்கி, “கிறிஸ்தவனே, கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக'' என்று சொல்லுங்கள் - உத்தமமாக. சகோ. நெவில், கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. (சகோ. பிரன்ஹாமே, உங்களையும் ஆசீர்வதிப்பாராக என்று சகோ. நெவில் கூறுகிறார் - ஆசி.) ஐம்பத்தொன்பது வயது (”அது சரி“ ) இப்பொழுது அவரிடம் நமது கரங்களை உயர்த்துவோம். ''நாம் பிரிந்து செல்லும்போது அது நமக்கு வேதனையளிக்கிறது ஆயினும் நாம் இருதயத்தில் இன்னமும் இணைக்கப்பட்டு மீண்டும் சந்திப்போமென நம்புகிறோம்'' 185இப்பொழுது நாம் எல்லோரும் ஒருமித்து தலைவணங்குவோம் - எதிர்காலத்தில் என்ன சம்பவிக்கும் என்று அறியாதவர்களாய் அது முடிந்துவிட்டதோ என்று அறியாதவர்களாய், எனக்குத் தெரியாது. என்னால் சொல்ல முடியாது. என்னால் சொல்ல முடியாது. எனக்குத் தெரியாது. ஆனால் இன்று காலை நாம் வெளிப்படுத்தின உண்மைகளை நோக்கினவர்களாய், கர்த்தர் நமக்குக் கற்றுக் கொடுத்த ஜெபத்தை சொல்வோம். இப்படியிருந்தாலும்: உம்முடைய ராஜ்யம் வருவதாக, உம்முடைய சித்தம் செய்யப்படுவதாக. நாம் ஒன்று சேர்ந்து அந்த ஜெபத்தை சொல்வோம். (சகோ. பிரன்ஹாம் மற்றும் சபையார் மத்தேயு 6: 9-13-லிருந்து பின் வரும் ஜெபத்தை சேர்ந்து கூறுகின்றனர் - ஆசி.) ''பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக உம்முடைய ராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும் எங்களுக்கு விரோதமாய் குற்றஞ் செய்கிறவர்களுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னியும் எங்களை சோதனைக்குட் பிரவேசிக்கப் பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும் ராஜ்யமும் வல்லமையும் மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே. ஆமென். 186இப்பொழுது நமது இருதயங்களைத் தாழ்த்தி - அவர்கள் ஒரு பாடலைப் பாடி புறப்பட்டு சென்றார்கள் என்று வேதம் கூறுகின்றது. அவர்கள் அப்படி வேதத்தில் செய்தபோது, அவர்கள் கர்த்தருடைய இரண்டாம் இழுப்பின் ஊழியத்தை சிலுவையிலறைந்த காரணத்தால் என்றும், மூன்றாம் இழுப்பு பிரவேசிக்க ஆயத்தமாயிருந்தது என்றும் நினைவில் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு சில மணி நேரங்கள் கழித்து அவர் பாதாளத்திற்கு சென்று, இரக்கத்தைப் புறக்கணித்த இழக்கப்பட்டவர்களுக்கு பிரசங்கம் பண்ணினார். ''என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது'' என்ற பாடல் ஸ்ருதி தாருங்கள். ''என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது கல்வாரி ஆட்டுக்குட்டியே திவ்விய இரட்சகரே! இப்பொழுது நான் ஜெபிக்கையில் செவிகொடும் என் பாவங்கள் அனைத்தும் தொலைத்திடும் ஓ, இந்நாளிலிருந்து நான் முழுவதும் உம்முடையவனாகட்டும். வாழ்க்கையின் இருளில் நான் நடந்து செல்லும்போது என்னைச் சுற்றிலும் துக்கம் சூழும்போது என் வழிகாட்டியாயிரும் இருள் வெளிச்சமாக கட்டளையிடும் வருத்தம் கண்ணீர் யாவையும் துடைத்தருளும் ஓ,இந்நாளிலிருந்து நான் முழுவதும் உம்முடையவனாகட்டும். 187கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, அவருடைய சூரியனையும் கிருபையையும் உங்கள் மேல் பிரகாசிக்கச் செய்வாராக. கர்த்தர் உங்களுக்கு நித்திய ஜீவனை அருளிச் செய்து, இவ்வுலகிலும், இனி வரப்போகும் உலகிலும் உங்களுடன் இருப்பாராக. நித்திய ஜீவனில், நீங்கள் அவருக்கு, வரப்போகும் முடிவில்லாத யுகங்கள் பூராவும் சேவை செய்வீர்களாக. இதுவே அந்த நேரமாயிருந்து, நாம் அந்த இடத்திற்கு வந்திருப்போமானால், நான் பிரசங்கித்ததைக் குறித்து வெட்கப்படேன். ஒவ்வொரு போதகரும் அவருடைய சபையோருடன் நின்று நியாயந்தீர்க்கப்பட வேண்டுமானால் (நான் தரிசனத்தில் கண்டது போல), நான் பிரசங்கித்த சுவிசேஷத்தைக் குறித்து நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஏனெனில் பவுலும் மற்றவர்களும் அதே சுவிசேஷத்தையே பிரசங்கித்தனர். உங்களுக்காக நான் மகிழ்ச்சியுறுகிறேன். நீங்கள் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொண்டிருப்பதற்காக நான் மகிழ்ச்சியுறுகிறேன். அவரில் அன்பு கூர்ந்து ஜெபியுங்கள். கர்த்தருக்கு சித்தமானால் இன்று பிற்பகல் 7.00க்கு சபையில் உங்களை சந்திக்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் கலைந்து செல்லலாம்.